Categories
கருத்து தமிழ்

சிசேரியன் எனும் அறுவை அரக்கன்

சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெறுவதில் தென் மாநிலங்களான, தெலுங்கானா, தமிழகம் மற்றும் ஆந்திரா முதலிடம். முன்பெல்லாம் பிரசவம் என்றால் ஒரு நாலு பெண்கள் வீடுகளில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை சுற்றி மறைத்து, சுடுதண்ணீர் எடுத்து, ஏதோ செய்வார்கள், குழந்தை பிறக்கும், தொப்புள் கொடி அறுக்கப்பட்டு , குழந்தையை சுத்தம் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். காலப்போக்கில் மருத்துவ வசதிகள் அதிகரித்த பிறகு, பிரசவம் என்பது வீடுகளில் செய்யப்படும் விஷயமல்ல.அதில் […]

Categories
தமிழ் நினைவுகள்

புளிய மர நிழற்சாலை

இருபுறமும் புளிய மரம் நிழல் தந்த மதுரை ரோடு. ஆம். மதுரை வரை மட்டுமே எங்கள் உலகம். அந்த ரோடும், மதுரையோடு முடிந்து விடும் என்று எண்ணிய சிறு வயது. மெட்ராஸ் என்ற ஊர் தெரிந்தாலும். அந்த ஊருக்கு, நம்ம ஊரில் இருந்து ரோடு கிடையாது என்ற எண்ணம். மதுரை ரோடு என்றாலே பயம்.வண்டியெல்லாம் வேகமா வரும்.நிறைய பேரு ஆக்ஸிடன்ட்ல இறந்திருக்காங்க.புளிய மரத்துல பேயா இருப்பாங்கனு. ஆனா, மதுரை ரோடு தரும் பரவசம், வேற எங்கும் கிடைப்பதில்லை. […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

கோவில் யானையின் கோவம் – யார் தவறு?

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி, பாகன்கள் இருவர் பலியான சம்பவம் பரவலாகப் பேசப்படுகிறது. இது சம்பந்தமாக வலைதளத்தில் சில கருத்துகள் பரவி வருகிறது. அதாவது மிருக குணம் கொண்ட காட்டு மிருகமான யானை வளர்க்கத் தகுந்ததல்ல.அதை அதன் போக்கில் விடுவதே சரி. இப்படி கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு வந்து வேடிக்கை காட்டி, சம்பாதிப்பது தவறு என்ற ரீதியில் பலரும் பேசி வருகின்றனர். இந்த விஷயத்தில் நாமும் அதே பக்கத்தில் தான் நிற்கிறோம். பல நேரங்களில் பக்தி என்பது […]

Categories
சினிமா தமிழ் தற்கால நிகழ்வுகள்

தங்கலான்- ஆடை வடிவமைப்பாளர் பற்றிய சிறுகுறிப்பு

சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஏகாம்பரம் அவர்களை, ஒரு வார இதழும், ஒரு சமூக வலைத்தளப்பக்கமும் பேட்டி எடுத்து பாராட்டி இருந்தார்கள். நாமும் ஆச்சரியத்தில் அதைக் காணலானோம் ஏன் எதற்காக என்று. அதற்கான விளக்கங்களும், மேலும் சில தகவல்களும். தங்கலான் படத்தைக் குறிப்பிடக் காரணம் அதிலுள்ள தனித்தன்மையும் உழைப்பும் தான். இந்தப்படத்தில் எல்லோரும் கோவணம் தானே கட்டியிருக்கிறார்கள், இதில் என்ன வடிவமைப்பு இருக்கிறது? இரண்டு முழம் கச்சைத் துணியை எடுத்து காலை அகற்றி குறுக்கே […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

பறிபோகும் பாரியின் பறம்பு மலை

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி, அதாவது முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி ஆண்ட பறம்பு மலை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு. பறம்பு மலை என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட இந்த மலை பிறகு திருநெலக்குன்றம் எனவும், சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும் அழைக்கப்பட்டு இப்போது ப்ரான் மலை என்றும் அறியப்படுகிறது. இது தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து 42 கிமீ தொலைவில் மேற்கிலும், மதுரையிலிருந்து 63 கிமீ தொலைவில் வடக்கிலும் அமைந்துள்ளது. சங்க காலத்தில் […]