பெரும்பாலான திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்றாலும், சினிமாவின் சக்தி என்பது அளப்பரியது. பணக்கார மக்கள் முதல், பாமரன் வரை ஆழமான கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் சக்தி வாய்ந்த ஊடகம் சினிமா தான். அப்படி ஒரு கருத்தியல் ரீதியான படம் தான் இந்த வாரம் வெளியான விடுதலை பகுதி-2. இந்தப்படமும் கிட்டத்தட்ட தீபாவளி வெளியீடான அமரன் படம் போல ஒரு போராட்ட களத்தில் இரு அணிகளுக்கு எதிரான போராட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் படம். ஆனால் […]
Tag: இந்திய வரலாறு
விவேக் விரைவு வண்டி. விவேக் எக்ஸ்பிரஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொடர்வண்டிகள். தொடர் வண்டிகள் என்று குறிப்பிடவும் காரணம் உள்ளது. நமக்குப் பரீட்சையமான, பொதிகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் , வைகை எக்ஸ்பிரஸ், ரிக்போர்ட் எக்ஸ்பிரஸ் போன்ற பெயர்கள் ஒரு குறிப்பிட்ட தொடர்வண்டியை மட்டுமே குறிக்கும்.அந்தப்பெயரில் அந்த ஒரு வண்டியைத்தான் பார்த்திருப்போம். ஆனால் இந்த விவேக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கிட்டதட்ட 4 தொடர்வண்டிகள் உள்ளன. அதாவது நான்கு வேறு வேறு வழித்தடங்களில் பயணிக்கும் வேறு வேறு […]
அஞ்சலையம்மாள். தவெக மாநாட்டுத் திடலில் காமராஜர், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார் போன்ற தலைவர்களோடு கம்பீரமாக நிற்கும் அஞ்சலையம்மாள். இது யார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சில காலத்திற்கு முன்பே பள்ளிப் புத்தகங்களில் இவரைப்பற்றிய குறிப்புகள் பாடமாக இணைக்கப்பட்டது. இன்று நான் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது இந்தக் கேள்வி எழாமல் இல்லை. யார் இந்த அஞ்சலையம்மாள் என்று. இவர் யாரென்று பார்க்கலாமா? முதலில் இவர் பெற்ற பெரும்புகழை ஆராயலாம். சில காலத்திற்கு முன்பு […]
தியாகி இமானுவேல் சேகரனார்.(9/10/1924 – 11/09/1957). இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து, பிறகு தான் பிறந்த சமூகத்தின் நலனுக்காக சமூகப்பணியில் ஈடுபட்டு, இளம் வயதில் உயிர்துறந்த தியாகி. ஆசிரியர் மற்றும் வழக்கறிஞரான இவர் தந்தையிடமே பாடத்தையும் சமுதாய சிந்தனையையும் கற்றவர். சிறுவயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வமிகுந்தவராகத் திகழ்ந்தவர். தனது 18 ஆவது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று மூன்று மாதம் சிறை தண்டனை பெற்றார். தனது 19 ஆவது வயதில் இரட்டைக்குவளை ஒழிப்பு […]
இந்திய சுதந்திரப்போர் வேட்கையை முதலில் தூண்டிய ஒரு வீரனை சற்று நினைவில் கொள்ளலாம். இது வேலூர் சிப்பாய் கலகத்திற்கெல்லாம் முன்னோடியாக 1751 லேயே வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரனின் கதை. இன்றைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் என்ற ஊரை தலையிடமாகக் கொண்ட பாளையத்தின் அரசன் பூலித்தேவனை சற்றே நினைவில் கொள்ளலாம். நெற்கட்டான் செவல் மருவி நெற்கட்டும்செவல் என அர்த்தமே மாறி நிற்கிறது. அதையும் கட்டுரையில் பார்க்கலாம். முதலில் பாளையத்தின் வரலாறு. பூழி நாடு:1378 […]
அடக்குமுறைகளும், அதற்கு எதிரான கிளர்ச்சிகளும் காலம் காலமாக நிகழும் ஒன்றுதான். இதில் முக்கியமாக குறிக்கத்தகுந்த வகையில் நிகழ்ந்த சம்பவம் வேலூர் சிப்பாய் கிளர்ச்சி. 1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற கிளர்ச்சி, பின்நாளில் 1857 ல் நிகழ்ந்த கிளர்ச்சியின் முன்னோடி. ஆங்கிலேய இராணுவத்தில் பணிபுரிந்த இந்திய சிப்பாய்கள், தமது சமயக்குறியீடுகளான விபூதி, நாமம் போன்றவற்றை அணியக்கூடாது எனவும், கிர்தா வை எடுத்து விட வேண்டும் எனவும், இராணுவ அதிகாரி வற்புறுத்திய காரணத்தாலும், […]
1906 ஆம் ஆண்டு, வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய கப்பல் கம்பெனி. தூத்துக்குடி துறைமுகத்திலும் , இந்தியப்பெருங்கடலிலும் கொடிகட்டிப்பறந்த ப்ரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒடுக்க, எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த SSNC. ஆனால் இது காகிதத்தில் கப்பல் செய்யும் சமாச்சாரம் அல்ல.அன்றைய காலகட்டத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பு. 2019 ஆம் ஆண்டில் 2000 கோடி ரூபாய் அளவிற்கான ஒப்பீடு. இதை 40 பேரின் பங்களிப்புடன் செய்து காண்பித்தார் வ.உ.சி.இதில் இன்னொரு முக்கியமான பங்களிப்பு, பாண்டித்துரைத்தேவர் என்பவருடையது. […]
சமீபத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த KGF என்ற படத்தைப்பற்றி அறியாதோர் சிலரே. அந்தப்படத்தின் கதையம்சம் என்பது, ஒரு லாபகரமான தங்கச்சுரங்கத்தைக்கட்டி ஆளும் பலசாலியை வீழ்த்தி அந்த இடத்தைத் தட்டிப்பறிக்க நினைக்கும் சில ஆட்கள், அந்த பலசாலியை வீழ்த்த ஆயுதமாக ஒருவரை நிர்ணயிக்கின்றனர். இறுதியில் அந்த பலசாலி வீழ்த்தப்பட்டார் ஆனால் அந்த ஆயுதமாக வந்த ஆள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிறார். இதே கதை. ஒரு மிகப்பெரிய நாட்டிலும் நிகழ்ந்திருக்கிறது. வேறு எதுவுமில்லை, பாரதம், […]