Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

நடப்பு அதிசயம்- கதவில்லா கிராமம்.

நம்மில் பலர் இதை எங்காவது கேள்விப்பட்டிருக்கலாம் சிலர் அறிந்திருக்கலாம்.ஆனால் தெரியாதவர்களுக்கு இது அதிசயம் தான். தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். சமீபத்தில் தமிழில் வெளியான நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் கூட ஒரு ஒழுக்கமான கிராமத்தைப்பற்றி காட்டியிருப்பார்கள்.ஆனால் அதைவிட ஒழுக்கமான கிராமம் நிஜத்தில் இன்றளவும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நாங்க இருக்கோம் என்கிறார்கள், இந்த சனி சிங்னாப்பூரார்கள். ஆமாம். மகாராஷ்டர மாநிலம், அஹமத் நகர் மாவட்டத்திலுள்ள சனி சிங்னாப்பூர் என்ற கிராமம் தான் அது. […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

அமாவாசை சம்பிரதாயம்- சடங்கா அல்லது வியாபாரமா?

முதலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி என்ற இரு நாட்களும் பூமியின் சுழற்சியால் மாதம் ஒரு முறை வரும் சுழற்சியான நாட்கள் என்பதையும், இந்த இரு நாட்களுக்கும் விசேஷ சக்தி என்பதெல்லாம் இல்லை என்பதையும், ஈர்ப்பு விசையில் உள்ள மாறுதல் காரணமாகவே கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளன என்பதையும் அறிவியல் பூர்வமாக நாம் அறிந்திட வேண்டும். சரி இது அறிவியல்.அதாவது ஒரு இருசக்கர வாகனம், அல்லது ஒரு மகிழுந்து எப்படி இயங்குகிறது என்று கேட்டால், இயந்திரவியல் விளக்கம் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தியா/மூடநம்பிக்கையா? என்னுடையது என்ன?

சில விஷயங்களின் மீதான நம்பிக்கையை கேள்வி கேட்பதே தவறு என்று காலம் காலமாக வழக்கப்படுத்தப்பட்டு விட்டதால் மூடநம்பிக்கை என்ற ஒன்றை இன்றும் கூட அழிக்க முடியாமல் உள்ளது. பக்தி என்பதை இங்கு யாரும் குறை கூறவில்லை. கடவுளின் மீதான நம்பிக்கையும், பயமும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும் என்றால் அதைவிட இந்த உலகத்திற்கு என்ன மகிழ்ச்சி இருந்து விடப்போகிறது? ஆனால் அந்த பக்தியின் பெயரால் நிகழ்த்தப்படும் மூட நம்பிக்கை சம்பிரதாயங்களையும், சடங்குகளையும், பிற மனிதர்களின் மீதான வன்முறைகளையும் சரி […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

திருப்பதி லட்டில் கலப்படமா?- புரட்டாசி புத்தர்கள் அதிர்ச்சி!

புரட்டாசி என்றாலே பல புத்தர்கள் உருவாகும் மாதமாகி விட்டது. சிறு வயதில் எனக்கு விவரம் தெரியவில்லையா அல்லது சமீப காலமாகத்தான் இப்படி மக்கள் அதீத பக்தியில் ஆழ்ந்து விட்டார்களா என்று எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.புரட்டாசி புத்தர்கள் என்று நான் குறிப்பிடுவது புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று விரதம் இருப்பவர்களைத் தான். எனது நினைவின் படி எங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

கல்விக்கூடத்தில் ஆன்மீகம் தவறா?

சமீபத்திய பரபரப்பான செய்தி பற்றிய சிறிய அலசல் தான் இது. அரசுப்பள்ளியில் ஆன்மீகம் பேசிய ஒருவரை பாதியில் அவரது பேச்சை நிறுத்தச் செய்து அவர்மீது சர்ச்சை பேச்சு பேசிய காரணத்திற்காக வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை இரு வேறு அரசியல் குழுக்கள் வரவேற்றும் , எதிர்த்தும் பேசி வருகிறார்கள். அதாவது பள்ளியில் ஆன்மீகம் பேசினால் என்ன தவறு? அவர் மறுபிறவி பற்றி தானே பேசினார், திருக்குறளிலும் மறுபிறவி பற்றி பல கருத்துகள் உள்ளனவே, அப்படியென்றால் திருக்குறளையும் தடை செய்வீர்களா? […]

Categories
ஆன்மீகம் தமிழ்

அறிவோம் ஆன்மீக தகவல் – வைஷ்ணோ தேவி

திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வந்து வழிபடும் தலமான மாதா வைஷ்ணோ தேவியின் தலத்தைப் பற்றி வாசித்து, சிந்தித்து, நன்மை அடையலாம் என்ற நோக்கில் இந்த கட்டுரை. ஆண்டுதோறும் கிட்டதட்ட 8 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவதாக தகவல். மாதா வைஷ்ணோ தேவி கோவில் என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி மலையில் அமைந்துள்ள கோவில். சக்தி வழிபாட்டிற்கு பிரபலமான இத்தலத்தின் தெய்வம் மாதா ராணி அல்லது வைஷ்ணவி தேவி போன்ற பெயர்களால் […]

Categories
ஆன்மீகம் தமிழ்

அறிவோம் ஆன்மீக தகவல் -திருக்குறுங்குடியின் கோவில்கள்

அறிவோம்- ஹரி ஓம்.இந்து மதத்தின் இரு முக்கிய பிரிவுகளான சைவமும், வைணவமும், அதாவது பெருமாள் சன்னதியும், சிவன் சன்னதியும் ஒருசேர இருக்கும் கோவில்கள் அரிது தான். அப்படி ஒரு தலம் தான் திருக்குறுங்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள 1300 ஆண்டுகள் பழமையான அழகிய நம்பிராயர் தலம். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் உள்ளது. திருக்குறுங்குடி என்ற கிராமம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் என்ற ஊருக்கு அருகே, மகேந்திரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

கோடிகளில் புரளும் கோவண ஆண்டி

சினிமா மற்றும் ஆன்மிகம் தான் இன்று கோடிகளில் பணம் கொழிக்கும் தொழில்துறை அல்லாத இரு துறைகள் என்பது மறுக்க முடியாத உண்மை. சினிமா ஆவது பல கோடிகளில் செலவு செய்து பல மனிதர்களின் உழைப்பில் உருவாகி திரையில் ஓடி மக்கள் மனதைக்கவர்ந்தால் தான் வெற்றியும் பணமும். ஆன்மீகம் அப்படி இல்லை. பழனிக்குச் சென்றால் பயனுண்டு, திருப்பதி சென்றால் திருப்பமுண்டு, ஐயப்பனைக்கண்டால் ஆனந்தமுண்டு என்று நம்பி அங்கே சென்று அழுது புரண்டு தங்கள் பிரார்த்தனைகளைக் கொட்டும் எத்தனை பக்தர்களுக்கு […]