Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

வகுப்பறையும், ஆசிரியர்களும்

மாதா, பிதா, குரு, தெய்வம். ஒரு மனிதனுக்கு மாதா, பிதாவை அடுத்து முக்கியமானவர் அவரது குரு. ஒரு குழந்தை வளர்ந்து சமுதாயத்தில் எப்படியான ஆளாக உருவாகிறது என்பது அந்த குழந்தையின் அப்பா, அம்மாவைத் தாண்டி அதன் ஆசிரியர்களின் கைகளிலும் உள்ளது. ஆசிரியர்களால் கண்டிக்கப்படாத மாணவன் பிற்காலத்தில் காவலர்களால் கண்டிக்கப்படுவான் என்ற சொல்லாடல் உண்டு. ஒரு ஆசிரியர் என்பவர் ஒரு குழந்தையின் ஒழுக்கமான வளர்ச்சிக்கு மிக முக்கிய அடித்தளமானவர். குழந்தைகள் தனது மொத்த உழைக்கும் தருணத்தையும், அதாவது பகல் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்

நமது ஊர்களில் ஒரு பிரபலமான சொல்லாடல் உண்டு.வெல்லம் சூப்புரது ஒருத்தன், வெரல சப்புறது ஒருத்தன் னு. இந்த கட்டுரையில் பேசப்போகும் விஷயத்திற்கு இந்த சொல்லாடல் சொல்லித் துவங்குவது என்பது தவறு தான். ஆனால் சமுதாயம் போகும் போக்கில் இப்படி சில விஷயங்களைத் தாறுமாறாக சாடை பேசாமல், சாடாமல் இருக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு செய்தி. ராசிபுரத்தில் ஒரு 9 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனால் தாக்கப்பட்டு இறந்து விட்டான். இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய செய்தி […]

Categories
தற்கால நிகழ்வுகள்

எங்களையும் பாருங்க – தனியார் ஊழியர் நலன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 ஆவது ஊதியக்குழு நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆம். தற்போது 7 ஆவது ஊதியக்குழு நியமித்தபடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு, அடுத்த ஊதியக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழு நியமிக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆக இருப்பதால், 2026 முதல் பண வீக்கத்தின் அடிப்படையில் புதிய ஊதிய விகிதம் முடிவு செய்யப்பட்டு அதன்படி ஊதியம் வழங்கப்படும். இது நல்ல விஷயம் தான். இளம் வயதில் முறையாக சிந்தித்து […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஆசிரியர்களின் அதிகார துஷ்பிரயோகம்

நீ விதைப்பதே விளையும் என்பது மறுக்க இயலாத ஒன்று. நேற்றைய மாணவர்கள் இன்றைய சமுதாயம்.இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம். இப்படி இருக்கும் போது மாணவனாக ஒழுக்கம் கற்றவர்கள், சமுதாயமாகக் கட்டமைக்கப்படும் போது அங்கே லஞ்சமும், ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் ஒழியாமல் தொடர்வது அவலம் தானே? நல்ல ஆசிரியர்களால் ஒழுக்கம் கற்பிக்கப்பட்ட நல்ல மாணவர்கள் எப்படி இந்த முறை கேடுகளை எல்லாம் செய்கிறார்கள்? அதற்கான பதில் தான் இந்த சம்பவம். ஆசிரியர்களின் முறைகேடுகளும், அதிகார துஷ்பிரயோகமும். சமீபத்தில் ஆளுநரிடம் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஆசிரியர் பணி – அவலப்பணி- பகுதி 2

ஆசிரியர் பணியில் எனது தனிப்பட்ட அனுபவம் என்பது கசப்பாக இருந்த விதத்தை பகுதி 1 ல் பேசியிருந்தோம். இந்த பகுதியில் மற்ற சில அவலங்களைப் பற்றி பிரச்சினைகள் பற்றி பேசலாம். பொதுவாக எந்தவொரு வேலைக்கு சேரும் போதும், பட்டதாரிகளின் பட்டம் நிர்வாகத்தால் வாங்கி வைக்கப்படுவதில்லை. ஏன் மாவட்ட ஆட்சியாளராகவே பணியாற்றும் நபரிடமும், நேர்காணல் முடிந்த பிறகு, அவரது பட்டங்களை சோதித்து விட்டு அதைத் திருப்பி அளித்து விடுவார்கள். ஆனால் இந்த தனியார் கல்லூரிகளிலோ, அடமானம் போல நாங்கள் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஆசிரியர் பணி – அவலப்பணி

இன்று ஒரு தலையங்கம் பார்த்தேன். அறிவை வளர்க்கும் ஆசிரியர் பணி என்ற தலைப்பில். அது சரிதான். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்றும் சொல்வடை உண்டு. ஏத்திவிடும் ஏணி, நகர்த்திவிடும் தோனி என்று செப்டம்பர் 5 ஆம் தேதி பெரிய பாராட்டுப் பத்திரமே நடக்கும். இதெல்லாம் சரிதான். ஆனால், உண்மையிலேயே ஆசிரியர்களின் நிலை என்ன? அதை யாரும் அறிந்து கொள்வதுமில்லை, கேள்வி கேட்பதும் இல்லை. நான் சொல்லவருவது தனியார் பள்ளி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் […]