இரவில் தூங்கும் முன் கதை சொல்லி, அறிவுரை சொல்லி, வியாக்கியானங்கள் பேசி தூங்க வைக்கும் தாத்தா பாட்டிகள் இங்கே இப்போது இல்லை. தாத்தாவும் ஃபேஸ்புக்கில் ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார், பாட்டியும் கூட சன் டிவியிலோ, விஜய் டிவியிலோ சீரியல் பார்த்துக்கொண்டிருக்கிறது. பிள்ளைகள் ஆங்ரி பேர்டாகவோ, டெம்பிள் ரன்னராகவோ மாறி ஒரு மாதிரியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கதையை வாய் வழியாகச் சொல்லி செவி வழியாகக் கேட்ட போது குழந்தைகளிடையே இருந்த சிந்திக்கும், உருவகப்படுத்தும், கவனிக்கும் திறமை இப்போது […]
