மிகைப்படுத்தப்பட்ட பக்திப் பரவசத்தால் வந்த விளைவு. சுற்றுச்சூழல் சீரழிவு. நாம் ஏற்கனவே திருச்செந்தூரில் பக்தர்கள் இரவில் தங்கிக் கூத்தடித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதைப் பதிவிட்டிருந்தோம். அதற்குப் பிறகு இப்போது தான் திருச்செந்தூர் பயணத்திற்கான வாய்ப்பு அமைந்தது. நாம் வருந்தியது போலவே கடற்கரையின் மையப்பகுதியில் ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு கழிவுநீர் ஓடி நேரடியாகக் கடலில் கலக்கிறது. அதே தண்ணீரை பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.இது அரசாங்கத்தின் அலட்சியம் என்றாலும், அரசிடம் காரணம் கேட்டால் மிகையான கூட்டத்தின் காரணமாக, சரியாக எதையும் […]
