சமூக நீதியை நிலைநாட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆமாம். ஒரு குறிப்பிட்ட சாதிய பின்புலத்தில் பிறந்து, அந்த சாதிக்கான ஒதுக்கீடுகளைப் பெற்று பொருளாதார ரீதியாகவும், வாழ்க்கைத் தரத்திலும் ஓரளவுக்கு உயர்ந்து விட்ட பல குடும்பங்களை, குழுக்களை க்ரீமி லேயர், அதாவது பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவென கண்டெடுத்து அவர்கள் மீண்டும் அந்த சலுகைகளை உபயோகிக்க முடியாமல் தடுக்கும் ஒரு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இருந்தாலும் இந்தத் திட்டம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவரை […]
