Categories
விளையாட்டு

பார்டர் – கவாஸ்கர் கோப்பைத் தொடர் நினைவுகள் 

கிரிக்கெட் விளையாட்டின் தலைசிறந்த போட்டிகளில் ஒன்றாக பார்டர் கவாஸ்கர் தொடரை சொல்லலாம். குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் உலக கோப்பைக்கு நிகரான மதிப்பு இதற்கு உண்டு. இது ஏன் என்று பெரிய விளக்கம் தேவை இல்லை. கடந்த 30 ஆண்டு காலத்தில் உலக கிரிக்கெட்டின் தலை சிறந்த அணி ஆஸ்திரேலியா. அவர்களை அவர்கள் நாட்டில் வீழ்த்துவது இந்தியாவை இந்தியாவில் வீழ்த்தத்துவது போல பிரம்மப் பிரயத்தனம்.  கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம், பல இந்திய அணிகளின் முயற்சிக்குப் பிறகு 2018இல் […]

Categories
சினிமா தமிழ்

ஆகச்சிறந்த தமிழ் சினிமா – லப்பர் பந்து – விமர்சனம்

சினிமா என்பது பொழுதுபோக்கையும் தாண்டி சில நேரங்களில் நம் மனதில் பெரும் மகிழ்ச்சியையும், ஆழமான கருத்துகளையும் பதிக்கும்.அப்படியொரு மகிழ்ச்சியும், கருத்தும் தந்த மறக்க முடியாத தமிழ் சினிமா பட்டியலில் இணைந்திருக்கிறது போன வாரம் வெளியான லப்பர் பந்து திரைப்படம். போன வாரம் வந்த படங்களில் மட்டுமல்ல, சமீப காலத்தில் வந்த படங்களுடன் ஒப்பிடும் போது மிக மிக சிறப்பான திரைப்படம் என்று போற்றக்கூடியது இந்த லப்பர் பந்து. இந்தப்படத்தின் முன்னோட்டம் பார்த்த போது , சென்னை 28 […]

Categories
சினிமா தமிழ் நினைவுகள்

மில்கா சிங்- பறக்கும் சீக்கியரின் நினைவுகள்

மில்கா சிங். (நவம்பர் 20,1929 – சூன் 18,2021) இந்திய தடகள வீரர். தனது மின்னல் வேக ஓட்டத்திற்காக பறக்கும் சீக்கியர் என்று அழைக்கப்பட்டவர். காமன்வெல்த் போட்டிகளில் தனிநபர் தடகள விளையாட்டில் தங்கம் வென்ற முதல் சுதந்திர இந்தியாவின் வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இவரது இந்த சாதனை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அது போல ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரராக இவர் மட்டுமே திகழ்கிறார். […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஊக்கமது கைவிடேல் – வினேஷ் போகாட்டின் ஒலிம்பிக் பயணம்

ஒரு செயலை செய்யும் போது அதற்கான பலன் கிடைக்காவிட்டால் சோர்வடைந்து அந்த செயலில் இருந்து பின்வாங்குதல் என்பது நம்மில் பலருக்கும் வாடிக்கையான ஒன்று. அப்படியான நமக்கான ஒரு முன்மாதிரி வினேஷ் போகட். இன்று இந்தியர்களின் இதயம் நொறுங்கிப்போக காரணமானவர். ஆனால் அவரும் பிறக்கும் போது நம்மைப்போன்ற ஒரு சாதாரண ஆள்தானே? மல்யுத்தத்தில் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டிக்குத் தகுதியான ஒரே இந்தியப் பெண்மனி என்ற சாதனை புரிந்து, அடுத்த நாளே இறுதிப்போட்டிக்கு தகுதியான ஆள் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் என்ற வரலாறையும் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஒலிம்பிக் விளையாட்டுகள் – பாரிசில் துவக்கம்

உலகில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு தன்னிறைவு அடைதல், அல்லது உச்சநிலை என்பது இருக்கும். ஆங்கிலத்தில் destination என்று எளிமையாக சொல்லலாம். அப்படி ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்குமான destination ஒலிம்பிக்ஸ் என்பதில் மாற்றுக்கருத்தல்ல. ஒலிம்பிக்ஸ் என்பது கிரிக்கெட் மாதிரியான பைத்தியக்கார ரசிகர்களை கொண்டிருக்கவில்லை. விளம்பரத்தில் பணம் சம்பாதிப்பது மட்டும் நோக்கமாக தெரியவில்லை. அதற்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. பண்டைய கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில், சேயுசு கோவிலடியில் சமய விழாவாகத் துவங்கிய இந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று […]