பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 4, பாகம் 5, பாகம் -6 ஆட்டோக்காரருக்கு ஒன்றும் விளங்கவில்லை. சரியென்று வேகமாக சென்று கொண்டிருக்கையில் இன்னொரு நண்பரை சந்தித்தார். அவரை வழிமறித்து, விஷயத்தைக்கூறி, அவரிடம் அந்த பிரசவ வலி வந்த பெண்ணுக்கு உதவி செய்யுமாறு கூறிவிட்டு, விர்ரென்று மல்லிகாவை காணச் சென்றார். மல்லிகாவிடம், கந்தசாமியின் ரத்த பிரிவு என்ன என்று கேள்வியை கேட்க, மல்லிகாவுக்கோ நெற்றியலிருந்து வியர்வை ஒழுக துவங்கியது. “என்னாச்சு ணே, என்னாச்சு?” என்று […]
Category: தொடர்கதை
ஆயிரத்தில் ஒருவன் – பாகம் -6
பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 4, பாகம் 5 ஆமாம். மனிதநேயம் இங்கே தெரிந்தவர், தெரியாதவர் என்று பார்த்து தானே வருகிறது. ஆட்டோக்காரருக்கு அங்கே அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது கந்தசாமி என்பது தெரியாமல் போனதே? சிறிது நேரத்தில், ஆட்டோ சோழிங்கநல்லூரை அடைந்தது. ஆட்டோக்காரர், பைசாவை வாங்கிவிட்டு காலையில் பசியாற ஏதாவது உணவகம் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார். அருகிலிருந்த ஒரு மரத்தடியில், பாட்டி ஒருவர் சிறிய கடை ஒன்றை வைத்திருந்ததை கவனித்த ஆட்டோக்காரர், அங்கே […]
ஆயிரத்தில் ஒருவன்- பாகம் 5
பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 4 மல்லிகா படபடக்க ஆட்டோக்கார அண்ணனின் வாயைப் பார்க்க, அவரோ வாயிலிருந்த வெற்றிலை பாக்கை துப்பிவிட்டு, “ஏம்மா பதட்டம்?சவாரிக்கு கிளம்புற முன்னாடி பிள்ளை எப்படி இருக்கான்னு ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு வந்தேன்!” “நீ போயி வேலையப்பாருமா! நான் கிளம்புறேன்,” என்று மல்லிகாவின் மகனை கூப்பிட்டு ஏதோ விசாரித்து விட்டு, கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டையும் கொடுத்து விட்டு கிளம்பினார். மல்லிகா கணவரின் வருகைக்காக, வாசலையே வாய் பிளந்து […]
ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 4
பாகம் 01, பாகம் 02, பாகம் 03 மல்லிகா மீண்டும் பழைய வாழ்வின் நினைவுகளை அசை போடத்துவங்குகிறாள். அடிபட்ட மகன் மல்லிகாவின் மடியை ஆக்கிரமித்துக்கொள்ள, மூத்தவன் மல்லிகாவின் தோளில் சாய்ந்து கொண்டான். விவரம் தெரிந்த பின் மூத்த பிள்ளை தாயின் அரவணைப்பை தேடும் முதல் தருணம் இதுதான்.மல்லிகாவுக்கும் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி.“அம்மா, தம்பிக்கு என்னால தாம்மா இப்படி ஆச்சு”, என்று வெடித்து அழத்துவங்குகிறான். “விடுடா, நான்தான் எப்படி ஆச்சுணே கேட்கலியே டா?எப்படியும் விளையாடும் போது பட்ட அடிதானே? தெரியாம […]
ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 3
பாகம் 01, பாகம் 02 மல்லிகாவோ மனதில் திகிலுடனும், பக்தியுடனும் கடவுளாக மருத்துவரை கை எடுத்து கும்பிட்டு என்ன ஆச்சுங்கய்யா என்று கேட்க,மருத்துவர், “பயப்படும்படியா ஒன்னுமில்ல மா!கண்ணுக்கு மேல பட்ட அடி கண்ணுல பட்டிருந்தா கஷ்டமாயிருக்கும். அடி பலமா பட்டதால நிறைய இரத்தம் போயிருக்கு, அத பாத்ததும் பையன் மயங்கிட்டான்.” “நான் வலிக்கு ஊசி போட்டு, அந்த இடத்துல தையல் போட்டுருக்கேன், அங்க நர்ஸ்ட்ட மருந்து மாத்திரை எல்லாம் வாங்கிக்கோங்க, எப்படி சாப்பிடனும்னு கேட்டுக்கோங்க!” “இப்ப பால் […]
ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 02
பாகம் 01 குருதி வெள்ளத்தில் மகனை பார்த்த மல்லிகாவுக்கு கைகால் அசையவில்லை! ஆனால் பாசம் உந்துமல்லவா? ஏன் எப்படி என்ற கேள்விகளை எழுப்பாமல், மூத்தவனை ஆட்டோ பிடித்து வர சொல்லி சாமர்த்தியமாக செயல்பட்டால் மல்லிகா! பக்கத்து வீட்டு ஆட்டோகாரர் தான்.பணம் பற்றியெல்லாம் கவலை கொள்ளாது ஏற்றி பரபரப்பாக ஓட்டிச்சென்றார்! போகும் வழியில் இருந்த தனியார் மருத்துவமனைகளில் வண்டி நிற்கவில்லை. தனியார் மருத்துவமனை என்பது இவர்களை பொறுத்தவரை வெறும் பெரிய கட்டிடங்கள் தான்! வேக வேகமாக திருவான்மியூர் சுகாதார […]
ஆயிரத்தில் ஒருவன்- தொடர்கதை
பாகம் 1 ஒரு அழகான மாலைப்பொழுது, நமது கதையின் நாயகன் கந்தசாமி சென்னையில் பலத்த வாகனங்களின் இரைச்சல்களுக்கு இடையில் சாலையின் ஓரத்தில் நின்று தனது வீடு செல்ல வெள்ளை நிற போர்டு போட்ட பேருந்தின் வருகைக்காக காத்திருக்கிறார்! கந்தசாமியின் வீட்டில் அவரது மனைவி மல்லிகா கணவரின் வருகைக்காக காத்திருக்கிறார்!கந்தசாமிக்கும் மல்லிகாவிற்கும் இரண்டு குழந்தைகள்! இரண்டும் படு சுட்டி, மாலைப்பொழுதில் தெருவில் கூடி விளையாடும் பல்லாயிரக்கணக்கான ஏழைக்குழந்தைகளில் அவர்களும் இருவர்! குழந்தைகள் இரண்டும் மல்லிகாவிற்கு அடங்காது!அப்பா தெருமுனைக்கு வரும்போது […]