மில்கா சிங். (நவம்பர் 20,1929 – சூன் 18,2021) இந்திய தடகள வீரர். தனது மின்னல் வேக ஓட்டத்திற்காக பறக்கும் சீக்கியர் என்று அழைக்கப்பட்டவர். காமன்வெல்த் போட்டிகளில் தனிநபர் தடகள விளையாட்டில் தங்கம் வென்ற முதல் சுதந்திர இந்தியாவின் வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இவரது இந்த சாதனை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அது போல ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரராக இவர் மட்டுமே திகழ்கிறார். […]
Category: தமிழ்
சமீபத்திய பரபரப்பான செய்தி பற்றிய சிறிய அலசல் தான் இது. அரசுப்பள்ளியில் ஆன்மீகம் பேசிய ஒருவரை பாதியில் அவரது பேச்சை நிறுத்தச் செய்து அவர்மீது சர்ச்சை பேச்சு பேசிய காரணத்திற்காக வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை இரு வேறு அரசியல் குழுக்கள் வரவேற்றும் , எதிர்த்தும் பேசி வருகிறார்கள். அதாவது பள்ளியில் ஆன்மீகம் பேசினால் என்ன தவறு? அவர் மறுபிறவி பற்றி தானே பேசினார், திருக்குறளிலும் மறுபிறவி பற்றி பல கருத்துகள் உள்ளனவே, அப்படியென்றால் திருக்குறளையும் தடை செய்வீர்களா? […]

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற புறநானூறு நூலின் வரிகளை முன்வைக்கும் கதை. இது கற்பனை கதையோ அல்லது வாசித்த கதையோ அல்ல. நான் கண்ட சினிமாவை கதையாக்கி இந்த கருத்தையும் முன்வைக்கிறேன். பேபி என்ற சினிமா. பாரதிராஜாவின் மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்திருந்த படம். படத்தின் கதை இதுதான். மனோஜின் மனைவி தனது முதல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தை இறந்து பிறப்பதால் சற்று மனநிலை பாதிப்புக்குள்ளாகிறார். பெரிய பாதிப்பாக இல்லாத காரணத்தால் குணமாகி இரண்டாவது முறை […]
பூமியின் சுழற்சி மாறினால் நமக்கெல்லாம் எவ்வளவு சிரமமும், இடையூறும், ஏற்படுமோ, அது போலத்தான் நமது அன்றாட சுழற்சி முறை தவறும் போது நமது உடல் சிரமத்திற்குள்ளாவும் என்பதை உணராமல் நம்மில் பலரும் சுய கட்டுப்பாடுகளை இழந்து சந்தோஷம் என்ற பெயரில் கூத்தடிக்கிறோம். காலை உதிக்கும் சூரியன் மாலை மறைவதைப்போல, மனிதன் தனது பணி நேரம், சாப்பாடு நேரம், உறங்கும் நேரம் என்பனவற்றில் ஒழுக்கமாக இருப்பது மிக அவசியமானது. மின்சாரம் வரும் காலத்திற்கு முன்னர் இருட்டிய பின்பு, அதாவது […]
ஆடு 🐐 வெட்டலாமா? திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் GOAT படத்தின் கதையும் ஓட்டமும் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்க்க விரும்புபவர்கள் எச்சரிக்கையாக அணுகலாம். ஒரு பெரிய நடிகரின் படம் அதுவும் எதிர்பார்ப்பைக் கிளப்பி இரண்டு மூன்று நாட்களாக திரையரங்குகளில் இணைய வழி முன்பதிவில் யாருக்குமே சரியாக நுழைவுச்சீட்டு கிடைக்காமல், அடித்துப்பிடித்து எப்படியோ ஒரு நுழைவுச்சீட்டைப் பெற்று படம் பார்க்க அமரும் போது எதிர்பார்ப்பு இல்லாமல் அமர முடியாது. அந்தப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் சந்தோஷம் இல்லாவிட்டால் […]
சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஏகாம்பரம் அவர்களை, ஒரு வார இதழும், ஒரு சமூக வலைத்தளப்பக்கமும் பேட்டி எடுத்து பாராட்டி இருந்தார்கள். நாமும் ஆச்சரியத்தில் அதைக் காணலானோம் ஏன் எதற்காக என்று. அதற்கான விளக்கங்களும், மேலும் சில தகவல்களும். தங்கலான் படத்தைக் குறிப்பிடக் காரணம் அதிலுள்ள தனித்தன்மையும் உழைப்பும் தான். இந்தப்படத்தில் எல்லோரும் கோவணம் தானே கட்டியிருக்கிறார்கள், இதில் என்ன வடிவமைப்பு இருக்கிறது? இரண்டு முழம் கச்சைத் துணியை எடுத்து காலை அகற்றி குறுக்கே […]
சாலையோர காதல் கதை
ஒரு சிறிய உருவகப்படுத்தப்பட்ட கற்பனை காதல் கதை. திவ்யா – அழகி, யாருக்கும் பார்த்த உடனேயே பிடித்துவிடும் அவளை. பாலாஜி- கொஞ்சம் பழமைவாதி, 90 ஸ் ஸ்டைலிலானவன். இன்னும் கூட அவனைப்பார்த்தால் 90 ஸ் பீலிங் ஒட்டிக்கொள்ளும். எங்கள் ஏரியாவின் முதல் முக்கிய சாலை வழியாக வந்து இரண்டாவது முக்கிய சாலையை கடந்து, எங்கோ சென்று மறைந்து மீண்டும் வந்த வழியே செல்வது திவ்யாவின் அன்றாட வழக்கம்.திவ்யா வருவதும் தெரியாது போவதும் தெரியாது. அவளிடம் அப்படி ஒரு […]
சமூக வலைதளங்கள் இன்று பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி மனிதனின் வாழ்க்கைத் துணை போல, நண்பன் போல, சகோதர, சகோதரிகள் போல மாறி வரும் அவலமும்; மேலும் வருமானம் வரும், பிரபலமாக வாய்ப்பு வரும் என்று பலரும் அதில் மூழ்கி அழியும் அபாயமான சூழலும் உள்ளது. முன்பெல்லாம் முகம் பார்த்து மனிதனின் நிலையறிந்த மக்கள் இன்று டிஸ்ப்ளே பிக்சர் அதாவது முகப்புப்படம் பார்த்து, ஸ்டேடஸ் பார்த்து ஒருவன் சோகமாக இருக்கிறானா, மகிழ்ச்சியாக இருக்கிறானா என்று அறிந்து கொள்ளும் நிலை […]
இந்திய சுதந்திரப்போர் வேட்கையை முதலில் தூண்டிய ஒரு வீரனை சற்று நினைவில் கொள்ளலாம். இது வேலூர் சிப்பாய் கலகத்திற்கெல்லாம் முன்னோடியாக 1751 லேயே வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரனின் கதை. இன்றைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் என்ற ஊரை தலையிடமாகக் கொண்ட பாளையத்தின் அரசன் பூலித்தேவனை சற்றே நினைவில் கொள்ளலாம். நெற்கட்டான் செவல் மருவி நெற்கட்டும்செவல் என அர்த்தமே மாறி நிற்கிறது. அதையும் கட்டுரையில் பார்க்கலாம். முதலில் பாளையத்தின் வரலாறு. பூழி நாடு:1378 […]
இந்த கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க. பன்றி இறைச்சியைப்பற்றி பேசி கட்டுரையை முடிந்திருந்தோம்.அதாவது பன்றி இறைச்சி என்பது இஸ்லாமிய மதத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும், அந்த பன்றி கொழுப்பு தடவப்பட்டிருந்த வெடிகளின் திரிகளை வாயில் கடிக்க வேண்டிய கட்டாயம் வந்த காரணத்தால் தான் சிப்பாய் கலகம் ஏற்பட்டது என்றும் பரவராக அறியப்பட்ட ஒன்று. ஆனால் ஏன்? ஆடு 🐐 மாடுகளின் 🐮 மீது இல்லாத இரக்கம் பன்றிகளின் 🐷 மீது மட்டும் எதற்காக? நான் […]