அன்று காலை வழக்கம்போலத் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பரபரப்பாக எழுந்து கொண்டிருக்கிறது மொத்த குடும்பமும். காலையிலேயே அனைவருக்கும் காபி கொடுத்து எழுப்பும் ஆயா (பாட்டி) இன்று இன்னும் ஏன் காபி தரவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆயாக்கு உடம்பு சரியால்லாம இருக்கலாம் அதனால எழுந்திருக்க மாட்டாங்க. சரி நாம காபி போட்டுக்குவோம் என்று மருமகள்கள் பிள்ளைகளை சமாதானப்படுத்தி விட்டு தங்களது வேலைகளைத் துவங்குகிறார்கள். ஒரு மருமகள் சமையலறையில் காபி போடுகிறாள், மற்றொருவள் காலை உணவுக்கு […]
Category: தமிழ்
கண்ணுக்குத் தெரியாமல் ஆரம்பித்து விட்ட இறுதி உலகப்போர். எல்நினோ எனும் பருவநிலை மாற்றம் காரணமாக வறட்சியில் வாடும் தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள், மக்களின் பசியைப் போக்குவதற்கும், வறட்சியின் சூழலை கட்டுக்குள் வைக்க அவர்கள் எடுத்துள்ள முடிவு நம்மை கடுமையான சோகத்தில் ஆழ்த்துவதாக உள்ளது. எல் நினோ பருவநிலை மாறுதலால் பனாமா கால்வாயில் ஏற்பட்ட தண்ணீர் சிக்கலை பற்றி இந்த பக்கத்தில் எழுதியிருந்தோம். தற்போது தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே என்ற நாட்டில் எல் நினோ பருவநிலை மாறுதலால் […]
கடவுள் என்பதை கட- உள் என்று பிரித்து உன் உள்ளே இருக்கும் நல்ல ஆன்மாவை உற்றுநோக்கி அது சொல்லும் வழியில் நடப்பது தான் ஆன்மீகம் என்றும், கடவுள் என்பது நம்மிலிருக்கும் நல்ல குணங்களின் பிரதிபலிப்பே எனவும் பல நேரங்களில் பல மதத்தலைவர்களாலும் விளக்கப்பட்டிருந்தாலும் கூட மனிதன் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இங்கே நாத்திகம் பேசும் மனிதர்கள் யாரும் கோவிலை இடிக்கவோ, கடவுளின் சிலைகளை அவமதிப்பதோ இல்லை. ஆத்திகவாதி, கடவுளின் பக்தன் என்று கூறிக்கொண்டு அன்றாடம் பக்தி […]
ஓர் அரசன் என்பவன் மக்களின் குறைகளை கேட்டு அதைக் களைந்து அவர்கள் குறைதீர்க்கும் வகையில் நல்லாட்சி தருபவனாக இருக்க வேண்டும் என்று பல இலக்கியங்களிலும் படித்திருக்கிறோம். இவ்வளவு ஏன் தனது குட்டியை தேரில் ஏற்றி சாகடித்ததற்காக, நீதி கேட்ட பசுவுக்காக தனது மகனையே தேரில் வைத்து நசிக்கிக்கொன்று நீதி காத்தமனுநீதிச்சோழனின் கதையை இன்றளவும் பெருமையாகப் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். மொத்த நாடும் தன்னுடைய சொத்து என்று ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் கொண்ட மன்னனுக்கே இப்படியான பண்புகள் […]
அருண், என்ஜினியரிங் முடித்த பட்டதாரி. வீட்டில் அருண் என்று தான் அழைப்பார்கள். படிப்பில் ஓரளவு கெட்டிக்காரன். படிக்கும் போதே கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. தான் படித்த படிப்பிற்கும் மென்பொருள் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லாத காரணத்தால் அந்த வேலைக்கு செல்வதில் அருணுக்கு பெரிய உடன்பாடு இல்லை. ஆனாலும் சரியான பயிற்சி கொடுத்துதான் வேலையில் வைப்பார்கள், சம்பளமும் நல்ல சம்பளம் என்பதால் அவனுடைய அப்பா, இந்த வேலைக்கு சேர சொல்லி தனது […]
இதற்கு முன் வெளியான ஆசிரியர் குறிப்பை வாசிக்க, நினைவுகளை பற்றி 01 – பதிப்பாசிரியரின் குறிப்பு செப்டம்பர் 14, 2024 அன்புள்ள வாசகர்களுக்கு, நினைவுகள் தளத்தின் முன்பக்கம் கட்டுரை வகைப்பாடுகளுடன் பிரிக்கப்பட்டு காட்டப்படுவதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். முன்பக்கத்தில் ஒவ்வொரு தலைப்பிலும் புதிய பதிவுகள் 5 அல்லது 6 மட்டுமே தென்படும். இன்று செய்த மேம்படுத்துதலுக்கு பின், ஒவ்வொரு தலைப்பையும் கிளிக் செய்தால் அந்த தலைப்பினுள் உள்ள பழைய கட்டுரைகளின் பட்டியல் வெளிப்படும். இந்த பக்கங்களையும், அதில் உள்ள […]
வாடகை வீடு என்பதை இங்கு பெரும்பாலான நடுத்தர மக்கள் கடந்து வந்திராமல் இல்லை. அதுவும் தான் படித்த படிப்புக்குத் தகுந்த வேலை தேடி பெருநகரங்களுக்குக் குடியேறும் இளைஞர்கள், திருமணம் ஆகும் முன்பு பேச்சிலர்களாகவும் (மணமாகாத இளைஞர்கள்) , பிறகு திருமணம் முடித்து குடும்பத்துடனும் வாடகை வீடுகளிலேயே காலம் தள்ள வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அப்படியான வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் வாடகைக்குக் குடி வருபவர்ரகளிடம் காட்டும் அதிகாரத்தைப் பற்றிய எனது சில அனுபவங்களை, நினைவுகளைப் பகிர்கிறேன். பேச்சுலராக நான் […]

தியாகி இமானுவேல் சேகரனார்.(9/10/1924 – 11/09/1957). இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து, பிறகு தான் பிறந்த சமூகத்தின் நலனுக்காக சமூகப்பணியில் ஈடுபட்டு, இளம் வயதில் உயிர்துறந்த தியாகி. ஆசிரியர் மற்றும் வழக்கறிஞரான இவர் தந்தையிடமே பாடத்தையும் சமுதாய சிந்தனையையும் கற்றவர். சிறுவயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வமிகுந்தவராகத் திகழ்ந்தவர். தனது 18 ஆவது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று மூன்று மாதம் சிறை தண்டனை பெற்றார். தனது 19 ஆவது வயதில் இரட்டைக்குவளை ஒழிப்பு […]
சில நினைவுகள் இனிமையாகவும், சில நினைவுகள் தீராத ரணமும் தரும் விதமாக அமைவது இயற்கை. அப்படி இனிமையாக அல்லாத நினைவுகள் நல்ல பாடத்தை தரும் என்பதில் ஐயமில்லை. சமகால வராலாற்றில் மறக்க முடியாத நாள் செப்டம்பர் 11,2001. உலகத்திற்கே தீவிரவாதத்திற்கு எதிரான பெரிய படிப்பினையைத் தந்த மிகக் கொடுமையான ஏற்றுக்கொள்ளப்படாத அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த நாள். அமெரிக்காவிலிருந்த உலக வர்த்தக மையம் மற்றும் பாதுகாப்புத்துறையின் பென்டகன் கட்டிடம் ஆகியவை தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு தாக்கப்பட்ட நாள். […]
உணவு என்பது மனிதனின் அன்றாடத் தேவை என்பதைத் தாண்டி ஒரு பேசுபொருளாக, தகுதியை நிர்ணயிக்கும் விஷயமாக மாறிய பின்பு பல சீரழிவுகள் நடைபெறுகிறது. மொத்த குடும்பமும் சேர்ந்து பெரிய பெரிய பவன்களிலோ அல்லது ரெஸ்டாரண்ட்களிலோ உணவருந்தி புகைப்படங்களைப் பதிவேற்றுவது வாடிக்கையாகி விட்டது. ஏதோ ஒரு விஷேசம் அல்லது ஒரு திருமண நாள், பிறந்தநாள் அல்லது நண்பர்களின் விருந்து என்றில்லாமல் வார இறுதி என்றால் நாங்கள் அந்த பவனில் தான் சாப்பிடுவோம் என்று யதார்த்தமாக ஆரம்பித்தது இன்று வாடிக்கையாகி […]