பயணம் மற்றும் சுற்றுலா. இன்றைய தினத்தில் பயணம் மற்றும் சுற்றுலா என்பது மிகவும் யதார்த்தமாகிப்போன ஒரு விஷயமாக உள்ளது. இந்த விதமான மக்கள் தான் பயணிக்கிறார்கள், சுற்றுலா வருகிறார்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுமே பயணிக்கத் துவங்கி விட்டார்கள். அதன் விளைவு தான் எங்கு நோக்கினும், கூட்டமும், நெரிசலும், சிக்கல்களும். ஒரு காலத்தில் வெள்ளியங்கிரி மலைப்பயணம் என்பது சீண்டப்படாத மிக அரிதானதாக இருந்தது. சமூக வலைத்தளங்களின் தாக்கத்தின் காரணமாக கடந்த வருடம் லட்சக்கணக்கான ஆட்கள் […]
