கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி, அதாவது முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி ஆண்ட பறம்பு மலை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு. பறம்பு மலை என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட இந்த மலை பிறகு திருநெலக்குன்றம் எனவும், சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும் அழைக்கப்பட்டு இப்போது ப்ரான் மலை என்றும் அறியப்படுகிறது. இது தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து 42 கிமீ தொலைவில் மேற்கிலும், மதுரையிலிருந்து 63 கிமீ தொலைவில் வடக்கிலும் அமைந்துள்ளது. சங்க காலத்தில் […]
Category: கருத்து
ஒரு தோராயமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி அல்லது பேரூராட்சிகளில் இருக்கும் கசாப்பு கடைக்காரர்கள் அனைவரும் இதுபோல இருக்கலாம். இது எனது ஊரின் கசாப்புக் கடைக்காரரைப் பற்றிய எனது நினைவுகள். பளபளப்பான கட்டிடம், டைல்ஸ் பதித்த தளமெல்லாம் கிடையாது. ஒரு சின்ன பெட்டிக்கடை அளவில் இருக்கும் கசாப்புக் கடையில், அந்த கடைக்காரரும் அங்குள்ள ஒரு வேலை ஆளும், அவர்கள் இருவரும் கறிவெட்டும் கட்டைகள், இவை மொத்தமும் அந்த இடத்தை ஆக்கிரமித்து விடும். வேலை ஆள் என்பவர் பெரும்பாலும் […]
பிரிவின் வலியை சொல்லும் ராசாத்தி என்ற பாடலை பற்றி அருண் பாரதி இங்கு எழுதுகிறார். அதே பெயரில் ஒரு பாடலை கொண்ட சமீபத்தில் வெளியாகியிருக்கும் வள்ளியம்மா பேராண்டி என்ற இசைத்தொகுப்பை பற்றி இந்த கட்டுரை. பிக்சன் பிக்சன் (பெரிய மகன்) என்று இவரது அம்மாவும் அப்பாவும் அழைக்க, பிக்சன் இன் உலகத்துக்குள் நுழைகிறோம். “பொக்க பொக்க பொக்கை வள்ளி பாட்டி, you‘re மை ஸ்வீட்டி” என்று விளையாட்டாக ஆரம்பமாக்கிறது இவரது கதை. பிக்சன் என்பவர் வேறு யாருமில்லை […]
பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து திருவள்ளுவர், குறள் 738 இன்று 78 ஆவது சுதந்திர தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடும் தருணத்தில் இரண்டாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த குறளின்படி நமது நாடு செழிப்பாக உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தக்குறளின் படி நோயற்ற வாழ்வு, நல்ல செல்வம், நல்விளைச்சல், மக்களின் இன்ப வாழ்வு, நற்காவல் ஆகிய இந்த ஐந்தும் தான் ஒரு நாட்டிற்கு அணிகலன். அதாவது நாட்டில் நல்ல […]
updated on August 12, 2024 அன்புள்ள வாசகர்களுக்கு, இங்கு வாசித்தது உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் தளத்தை புக்மார்க் செய்யுங்கள். நினைவுகள் எப்படி பட்ட தளம்? நினைவுகள் என்பது நம் நினைவில் கொள்ள வேண்டிய சமாச்சாரங்களை பதிவு செய்யும் தளம். Journal என்ற ஆங்கில சொல்லுக்கு நேரத்தோடு பதிவிடுதல் என்று அர்த்தம். அதாவது ஒரு நாளின் நினைவுகளை, நாட்டு நடப்புகளை, பழைய செய்திகளை, இலக்கியத்தை, நமக்கென புரிந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ந்து பதிவு […]
இதற்கு முன்பு வெளிவந்த கடன் எனும் பகாசூரன் வாசிக்க… சிறிது காலத்திற்கு முன்பு வரை புழக்கத்தில் இல்லாத இந்த மொபைல் அல்லது கைபேசி, இப்போது ஒரு வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ இருக்கிறது. தகவல் தொடர்பு முன்னேற்றம், உலகம் நம் கையில் என்று மார்தட்டிக் கொண்டாலும் அதில் பல பிரச்சினைகளும் உள்ளது. மொபைல் மனிதர்களின் நேரத்தை, குறிப்பாக நெருக்கத்தை எடுத்துக்கொள்கிறது. மொபைலுக்கு அடிமை ஆகிப்போகும் மனிதன் சக மனிதனை முகம் கொடுத்துப் […]
நிலைகுலைந்து வரும் பொது ஒழுக்கம். தனிமனித ஒழுக்கம் அல்லது பொது ஒழுக்கம் என்பது தற்போது பரவலாக வெகுவாக நிலைகுலைந்து வருகிறது. தண்ணீரை வீணாக்குவது, குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவது, போக்குவரத்து விதிமுறைகளில் அத்துமீறல், இப்படி சிறிய விஷயங்களில் துவங்கி, குறைந்த மதிப்பீட்டில் பத்திரப்பதிவு, வருமான வரி ஏய்ப்பு என்று பெரிய விஷயங்கள் வரை பொது மக்கள் தங்கள் சுய மற்றும் பொது ஒழுக்கத்தில் தவறி தான் இருக்கிறார்கள் என்பது 100 சதவீத உண்மை. ஒரு அரசு அதிகாரி, […]
பிடித்த வேலையோ, பிடிக்காதவேலையோ, ஆத்மார்த்தமாக செய்ததோ அல்லது அலுவலுக்காக செய்ததோ, நேர்மையாக இருந்தார்களோ ஏமாற்றினார்களோ. எப்படி இருந்தாலும் ஒரு மனிதனின் ஆன்மா, ஆழ்மனது, ஒரு வேலையை தொடர்ந்து செய்யும் போது அதற்கு அடிமையாகி விடுகிறது.
அறவியல், இயற்பியல் படித்த அனைவரும் கடந்து வந்திருக்கக்கூடிய சொல்தான் இந்த விடுபடு திசைவேகம். ஆங்கிலத்தில் escape velocity என்று சொல்லப்படும். புவியிலிருந்து நாம் எந்தப்பொருளைத் தூக்கி எறிந்தாலும் அது சிறிது உயரத்தை அடைந்து விட்டு திரும்ப புவியை நோக்கி வந்தடையக் காரணம், புவியின் ஈர்ப்பு விசை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படி மேலே எறியப்பட்ட பொருள் கீழ்நோக்கித் திரும்ப வராமல் மேலே புவி வட்டத்தை விட்டு சென்று விட வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் […]
EMI – Equated Monthly Installment, எனும் கொடிய கிருமி உருவெடுக்கும் முன்னரே கைமாத்து, கடன் போன்ற விஷயங்கள் புழக்கத்தில் இருந்து வந்த ஒன்று தான். அதாவது மாத ஊதியத்தைக்காட்டிலும் அதிகமாக ஏதாவது தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும் போது இவ்வாறான கைமாத்துகள் அல்லது வட்டிக்கு கடன் வாங்குதல் போன்றவை புழக்கத்தில் இருந்த ஒன்று. இப்படி கடன் வாங்கும் போது ஏற்படும் பிரச்சினை என்னவென்றால் வட்டி. பெரிய தொகை ஒன்றை தேவைக்கென வாங்கிவிட்டு, அந்தத் தொகைக்கான வட்டியை […]