ஒரு குறிப்பிட்ட சலவை சோப்பு விளம்பரத்தின் அநியாயம் தாங்க இயலவில்லை.அதைப் பார்க்கும் முன்பு, நமது நினைவிலிருக்கும் பல விளம்பரங்களையும் ஒருமுறை அலசலாம். நமது சின்ன வயதில் வாஷிங் பவுடர் நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா என்ற விளம்பரப் பாடலைப் பாடாத ஆட்களே இருந்திருக்க மாட்டோம். சில விளம்பரங்கள் நமது மனதைக் கவர்ந்தவையாகவும் இருந்தன. Boost is the secret of our energy போல.. இன்றைய சூழலில் வியாபார போட்டிகள் அதிகரித்த காரணத்தால் பல விளம்பரங்களும் மக்களின் […]
Category: கருத்து
நீ விதைப்பதே விளையும் என்பது மறுக்க இயலாத ஒன்று. நேற்றைய மாணவர்கள் இன்றைய சமுதாயம்.இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம். இப்படி இருக்கும் போது மாணவனாக ஒழுக்கம் கற்றவர்கள், சமுதாயமாகக் கட்டமைக்கப்படும் போது அங்கே லஞ்சமும், ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் ஒழியாமல் தொடர்வது அவலம் தானே? நல்ல ஆசிரியர்களால் ஒழுக்கம் கற்பிக்கப்பட்ட நல்ல மாணவர்கள் எப்படி இந்த முறை கேடுகளை எல்லாம் செய்கிறார்கள்? அதற்கான பதில் தான் இந்த சம்பவம். ஆசிரியர்களின் முறைகேடுகளும், அதிகார துஷ்பிரயோகமும். சமீபத்தில் ஆளுநரிடம் […]
முதலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி என்ற இரு நாட்களும் பூமியின் சுழற்சியால் மாதம் ஒரு முறை வரும் சுழற்சியான நாட்கள் என்பதையும், இந்த இரு நாட்களுக்கும் விசேஷ சக்தி என்பதெல்லாம் இல்லை என்பதையும், ஈர்ப்பு விசையில் உள்ள மாறுதல் காரணமாகவே கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளன என்பதையும் அறிவியல் பூர்வமாக நாம் அறிந்திட வேண்டும். சரி இது அறிவியல்.அதாவது ஒரு இருசக்கர வாகனம், அல்லது ஒரு மகிழுந்து எப்படி இயங்குகிறது என்று கேட்டால், இயந்திரவியல் விளக்கம் […]
உனக்கென்னப்பா நீ ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்ற சொல்லாடலை நாம் அடிக்கடி எங்கேயாவது கடந்து வந்திருப்போம். அதாவது கஷ்டப்படாமல் வாழ்வில் சிறப்பாக வாழ்ந்து, வெவ்வேறு உயரங்களை, ஒரு பாமரன் கனவில் கூட நினைக்க முடியாத உயரங்களை எளிதாக அடையும் பெரிய பதவியிலிருக்கும் அல்லது பெரிய பணக்கார வீட்டு பிள்ளைகளை பார்த்து பலரும் சொல்லும் வசனம் தான் “உனக்கென்னப்பா, நீ ராஜா வீட்டு கன்னுக்குட்டி” இன்றைய சூழலில் அப்படி ஒரு ராஜா வீட்டு கன்னுக்குட்டி தான் நமது மாநிலத்தின் […]

நமது வாழ்வியல் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போலத்தான் மருத்துவ தேவைகளும் அமையும் என்பதை மறந்து சிலர், “நான் மருந்து மாத்திரைகளைத் தவிர்த்து வாழ்ந்து வருகிறேன்”, அல்லது “மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ முயற்சி செய்கிறேன்” என்று கூறி வாழ்வியலையும் மாற்றிக் கொள்ளாமல் இறுதியில் பெரிய தாக்கங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அதை ஒரு உரையாடலாக பதிவிடுகிறோம்.இதில் சிறிது கற்பனை, மீதி உண்மை. (டூட் என்பது dude என்ற ஆங்கிலச் சொல்லை குறிக்கிறது. Dude என்பது கவலையில்லாமல் சுற்றும் […]
அரசுப் பணியாளர்களின் தனித்தன்மை சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று. சென்னை மேயரின் பெண் தபேதார் பணியிட மாற்றம் என்பது. இவர் லிப்ஸ்டிக் அதாவது உதட்டுச்சாயம் பூசுவதை நிறுத்த மறுத்த காரணத்தால் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் எனவும், அப்படியென்றால் பணியிட மாறுதல் அடைந்த பிறகு மணலியில் லிப்ஸ்டிக் போட்டால் தப்பு இல்லையா என்றும் ஒரு பக்கம் வலைத்தளவாசிகள் வறுத்து வருகிறார்கள். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அவரது பணியிட மாறிதலுக்கு மேயர் அலுவலகம் […]
சில விஷயங்களின் மீதான நம்பிக்கையை கேள்வி கேட்பதே தவறு என்று காலம் காலமாக வழக்கப்படுத்தப்பட்டு விட்டதால் மூடநம்பிக்கை என்ற ஒன்றை இன்றும் கூட அழிக்க முடியாமல் உள்ளது. பக்தி என்பதை இங்கு யாரும் குறை கூறவில்லை. கடவுளின் மீதான நம்பிக்கையும், பயமும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும் என்றால் அதைவிட இந்த உலகத்திற்கு என்ன மகிழ்ச்சி இருந்து விடப்போகிறது? ஆனால் அந்த பக்தியின் பெயரால் நிகழ்த்தப்படும் மூட நம்பிக்கை சம்பிரதாயங்களையும், சடங்குகளையும், பிற மனிதர்களின் மீதான வன்முறைகளையும் சரி […]
புரட்டாசி என்றாலே பல புத்தர்கள் உருவாகும் மாதமாகி விட்டது. சிறு வயதில் எனக்கு விவரம் தெரியவில்லையா அல்லது சமீப காலமாகத்தான் இப்படி மக்கள் அதீத பக்தியில் ஆழ்ந்து விட்டார்களா என்று எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.புரட்டாசி புத்தர்கள் என்று நான் குறிப்பிடுவது புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று விரதம் இருப்பவர்களைத் தான். எனது நினைவின் படி எங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் […]
கடவுள் என்பதை கட- உள் என்று பிரித்து உன் உள்ளே இருக்கும் நல்ல ஆன்மாவை உற்றுநோக்கி அது சொல்லும் வழியில் நடப்பது தான் ஆன்மீகம் என்றும், கடவுள் என்பது நம்மிலிருக்கும் நல்ல குணங்களின் பிரதிபலிப்பே எனவும் பல நேரங்களில் பல மதத்தலைவர்களாலும் விளக்கப்பட்டிருந்தாலும் கூட மனிதன் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இங்கே நாத்திகம் பேசும் மனிதர்கள் யாரும் கோவிலை இடிக்கவோ, கடவுளின் சிலைகளை அவமதிப்பதோ இல்லை. ஆத்திகவாதி, கடவுளின் பக்தன் என்று கூறிக்கொண்டு அன்றாடம் பக்தி […]
ஓர் அரசன் என்பவன் மக்களின் குறைகளை கேட்டு அதைக் களைந்து அவர்கள் குறைதீர்க்கும் வகையில் நல்லாட்சி தருபவனாக இருக்க வேண்டும் என்று பல இலக்கியங்களிலும் படித்திருக்கிறோம். இவ்வளவு ஏன் தனது குட்டியை தேரில் ஏற்றி சாகடித்ததற்காக, நீதி கேட்ட பசுவுக்காக தனது மகனையே தேரில் வைத்து நசிக்கிக்கொன்று நீதி காத்தமனுநீதிச்சோழனின் கதையை இன்றளவும் பெருமையாகப் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். மொத்த நாடும் தன்னுடைய சொத்து என்று ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் கொண்ட மன்னனுக்கே இப்படியான பண்புகள் […]