ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. பசுமரத்தாணி போல என்ற வாக்கியங்கள் குழந்தைப் பருவத்தில், அதாவது இளம் வயதில் கற்றலை போதிப்பதற்கான வாக்கியங்கள். அதாவது இளம் வயதில் நல்ல விஷயங்களை, வாழ்க்கைக்குத் தேவையான போதனைகளை சொல்லிக்கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அதன் விளக்கம். எப்படி குழந்தைகள் நல்ல விஷயங்களை மனதில் பதிப்பித்துக் கொள்கிறார்களோ, அதேபோல, தன்னைச் சுற்றி இருக்கும் சமூகம் காட்டும் வக்கிரங்களையும், தீயவற்றையும் கூட எளிதாக உட்கிரகித்துக் கொள்கிறார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் சுற்றத்தில் பேசப்படும் […]
