கங்குவா! காரசாரமாக இணையதளத்தில் கழுவி ஊற்றிக் கொண்டிருப்பது, ஒரு புறம். சினிமா நல்லாதான் இருக்கு, இது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியில் ஏற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட வதந்தி என்று முட்டுகள் ஒரு புறம் என கங்குவா பரபரப்பாகப் பேசப்படுகிறது. இது பிஜேபியின் சதி என்றும் சிலர் பேசுகிறார்கள். இத்தனைக்கும் நடுவில் எனது எதிர்பார்ப்புகளைத் தரை மட்டத்தில் வைத்துக் கொண்டு படத்தைப் பார்த்தேன். அப்படியிருந்தும் படம் சுமாராகத்தான் இருந்தது. படம் ஆரம்பித்து ஒரு 25 நிமிடம் செம கடுப்பு என்ற ரீதியில் […]
Category: சினிமா
தீபாவளி படங்களின் வரிசையில் தமிழ் படங்களைத்தாண்டி தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழ் மற்றும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் என்ற படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழில் வெளியான அமரன் படத்துக்கு இணையாக இந்தப்படமும் ஓடிக்கொண்டிருக்கிறது. நம் அனைவருக்கும் பரீட்சயமான SCAM 1992, அதாவது ஸ்டாக் மார்க்கெட், ஹர்ஷித் மெஹ்ரா, மகதா வங்கி ஆகிய இந்த மோசடி சுழலில், ஒரு சின்ன எலி தனக்குத் தேவையானத சுருட்டிக் கொண்டு, தனக்குப் பொறி […]
நடிகர் டெல்லி கணேஷ். நாடக சபை முதல் இன்றைய வெப் சீரிஸ், அதாவது இணையத் தொடர் வரை நடித்த ஒரு மகா நடிகர். இவர் வெறும் நடிகர் மட்டுமல்லாது, சில படங்களில் பிண்ணனி குரலும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகர் என்பதைத் தாண்டி, நடிக்க வருவதற்கு முன்பு இந்திய விமானப்படையில் பணிபுரிந்தார் என்பது கூடுதல் அதிசயத் தகவல். இவர் எனது சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் பிறந்தவர் என்பது மனதிற்கு நெருக்கமான செய்தி. பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே இவரது படங்களைப் […]
பசுந்தோல் போத்திய புலி அல்ல நான். பசுவும் அல்ல. நான் நல்லவனா? இல்லை கெட்டவவனா?இரண்டுமே அல்ல. அதை முடிவு செய்யும் உரிமையும் என்னிடமே உள்ளது. அந்த வகையில் கொஞ்சம் சிறப்பானவன் தான். இதுதான் ஒழுக்கம், இதுதான் கலாச்சாரம் என்பதைப் பின்பற்றி எப்போதும் வாழ்ந்தவனில்லை நான். என்னவோ தெரியவில்லை, என்னை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஒருபோதும் தனிமனித ஒழுக்கத்தை நான் மீறியதில்லை. என் போக்கில் என் வாழ்க்கை. யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்லை. யாரையும் கெடுத்ததும் இல்லை. பிறரின் பேச்சுக்கு […]
தீபாவளி பட வரிசை (அமரன், பிரதர்) விமர்சனம் இன்னும் முடிந்த பாடில்லை. அடுத்த படம் அனைவரின் எதிர்பார்ப்பைக் கிளறி, முதல் நாள் இணைய வாசிகளால் கிழித்துத் தொங்கவிடப்பட்ட ப்ளடி பெக்கர் திரைப்படம். இணைய விமர்சனங்களையும், ரசிகர்களின் விமர்சனங்களையும் கேட்டு, இந்தப்படம் சற்றே ஏமாற்றம் அளிக்கும் படம் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம். வித்தியாசமான படங்களை விரும்பும் ஆட்களுக்கு இது ஏமாற்றம் அளிக்காத ஒரு நல்ல படம் தான். கதைக்களம் புதியது. திரைக்கதை ஒரு வீட்டினுள்ளே குறிப்பிட்ட சில […]
தீபாவளி போட்டியாக களமிறங்கிய 4 படங்களில் 2 படங்கள் தரமானதாகவும், இரண்டு படங்கள் சுமார் ரகமாகவும் வந்திருக்கின்றன. அப்படியான ஒரு சுமார் ரகப் படம் தான் ஜெயம் ரவி நடிப்பில் வந்துள்ள பிரதர் திரைப்படம். இயக்குனர் திரு.ராஜேஷ் அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இயக்குனர் ராஜேஷ் அவர்களின் படம் பற்றி மக்கள் கொண்டிருக்கும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே இந்தப்படமும் அமைந்துள்ளது. க்ளைமாக்ஸ்ல் துவங்கி பின்னோக்கிப் பயணித்து இந்நாளில் வந்து நிற்கும் கதை. கதாநாயகன் தப்பானவாகப் பார்க்கப்பட்டு பிறகு அவனை அவனே […]
தீபாவளி மெதுவாக குளித்து முடித்து பலகாரங்கள் சாப்பிட்டு, பட்டாசு வெடித்தாலும், படம் பார்த்து முடித்தால் தானே திருப்தி. தீபாவளிக்கு மறக்க முடியாத பல பெரிய படங்கள் வெளிவந்து வெற்றி அடைந்திருக்கிறது. அப்படி இந்த வருடம் சொல்லி அடிக்க வந்த படம் அமரன். வெகுவான சினிமா ரசிகர்கள் மற்றும் குடும்பங்களின் தேர்வு இந்தப் படம் தான். காரணம் இது நம்மிடையே வாழ்ந்து மறைந்த முன்னாள் இராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு என்பதாலும், சிவகார்த்திகேயன் பல குடும்ப ரசிகர்களைத் தக்க […]
சென்ற வாரம் ஒரு பெரிய சிங்கம் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த காரணத்தால் குரங்கு 🐵 பல்டியை கவனிக்கத் தவறிவிட்டோம். ஆம் வேட்டையன் என்ற சூப்பர் ஸ்டார் ஜோரில் ப்ளாக் என்ற வித்தியாசமான குரங்கு பல்டி படத்தைப்பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. வேட்டையனுக்கு எதிரான சில சமூக விரோதிகள் இந்தப்படத்தையும் பாருங்கப்பா, அந்தப் படத்துக்கு இது எவ்வளவோ மேல் என்று விளம்பரப் படுத்துவதால் ஒரு சுமாரான ரசிகர் கூட்டம் திசைமாறி இந்தப் படத்திற்கு வருகிறார்கள். சரி அப்படி திசைமாறி […]
கதை மற்றும் திரைக்கதை பற்றிய முழு வெளிப்பாடும் இல்லாவிட்டாலும், சில பாராட்டுதலுக்காவும், சில விமர்சனங்களுக்காகவும் ஆங்காங்கே சிலவற்றை வெளிப்படுத்த உள்ளோம். சினிமா பார்க்காதவர்கள் கவனத்துல் கொள்ளவும். முதலில் இந்தப்படத்திற்கு ஏன் எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன என்பதே புரியவில்லை.படம் பார்ப்பதற்கே நான் ஒரு எதிர்மறை நோக்கத்துடன் தான் சென்றேன். ஆனால் ஏமாற்றமோ, மோசமோ இல்லை. சராசரிக்கு மேற்பட்ட வகை படம் என்றே குறிப்பிடலாம். படத்தின் முன்னோட்டத்தில் காட்டப்பட்டது போல, படத்தில் கதாநாயகன் ஒரு அதிரடி காவல் கண்காணிப்பாளர். என்கவுண்டர் […]
நடிகர் திலகம், சிம்மக்குரலோன், சிவாஜி கணேசன் அவர்களது பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதியில் அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டு , அவரது புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டதை அறிந்து பெருமிதம் கொள்கிறோம். சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி, பேசவும் நினைக்கவும் ஆயிரமாயிரம் விஷயங்களும், பல சினிமாக்களும் இருந்தால் கூட, இன்று நாம் காணப்போவது சிவாஜி கணேசன் அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அந்த நாள் என்ற படம் பற்றி. இன்றைய நவீன காலகட்டத்திலேயே பல […]