Categories
சினிமா தற்கால நிகழ்வுகள் பாடல்

குருவிக் கூட்டிற்கு வாடகை கேட்ட ஆலமரம்.

இதோ மீண்டும் துவங்கிவிட்டார் இசை அரசன் தமது இம்சையை. குட் பேட் அக்லி படத்தில் தனது பழைய பாடல்கள் உபயோகிக்கப்பட்டிருப்பதால் தனக்கு ஐந்து கோடி பணம் தர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தேவையா என்று நாம் பேசினால் அதெப்படி தவறாகும் என்று ஒரு கூட்டம் கிளம்பி வரும். இப்போது இளையராஜாவின் இந்தச் செயல் தேவையில்லாத ஒன்று என்று பேசுபவர்கள் இளையராஜாவின் ரசிகர்கள் அல்ல என்றும், மேலும் அவர்களில் சிலருக்கு ஜாதிய கட்டமைப்புப் பின்புலமும் தீவிரமாக […]

Categories
சினிமா

Good Bad Ugly- விமர்சனம்

Good, Bad, Ugly Good ஆ? Bad ஆ ? Ugly ஆ? அமர்க்களம், அட்டகாசம், மங்காத்தா, வாலி, தீனா போன்ற அஜித்தின் பழைய படங்களின் வரலாறு, அதிலிருந்த தரமான மாஸான காட்சிகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து ஒரு கதையை தயார் செய்து; அதாவது கதைக்காக படமில்லாமல் இது மாதிரி ஒரு படம் எடுக்க என்ன கதை தேவைப்படுமோ அந்தக் கதையை படத்தினுள்ளே நுழைத்து தான் விரும்பிய, தன்னைப் போல தல ரசிகர்கள் விரும்பிய வெறித்தனமான […]

Categories
சினிமா

வீர தீர சூரன் – விமர்சனம்

வீர தீர சூரன். பெயருக்கு ஏற்றாற் போல, ஒரு வீரனின் கதை.பல வீரர்களை இதற்கு முன்பு இதேபோன்ற கதைகளில் நாம் பார்த்துப் பழகியிருக்கிறோம். இது தமிழ்சினாமாவுக்கு மிகப்புதிதான கதை ஒன்றுமல்ல. ஆனால் திரைக்கதையின் தன்மையும், சில காட்சிகளின் வடிவமைப்பும் நமக்கு நல்ல படம் பார்த்த திருப்தியைத் தருகிறது. ஒரு பெரிய வில்லனிடம் எத்தனை அடியாட்கள் இருந்தாலும், அந்த வில்லனுக்கு ஒரு இக்கட்டான சூழல் வரும்போது அவர்கள் மீது எல்லாம் நம்பிக்கை இல்லாமல் கதாநாயகன் தான் வந்து தன்னைக் […]

Categories
சினிமா

பெருசு- ரொம்ப தினுசு- திரை விமர்சனம்

அப்பா – ஒரு ஒப்பற்ற சொல். எத்தனை எத்தனை கோபம், விமர்சனம், மனஸ்தாபம், சண்டைகள், வார்த்தை முரண்பாடுகள், சிந்தனை வேறுபாடுகள், தகராறு என இருந்தாலும், எத்தனை வயது காலனமானாலும் அப்பா அப்பா தான். அப்பாவிடம் பொதுவாக பல பிள்ளைகளும் தேவையில்லாமல் கோவித்துக் கொண்டு விரோதியாக பாவித்து ஒதுக்கி விடுவார்கள். கவிஞர் வைரமுத்து கூட தனது தந்தையின் இறப்புக்குப் பின்னரே, அவர் அப்பாவின் அருமையை உணர்ந்தார். அது மாதிரி அப்பாவின் அருமை உணர்த்தும் ஓரிரு காட்சிகள் இந்தப் படத்தில் […]

Categories
சினிமா

D Ragavan -> Dragon  – திரை விமர்சனம்.

இந்த வாரம் வெளியான படங்கள் எல்லாமே பெரிய நடிகர்களோ, எதிர்பார்ப்போ, விளம்பரங்களோ இல்லாமல், தன்னை நம்பி வெளியானவை.அதாவது நல்ல கதைக்களம், திரைக்கதை அமைப்பு உடையவை போல. மிகப்பெரிய செலவு, விளம்பரம் இல்லாமல் இது அது மாதிரி தான் இருக்கும் போல என்று எதிர்பார்ப்புக் குறைவாக வந்து இன்று பல ரசிகர்களாலும் பத்துக்கு பத்து மதிப்பெண் வழங்கப்படும் படம் டிராகன். இந்தப்படத்தின் இயக்குனர் மாரிமுத்து அவர்கள், கதைக்கு மெனக்கெடவில்லை. தனது முந்தைய படமான ஓ மை கடவுளே படத்தின் […]

Categories
சினிமா

விடாமுயற்சி- விமர்சனம்

ஆயிரம் வெற்றிகளைக் கண்டவன் அல்ல நான்.ஆயிரம் தோல்விகளைக் கண்டவன். இது ஆயிரத்து ஒன்று என்று கூட சொல்லலாமோ? விடாமுயற்சி, வினையாக்கியதா ? பெரும்பாலான ரசிகர்களுக்கு இது வீண் முயற்சியாகத்தான் தோன்றுகிறதோ? ஆம்.ஹாலிவுட் தரத்திலான படம் தான். ஆனால் படத்தின் நீளம்? 151 நிமிடங்கள். 151 நிமிடங்கள் இருக்கும் ஹாலிவுட் படங்களில் ரசிகர்களைக் கட்டி வைத்திருக்க வேறு ஏதோ ஒரு மாயம் உள்ளே இருந்திருக்கும். ஆனால் இந்தப்படத்தில் அந்த மாயம் உள்ளே இருந்தது போலத் தோன்றவில்லை. எல்லாம் கொஞ்சம் […]

Categories
சினிமா

யாரு படம் ஓடினாலும், ஹீரோ நாங்கதான்

தமிழ் சினிமாவில் எப்போதுமே இருபெரும் நடிகர்கள் மிகப்பிரபலமாகக் கோலோச்சுவார்கள். அவர்களின் ரசிகர்களுக்கிடையிலும் வாய்ச் சண்டையில் துவங்கி கைகலப்பு வரையெல்லாம் நிகழும். அப்படி முந்தைய கருப்பு வெள்ளை காலத்தில் எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன் அடுத்த தலைமுறையில்ரஜினி- கமல். அவர்களைத் தொடர்ந்து அவர்கள் இடத்தில் தற்போது கோலோச்சும் இரு துருவங்கள் விஜய்- அஜித். முந்தையவர்கள் காலத்தை விட இவர்கள் காலத்தில் இணைய வளர்ச்சி காரணமாக இவர்களது ரசிகர்களுக்கிடையே வாய்க்காதகராறு சிறிதே அதிகம் தான். இவர்கள் படம் நேரடியாக மோதிக்கொண்டாலும் […]

Categories
சினிமா

குடும்பஸ்தன்- திரை விமர்சனம்

சில நேரங்களில் நாம் கறி எடுத்துப் பக்குவம் பார்த்து, பல மசாலாவகைகளையும் சேர்த்து சேர்த்து சமைக்கும் உணவை விட, சும்மா 2 வெங்காயம், 2 தக்காளி போட்டு செய்த உணவு அட்டகாசமாக அமைந்துவிடும். அதுபோலத்தான் எதுவுமே அலட்டிக்கொள்ளாமல்,பெரிய நடிகர்கள், மிகப்பெரிய சுவாரஸ்யமான கதைக்களம், என்று எதுவுமே இல்லாமல் நமது அன்றாட வாழ்க்கையை நமக்கே படமெடுத்துக்காட்டி, இப்படித்தான்டா நம்ம வாழ்க்கை எல்லாம் சிரிப்பா சிரிக்குதுன்னு படம் முழுக்க சிரிப்பா சிரிக்க வச்சு, இறுதியில், என்றாவது ஒரு நாள் எல்லாம் […]

Categories
சினிமா

வணங்கான்- திரை விமர்சனம்

பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் மிகப்பெரிதாக பேசப்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான ரசிகர்களின் மனதைக் கவர்ந்த வணங்கான் படத்தைப்பற்றிய ஒரு அலசல். இயக்குனர் பாலா என்றாலே, அவரது படங்கள் இது மாதிரித்தான் என்ற ரீதியில் மக்களின் மனதில் ஆழமாகவே பதிந்து விட்டது. அதற்கு சற்றும் சளைக்காத விதமாகத்தான் இந்தப்படமும் துவங்கியது. மிக எளிமையான அடிமட்ட மக்களைக் கதையின் நாயகர்களாக இவர் காட்டும் அந்த தனிச்சிறப்பு இந்தப்படத்திலும் மாறவில்லை. ஆனால் இவரது இந்தப்படத்தில் கதநாயகி அழகாக விதவிதமான வேடங்களில் வருகிறார். […]

Categories
சினிமா

கேம் சேஞ்சர்- திரை விமர்சனம்

பொங்கலுக்கு வந்த படங்களில் பிரம்மாண்டமானதாக பெரிய பட்ஜெட்டில் தமிழில் ஏதும் வராவிட்டாலும், தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் தெலுங்கில் இயக்கிய கேம் சேஞ்சர் தமிழிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. தமிழில் போதுமான போட்டிப்படங்கள் இல்லாத காரணத்தால் இந்தப்படம் பெரும்பான்மையான திரையரங்குகளை ஆக்கிரமித்தது. தமிழ் மக்களும் இயக்குனர் மீதான கோபத்தை மறந்து வேறு வழியில்லாமல் இந்தப்படத்தைப் பார்த்தாக வேண்டிய கட்டாயம். ராம்சரணையும் சமீபத்தில் சில பெரிய டப்பிங் படங்களில் பார்த்துப் பழகி அவரையும் ஏற்றுக்கொண்ட காரணத்தால் தமிழ் […]