இதற்கு முன்பு வெளிவந்த கடன் எனும் பகாசூரன் வாசிக்க… சிறிது காலத்திற்கு முன்பு வரை புழக்கத்தில் இல்லாத இந்த மொபைல் அல்லது கைபேசி, இப்போது ஒரு வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ இருக்கிறது. தகவல் தொடர்பு முன்னேற்றம், உலகம் நம் கையில் என்று மார்தட்டிக் கொண்டாலும் அதில் பல பிரச்சினைகளும் உள்ளது. மொபைல் மனிதர்களின் நேரத்தை, குறிப்பாக நெருக்கத்தை எடுத்துக்கொள்கிறது. மொபைலுக்கு அடிமை ஆகிப்போகும் மனிதன் சக மனிதனை முகம் கொடுத்துப் […]
Category: அறிவியல்
கருப்பை வாய் புற்றுநோய் (cervical cancer) எனப்படும் நோய் மாதவிடாய் முடிந்த பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு கொடிய புற்றுநோய். இது மாதவிடாய் முடிந்த பெரும்பாலான பெண்களை பாதிக்கும் நோயாக கண்டறியப்படுகிறது. HPV அதாவது Human Pappiloma Virus என்ற விஷக்கிருமியால் இது உருவாகிறது. இந்த வைரஸ் இருக்கும் அனைவருக்கும் இந்த புற்றுநோய் வரும் என்பது கட்டாயமல்ல. சிலரது உடல்வாகு காரணமாக, எதிர்ப்பு சக்தி அந்த வைரஸ் கிருமிகளை அழித்து விடுகிறது. புகை பழக்கம், பாலியல் தொடர்பு, […]
அறவியல், இயற்பியல் படித்த அனைவரும் கடந்து வந்திருக்கக்கூடிய சொல்தான் இந்த விடுபடு திசைவேகம். ஆங்கிலத்தில் escape velocity என்று சொல்லப்படும். புவியிலிருந்து நாம் எந்தப்பொருளைத் தூக்கி எறிந்தாலும் அது சிறிது உயரத்தை அடைந்து விட்டு திரும்ப புவியை நோக்கி வந்தடையக் காரணம், புவியின் ஈர்ப்பு விசை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படி மேலே எறியப்பட்ட பொருள் கீழ்நோக்கித் திரும்ப வராமல் மேலே புவி வட்டத்தை விட்டு சென்று விட வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் […]
முதலை தெரியும் அதென்ன அதலை? ஆம் இதுவும் முதலை போலத்தான்.சத்தமில்லாமல் திடீரென வெளிப்படும், ஆனால் மிக சக்தி வாய்ந்தது. அடேங்கப்பா , பில்டப் எல்லாம் பயங்கரமா இருக்கே என்று வியப்பு வருகிறதா? பில்டப் மிகையல்ல. இந்த அதலைக்காய் ஆனது வருடம் முழுக்க கிடைக்கும் பொருளல்ல.சீசன் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைப்பது. மீதி நேரங்களில் இதன் விதைகள் மண்ணுக்குள் உயிரோடு இருந்து மண் ஈரமாகும் மழைப்பருவங்களில் மட்டுமே வயல் வெளிகளிலும் மற்ற செடிகளிலும் கொடியாகப் படர்ந்து […]
கீலிங் வளைவு, பூமியின் வளிமண்டலத்தில் ஆண்டுதோறும் திரளும் கரியமிலவாயு (CO2) அளவீட்டை விளக்கும் ஒரு தரவு. கரியமிலவாயு எப்படி உருவாகிறது? உலகின் அத்தனை ஜீவராசிகளும் உயிர் வாழ இன்றியமையாத சுவாசம் ஆனது உயிர் வாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளிவிடும் முறையில் தான் நிகழ்கிறது. செடிகளும், கொடிகளும் மரங்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.. பகல் நேரத்தில் மரங்கள் photosynthesis அதாவது ஒளிச்சேர்க்கையின் வாயிலாக கரியமிலவாயுவை உட்கொண்டு oxygen ஐ அதாவது உயிர்வாயுவை மரங்கள் வெளியேற்றுகிறது. கார்பனை பிரித்து தன் […]