கோடை விடுமுறை. வரப்போகுது கோடை விடுமுறை.துவங்கிவிட்டது பெற்றோர்களுக்குத் தலைவலி. காலையில் எழுப்பி, குளிப்பாட்டி, சோறு ஊட்டி, பள்ளிக்கூடம் அனுப்புவதைக் காட்டிலும் கடினமான காரியம் கோடை விடுமுறையில் இதுகளைச் சமாளிப்பது. என்ன செய்யலாம்?பேசாம 2 மாசம் தாத்தா, பாட்டிக்கிட்ட அனுப்பிவிடலாமா? நோ நோ மம்மி பாவம். இல்ல இவனுங்கள அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பிரலாமா?அவ கெடந்து அனுபவிக்கட்டும். இல்ல இல்ல, நம்ம இதுகள பத்து நாளைக்கு அனுப்பினா, அவ அந்த ரெண்டு பிசாசுகளையும் 20 நாளைக்கு இங்க அனுப்பிருவா. […]
