தமிழ் படங்களில், ஏன் தென்னிந்திய படங்களில் ஒரு புதிய முயற்சியாக இந்தப்படம் முழுநீள வண்ணப் படமாக வந்த முதல் படம், அலிபாபாவும் நாற்பது திருடர்களும். அதற்கு முன்பெல்லாம் கருப்பு வெள்ளை படங்கள் தான். இந்த வண்ணப்படமானது Gevacolor என்ற முறையில் படமாக்கப்பட்டது.Gevacolor என்பது பெல்ஜியத்தில் கேவர்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட ஓடும் படத்தை வண்ணப்படமாக்கும் உத்தி. இந்தப்படமானது இந்தியில் வந்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் ரீமேக். The Arabic Nights என்ற புத்தகத்தில் வந்த கதையை மையமாக […]
Author: அருண் பாரதி
திரைப்படம் என்பது பெரும்பாலான சாமானிய மக்களின் பொழுதுபோக்கு என்றாலும், அது வெறுமனே பொழுதுபோக்கு என்ற ரீதியில் மறந்து விடக்கூடியதல்ல. ஒவ்வொரு திரை ரசிகரின் மனதிலும் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தும் திரைப்படத்துறையில் சாதித்தவர்களின் நினைவுகளும் நம்மில் நிலைத்திருப்பது என்னவோ உண்மை. அப்படியான ஒரு திரை ஜாம்பவான் இயக்குனர் சத்யஜித்ரே. யதார்த்தமாக ஒருவர் ஏதாவது திரைப்படத்தைப்பற்றி விமர்சிக்கும் போது, மனசுல பெரிய சத்யஜித்ரே்னு நினைப்பு என்று சொல்லப்படுவது உண்டு. ஏனென்றால் அவர் இயக்குனரோடு அல்லாமல் திரை விமர்சகராகவும் இருந்தவர். மேலும் […]
நடிகர் திலகம், சிம்மக்குரலோன், நடிப்புச் சக்கரவர்த்தி திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பங்களிப்பில்லாமல் தமிழ் சினிமாக்களை நினைவு காண முடியுமோ? “வரி , வட்டி , திரை , கிஸ்தி” என்று கம்பீரமான வீரபாண்டிய கட்டபொம்மனாக நம் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும் கணேசமூர்த்தி ஆகிய சிவாஜி கணேசனுக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்த்து தான் நடிப்பில் ஈடுபாடு வந்தது. அந்த ஈடுபாடு, ஏழு வயதில் பெற்றோருக்குத் தெரியாமல் நாடக சபையில் போய் இணையும் அளவிற்கு லட்சியமாக உருவெடுத்தது. சிறுவயதிலேயே […]
சினிமா மற்றும் ஆன்மிகம் தான் இன்று கோடிகளில் பணம் கொழிக்கும் தொழில்துறை அல்லாத இரு துறைகள் என்பது மறுக்க முடியாத உண்மை. சினிமா ஆவது பல கோடிகளில் செலவு செய்து பல மனிதர்களின் உழைப்பில் உருவாகி திரையில் ஓடி மக்கள் மனதைக்கவர்ந்தால் தான் வெற்றியும் பணமும். ஆன்மீகம் அப்படி இல்லை. பழனிக்குச் சென்றால் பயனுண்டு, திருப்பதி சென்றால் திருப்பமுண்டு, ஐயப்பனைக்கண்டால் ஆனந்தமுண்டு என்று நம்பி அங்கே சென்று அழுது புரண்டு தங்கள் பிரார்த்தனைகளைக் கொட்டும் எத்தனை பக்தர்களுக்கு […]
கல்வித்தந்தை காமராஜர், தன்னால் ஏழ்மை காரணமாகப்படிக்க முடியாமல் போனது மாதிரி தம் ஆட்சி காலத்தில் ஏழ்மை காரணமாக படிக்க இயலவில்லை என்று ஒரு குழந்தையும் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணியவர்.
பெரும்பாலான மக்களுக்கு சொந்தமில்லாததாக இருந்தாலும் அனைவரது நினைவுகளிலும் நிலைத்து நிற்கும் மாருதி 800 என்ற மகிழுந்தைப் பற்றி ஒரு முறை பின்னோக்கிப் பார்க்கலாம். 1983 முதல் 2014 வரை பல நடுத்தர குடும்ப மக்கள் எளிமையாக சொந்தம் கொண்டாடிய வாகனம் இந்தியா மற்றும் பல நாடுகளைச் சேர்த்து கிட்டதட்ட 30 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை ஆன மாடர்ன் ரக கார். அதாவது பியட் பத்மினி, அம்பாசிடர் கார்களை ஒப்பிடும் போது மாருதி 800 தான் நவீன மகிழுந்து. […]
இந்தியாவின் முதல் கடற்பாலம் என்ற பெருமையோடு அல்லாமல் 2010 மும்பையின் பாந்த்ரா பாலம் திறக்கப்படும் வரை, மிக நீளமான பாலம் என்ற பெருமையையும் தன்னுள்ளே தக்கவைத்திருந்த பாலம்.
குருபக்தி, குட்டி கதைகள்
குருபக்தியை நினைவுறுத்தும் விதமாக சிறுகதைகளை பெரியவர்கள் சொல்வதுண்டு. நினைவுகள் வாசகர்களோடு அப்படியான இரு கதைகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்.
உலகில் மிகப்பிரம்மாண்டமாக பல சிலைகள் வந்துவிட்ட போதிலும், இந்தியாவின் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலை விண்ணை முட்டும் உயரத்தை அடைந்தாலும் , இவையெல்லாம் சமீப காலத்தில் உருவானவை, அல்லது 20 ஆவது நூற்றாண்டில் உருவானவை. இவற்றுக்கெல்லாம் முன்மாதிரியான சிலை, அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை (statue of liberty). பிரம்மாண்டம், மிகப்பிரம்மாண்டம் எல்லாம் பழக்கத்தில் இல்லாத பொறியியல் முன்னேற்றம் வெகுவாக இல்லாத 1886 ஆம் ஆண்டிலேயே 305 அடி உயரத்துக்கு ஒரு வெண்கல சிலை […]
பார்க்கலாம் இந்த இந்தியன் நம் நினைவுகளில் குடியிருக்கும் அந்தப்பழைய இந்தியனுக்கு ஈடு கொடுப்பாரா என்று.
நினைவுகள் வாசகர்களோடு இந்தியனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற அந்த சிறிய மனசந்தோஷத்தை நீவிரும் பெற விரும்புகிறோம்.