தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம் குறள் 305, திருவள்ளுவர் இந்த திருக்குறள் அறத்துப்பாலில், துறவறவியலில் வெகுளாமை என்ற தலைப்பில் வருகிறது. கோபத்தை கட்டுப்படுத்தாத மனிதன் அந்த கோபத்தால் தானே அழிகிறான் என்ற பொருளைக் கொண்டது. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க –தன்னை ஒருவன் காக்க விரும்பினால், அவன் சினம் ( கோபத்தை) கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். காவாக்கால்– அப்படி கட்டுப்படுத்த இயலாத காலத்தில் தன்னையே கொல்லுஞ் சினம்– அந்த சினம் அவனையே கொன்று விடும். இதையே […]
Author: அருண் பாரதி
விஞ்ஞானமும், அறிவியலும் வெண்டைக்காய் தக்காளி போல பழகிப்போன இந்த நாட்களில் கூட நாம் புருவம் உயர்த்தி அதிசயிக்கும் வகையில் முன்னோர்களின் சில கட்டடக் கலைகள் இருக்கத்தான் செய்கின்றன. தஞ்சை பெரிய கோவிலின் கட்டிட அறிவியலைப்பதிவிட்டு அதிசயித்த நமக்கு இன்னொரு அதிசயமும் பரிட்சையமானது. அது தற்போதைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில், நால்கோடா மாவட்டம் பனகல் என்ற பகுதியில் அமைந்திருக்கும் சாயா சோமேஸ்வரர் ஆலயம். இது குன்டுரு சோடாஸ் (தெலுங்கு சோழர்கள்) […]
EMI – Equated Monthly Installment, எனும் கொடிய கிருமி உருவெடுக்கும் முன்னரே கைமாத்து, கடன் போன்ற விஷயங்கள் புழக்கத்தில் இருந்து வந்த ஒன்று தான். அதாவது மாத ஊதியத்தைக்காட்டிலும் அதிகமாக ஏதாவது தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும் போது இவ்வாறான கைமாத்துகள் அல்லது வட்டிக்கு கடன் வாங்குதல் போன்றவை புழக்கத்தில் இருந்த ஒன்று. இப்படி கடன் வாங்கும் போது ஏற்படும் பிரச்சினை என்னவென்றால் வட்டி. பெரிய தொகை ஒன்றை தேவைக்கென வாங்கிவிட்டு, அந்தத் தொகைக்கான வட்டியை […]
முதலை தெரியும் அதென்ன அதலை? ஆம் இதுவும் முதலை போலத்தான்.சத்தமில்லாமல் திடீரென வெளிப்படும், ஆனால் மிக சக்தி வாய்ந்தது. அடேங்கப்பா , பில்டப் எல்லாம் பயங்கரமா இருக்கே என்று வியப்பு வருகிறதா? பில்டப் மிகையல்ல. இந்த அதலைக்காய் ஆனது வருடம் முழுக்க கிடைக்கும் பொருளல்ல.சீசன் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைப்பது. மீதி நேரங்களில் இதன் விதைகள் மண்ணுக்குள் உயிரோடு இருந்து மண் ஈரமாகும் மழைப்பருவங்களில் மட்டுமே வயல் வெளிகளிலும் மற்ற செடிகளிலும் கொடியாகப் படர்ந்து […]
உலகின் எட்டாவது அதிசயமாக தகுதியானதென போற்றப்படும் தமிழனின் பெருமையைப்பரைசாற்றும் கட்டிடக்கலையமைப்பைக் கொண்ட மிகப்பெருமையான தஞ்சை பெரியகோவிலைப்பற்றி சிறிது விளக்கமளிக்க நினைவுகள் பக்கமும் பெருமை கொள்கிறது.
பிரியாணி, பெரும்பாலான நபர்களால் விரும்பி சாப்பிடப்படும், அல்லது அவ்வாறு ஒரு மாயையைக் கொண்டிருக்கும் பிரபல உணவு வகை.இது உண்மையிலேயே பெரும்பாலான நபர்களால் விரும்பி உண்ணப்படுகிறதா என்ற கேள்விக்கு ஆதாரமாக, ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிடப்படும் உணவு வகை பிரியாணி என்றே கூறப்படுகிறது. பிரியாணி என்பது ஈரான் நாட்டில் உருவாகி இப்போது தெற்கு ஆசியப்பகுதியில் இருக்கும் பிரபல உணவு. பிரியாணி என்ற வார்த்தை அரிசி என்பதைக் குறிக்கும் பிரிஞ்ச் என்ற பெர்சிய வார்த்தையிலிருந்தோ, அல்லது பிரியன் அ […]
காதல் என்பதைக் கடந்திராதோரும் உளரோ? காதல் தோல்விகளும், நமக்குப் பிடித்த பெண், சூழ்நிலை காரணமாக வேறொருவன் கை பிடிப்பதைப் பார்க்கும் அவலநிலையும் இங்கே பலருக்கும் புதிதல்ல. அப்படி ஒரு சூழலுக்கு எழுதப்பட்ட அருமையான பாடல் வரிகளை நினைவுகள் வாசகர்களோடு ஒரு முறை பகிர்ந்து கொண்டு ரசித்து தோல்வியை நினைத்து உருகுவதில் சுகமடைகிறோம். கல்யாணம் முடிந்து மகிழ்ச்சி இல்லாமல் போகும் அந்தப் பெண் ,அவள் காதலை நினைத்து வருந்துகிறாளோ? அல்லது பெற்றவர்களை , ஊரைப்பிரிந்து புது இடம் புகுவதால் […]
நேற்று ஒரு சின்ன வேலையாக பெங்களூர் வரை சென்று ஒரே நாளில் சென்னை திரும்ப வேண்டியிருந்தது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இரவு தாமதமாக புறப்படும் ரயிலில் முன்பதிவு செய்து விட்டால் வசதி என்று எண்ணி பெங்களூருவில் கிளம்பி, சென்னை பெரம்பூர் வழியாக பாட்னா செல்லும் SMVB – DNR SPL ரயிலில் முன்பதிவு செய்து ரயில் நிலையத்தை நோக்கி பாதிக்கு மேற்பட்ட தூரம் பயணித்த போது, யதார்த்மாக ப்ளாட்பார்ம் நம்பரும், கோச் பொஷிஷனும் சரிபார்க்கலாம் என யத்தனித்தால், […]
உலகில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு தன்னிறைவு அடைதல், அல்லது உச்சநிலை என்பது இருக்கும். ஆங்கிலத்தில் destination என்று எளிமையாக சொல்லலாம். அப்படி ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்குமான destination ஒலிம்பிக்ஸ் என்பதில் மாற்றுக்கருத்தல்ல. ஒலிம்பிக்ஸ் என்பது கிரிக்கெட் மாதிரியான பைத்தியக்கார ரசிகர்களை கொண்டிருக்கவில்லை. விளம்பரத்தில் பணம் சம்பாதிப்பது மட்டும் நோக்கமாக தெரியவில்லை. அதற்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. பண்டைய கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில், சேயுசு கோவிலடியில் சமய விழாவாகத் துவங்கிய இந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று […]
வீட்டிற்கு ஒன்று துவங்கி 4,5 என நீளும் பட்டதாரிகளின் எண்ணிக்கை,ஆரோக்கியமானது என்றாலும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் வழிவகுக்கிறது. கல்வி கிடைப்பதற்காக உருவாக்கப்பட்ட வசதிகள், நடவடிக்கைகள் வேலைவாயப்புக்கு சரிவர செய்யப்படவில்லையோ, அல்லது இடைவெளி நிரப்பப்படவில்லையோ என்பதை நாம் வேறொரு கட்டுரையில் பார்க்கலாம். இந்தக் கட்டுரையில் நேர்காணலுக்கு எப்படித்தயாராக வேண்டும் என்று தற்போது பரவலாக நடக்கும் வேடிக்கைகளைப் பற்றி பார்க்கலாம். முதலில் இந்த நேர்காணல் கூற்றுகள் ஐடி நிறுவனங்களில் துவங்கியது. இன்று மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் வரை வந்து விட்டது. […]