நிலைகுலைந்து வரும் பொது ஒழுக்கம். தனிமனித ஒழுக்கம் அல்லது பொது ஒழுக்கம் என்பது தற்போது பரவலாக வெகுவாக நிலைகுலைந்து வருகிறது. தண்ணீரை வீணாக்குவது, குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவது, போக்குவரத்து விதிமுறைகளில் அத்துமீறல், இப்படி சிறிய விஷயங்களில் துவங்கி, குறைந்த மதிப்பீட்டில் பத்திரப்பதிவு, வருமான வரி ஏய்ப்பு என்று பெரிய விஷயங்கள் வரை பொது மக்கள் தங்கள் சுய மற்றும் பொது ஒழுக்கத்தில் தவறி தான் இருக்கிறார்கள் என்பது 100 சதவீத உண்மை. ஒரு அரசு அதிகாரி, […]
Author: அருண் பாரதி
கருப்பை வாய் புற்றுநோய் (cervical cancer) எனப்படும் நோய் மாதவிடாய் முடிந்த பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு கொடிய புற்றுநோய். இது மாதவிடாய் முடிந்த பெரும்பாலான பெண்களை பாதிக்கும் நோயாக கண்டறியப்படுகிறது. HPV அதாவது Human Pappiloma Virus என்ற விஷக்கிருமியால் இது உருவாகிறது. இந்த வைரஸ் இருக்கும் அனைவருக்கும் இந்த புற்றுநோய் வரும் என்பது கட்டாயமல்ல. சிலரது உடல்வாகு காரணமாக, எதிர்ப்பு சக்தி அந்த வைரஸ் கிருமிகளை அழித்து விடுகிறது. புகை பழக்கம், பாலியல் தொடர்பு, […]
நினைவுகளுக்கும் இந்த நாளுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. நம்மை விட்டுப் பிரிந்தாலும் நம் நினைவுகளை விட்டு நீங்காமலிருக்கும் நம் முன்னோர்களை நினைத்துக்கொள்ளும் முக்கியமான நாள். தர்ப்பணம் கொடுப்பது, வீட்டிலே படையல் போட்டு பூஜை செய்வது என்று இன்றைய நாளில் இறந்து போன தாத்தா பாட்டி உட்பட அனைவரும் நம் நினைவில், நம் வார்த்தைகளில் ஒருமுறை வந்து போகாமல் இருப்பதில்லை. ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதில் மிக முக்கிய அமாவாசை ஆக கருதப்படுகிறது. புரட்டாசி, தை மாதங்களிலும் தர்ப்பணம் […]
சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் வரை உயர இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தொழில் வரி என்பது நாம் அனைவரும் செலுத்தும் மாநில அரசின் வரி. தொழில் வரி என்றால் வியாபாரம் செய்பவர் அல்லது தொழில் செய்பவர் மட்டுமே கட்டும் வரி என்பதல்ல பொருள். ஒவ்வொரு தொழிலாளியும், முதலாளியும் அவரவர் வருமானத்திற்கு ஏற்ப கட்டும் வரி. உதாரணத்துக்கு, நான் ஒரு மிகப்பெரிய உணவகத்தில் சர்வராக வேலை செய்து மாதம் ரூ 20,000 சம்பளம் பெறுகிறேன் எனில் […]
பிடித்த வேலையோ, பிடிக்காதவேலையோ, ஆத்மார்த்தமாக செய்ததோ அல்லது அலுவலுக்காக செய்ததோ, நேர்மையாக இருந்தார்களோ ஏமாற்றினார்களோ. எப்படி இருந்தாலும் ஒரு மனிதனின் ஆன்மா, ஆழ்மனது, ஒரு வேலையை தொடர்ந்து செய்யும் போது அதற்கு அடிமையாகி விடுகிறது.
குறளுடன் குட்டி கதை -பொறையுடைமை
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ். குறள் 156, திருவள்ளுவர் அதாவது ஒருவர் செய்த தீங்குக்காக அவரை தண்டித்தவருக்கு அந்த ஒரு நாள் தான் இன்பம். ஆனால் அதைப் பொறுத்துக் கொண்டவருக்கு , இந்த உலகம் அழியும் வரை புகழ் உண்டாகும். இந்த திருக்குறளை நம்மாளு ஒருத்தரு கொஞ்சம் வித்தியாசமா புரிஞ்சிக்கிட்டாரு. எப்படின்னு விளக்கமா இந்தக் கதை மூலமா தெரிஞ்சிக்கோங்க. நம்மாளு விமான நிலையத்துல வேலை செய்யிற ஆளு. இந்தக்காலம் மாதிரி இல்ல, அந்தக்காலத்துல, அதாவது […]
பச்சையப்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(பச்சையப்ப முதலியார்) பச்சையப்பனாக மாறிவிட்டார். கல்வி ஒரு சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றத்தால் அந்தக்கல்விக்கு நிதியளித்த வள்ளல் பெருமானாரின் சாதி பெயரையும் மறைக்கும் அளவிற்கு ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தத் தொன்மையான, பெருமைக்குரிய, புகழ்மிக்க கல்லூரியை, பல சினிமா படங்கள் ரவுடிகள் வளர்ப்பு மையமாகவும், கற்பழிப்புக்கு காற்றோட்டமான இடமாகவும், கஞ்சா குடிக்க ஒதுக்குப்புறமான இடமாகவும், மாறி மாறி காறி காறி துப்பித் தள்ளிவிட்டார்கள். அதன் உண்மையான தொன்மையையும், பெருமையையும் பார்த்தோமானால் இந்தக்கல்லூரி […]
1984 ல் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு த்ரில்லர் படமா என்று வியக்க வைக்கும் ஒரு தமிழ் திரைப்பட பொக்கிஷம். மணிவண்ணன் இயக்கத்தில், விஜயகாந்த், மோகன், நளினி மற்றும் சத்யராஜ் அவர்களின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம். கிட்டதட்ட ஒரு திகில் படத்தைப்பார்த்த உணர்வும் இந்தப்படம் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும். இத்தாலியில் 1977ல் வெளிவந்த sette note in Nero (Seven Notes in black) என்ற திரைப்படத்தின் தழுவலாக தமிழில் நூறாவது […]
நினைவுகளில் இருந்து நீங்காமலிருக்கும் சில விஷயங்களில் ஒன்று சாப்பாடு. சோறு தான் சார் முக்கியம் என்று வாழும் பல உன்னத ஜீவன்களுக்கு இது சமர்ப்பணம். நம் அனைவருக்கும் என்றோ, எங்கேயோ, எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவு, அது நிகழ்ச்சி விருந்தாகவோ, கோவில் திருவிழா பந்தியாகவோ அல்லது உணவக விருந்தாகவோ கூட இருந்திருக்கலாம், அது என்றும் இனிய நினைவு தான். அப்படி இங்கே பலரும் கடந்து வந்திருக்கக் கூடிய இனிய உணவு உபசாரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் […]
அறவியல், இயற்பியல் படித்த அனைவரும் கடந்து வந்திருக்கக்கூடிய சொல்தான் இந்த விடுபடு திசைவேகம். ஆங்கிலத்தில் escape velocity என்று சொல்லப்படும். புவியிலிருந்து நாம் எந்தப்பொருளைத் தூக்கி எறிந்தாலும் அது சிறிது உயரத்தை அடைந்து விட்டு திரும்ப புவியை நோக்கி வந்தடையக் காரணம், புவியின் ஈர்ப்பு விசை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படி மேலே எறியப்பட்ட பொருள் கீழ்நோக்கித் திரும்ப வராமல் மேலே புவி வட்டத்தை விட்டு சென்று விட வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் […]