குஜராத் மாடல். இந்த வார்த்தை ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சை.அதாவது குஜராத் மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகப் பல துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பதாகத் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 4 முறை இருந்தபோது கூறப்பட்டது. அதாவது அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், சூரிய ஒளியில் மின்சாரம் அபிரிமிதமாகத் தயாரிக்கும் மாநிலமாகவும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் தரப்பட்டு தொழில் முன்னேற்றமடைந்த மாநிலமாகவும் பேசப்பட்டது. அப்போதைய காலகட்டத்திலேயே விகடனில் […]
Author: அருண் பாரதி
கேம் சேஞ்சர்- திரை விமர்சனம்
பொங்கலுக்கு வந்த படங்களில் பிரம்மாண்டமானதாக பெரிய பட்ஜெட்டில் தமிழில் ஏதும் வராவிட்டாலும், தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் தெலுங்கில் இயக்கிய கேம் சேஞ்சர் தமிழிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. தமிழில் போதுமான போட்டிப்படங்கள் இல்லாத காரணத்தால் இந்தப்படம் பெரும்பான்மையான திரையரங்குகளை ஆக்கிரமித்தது. தமிழ் மக்களும் இயக்குனர் மீதான கோபத்தை மறந்து வேறு வழியில்லாமல் இந்தப்படத்தைப் பார்த்தாக வேண்டிய கட்டாயம். ராம்சரணையும் சமீபத்தில் சில பெரிய டப்பிங் படங்களில் பார்த்துப் பழகி அவரையும் ஏற்றுக்கொண்ட காரணத்தால் தமிழ் […]
மத கஜ ராஜா- விமர்சனம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்கள் எதுவும் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதை நாம் ஏற்கனவே பேசியிருந்தோம். இருந்தாலும் ஒரு சினிமா ரசிகனாக பொங்கல் படங்களை பார்க்காமலா விடப்போகிறோம். அந்த வரிசையில் பொங்கலுக்கு வெளியான படங்களில் மிகவும் பாவப்பட்ட படமான மதகஜராஜாவைப் பார்த்தாயிற்று. கிட்டத்தட்ட 12 வருடங்களாக பெட்டியில் அடைபட்டுக்கிடந்த சினிமா இன்று திரையரங்குகளில் இன்றைய பொங்கல் படத்திற்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதே நமக்குப் புரிய வைக்கிறது, இப்போதைய பொங்கல் படங்கள் எவ்வளவு மோசம் என்று. இப்போதைய […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 ஆவது ஊதியக்குழு நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆம். தற்போது 7 ஆவது ஊதியக்குழு நியமித்தபடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு, அடுத்த ஊதியக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழு நியமிக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆக இருப்பதால், 2026 முதல் பண வீக்கத்தின் அடிப்படையில் புதிய ஊதிய விகிதம் முடிவு செய்யப்பட்டு அதன்படி ஊதியம் வழங்கப்படும். இது நல்ல விஷயம் தான். இளம் வயதில் முறையாக சிந்தித்து […]
சுங்கச்சாவடியின் பயன்கள்
சுங்கச்சாவடிகள். பொதுவாக சுங்கச்சாவடிகள் என்றாலே வெறுப்பு தான். என் பணம் வீணாப் போகுது. ஏற்கனவே சாலை வரிகள் எல்லாம் கட்டிதானே வண்டிய வாங்கினேன்.இதுல இப்ப இதுக்கு வேற ஏன் தனியா நான் பணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வியில் துவங்கி, சுங்கச்சாவடிகளில் இனி பணம் ரொக்கமாக செலுத்தக் கூடாது, அனைத்து வண்டிகளிலும் பாஸ்டேக் அட்டை நிச்சயம் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் வரை எப்போதும் சுங்கச்சாவடிகள் என்றாலே மக்களுக்கு எரிச்சல் தான். மேலும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து […]
2025 பொங்கல் – கலையிழந்த திரையரங்குகள்
பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களில் புது சினிமாவும் ஒரு முக்கிய அங்கம். அதுவும் பொங்கல் பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும்? தீபாவளி கூட ஒரு நாள் கூத்து தான். ஆனால் பொங்கல் அப்படியல்ல. கண்டிப்பாக குறைந்தபட்சம் 3 நாட்களாவது விடுமுறை இருக்கும் என்பதால் பொங்கலுக்கு இறங்கும் படங்கள் அதிகம். பண்டிகை வரும் முன்பே படங்கள் வெளியாகி பண்டிகைகளைத் துவங்கி வைத்த எண்ணத்தை உருவாக்கி விடும். எஸ் தலைவன் படம் முதல் நாளில் 300 கோடி வசூல், அமெரிக்காவில் ஐம்பது […]
தை பிறந்தால்?
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கு இன்றளவிலும் பொதுமக்களால் நம்பப்படுகிறது. விவசாயம் என்பது பிரதான தொழிலாக இருந்த போது, அறுவடை முடிந்து தை மாதம் அனைத்தையும் கடவுளுக்கும் சூரியனுக்கும் படைத்து வழிபட்ட பிறகு, விளைச்சலை விற்றுப் பணமாக்கி, அதன்மூலமாக வருவாய் ஈட்டுவது வழக்கம். அதனால் தான், தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற சொல்லாடல் வந்தது. தைப் பொங்கல் என்பது தமிழனின் சிறப்பான பண்டிகை, மாட்டுப் பொங்கல் என்பது விவசாயத்திற்கு உற்ற துணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி […]
நமது கடந்த பதிவு ஆம்னிப் பேருந்தின் கட்டணக் கொள்ளை. அதன் விளைவு, பண்டிகைகளுக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது சற்று சிரரமமான காரியமாகி விட்டது. அரசுப்பேருந்துகளிலும் ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. டீலக்ஸ் ரக சிறப்புப் பேருந்துகள் இருந்தாலும் கூட, ஒரு சில மக்களுக்கு அந்தக் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டாம் என்ற எண்ணம். மகிழுந்து அதாவது கார் வைத்திருக்கும் மக்கள் ஆம்னிப் பேருந்தின் கட்டணத்தை மனதில் கொண்டு, 4 பேர் காரில் பயணித்தால், ஆம்னிப்பேருந்து கட்டணத்தை […]
பண்டிகைகள் வந்தாலும் போதும் இந்த ஆம்னிப் பேருந்துகளுக்குக் கொண்டாட்டம் தான். பொங்கலையே நம்பியிருக்கும் கரும்பு விவசாயிகள் வாழ்க்கை விடிவதாயில்லை. மஞ்சள் விளைவிப்பனிடம் பேரம், காய்கறி விலை ஏறினால் காட்டம் காட்டும் பொதுமக்கள், இந்த ஆம்னிப் பேருந்தின் கட்டணக் கொள்ளைக்கு விடிவு காலம் வராதா என்று ஏங்கினால் மட்டும் போதாது. எப்படி தக்காளி விலை கட்டுபிடி ஆகாத காலத்தில் தக்காளியைத் தவிர்க்கிறோமோ, அதே போல முருங்கைக்காய் விலை உயரும் போது, முருங்கைக்காய் இல்லாம சாம்பார் ருசிக்காதா என்று பழகிக் […]
நாம் அடிக்கடி விமர்சிக்கும் அதிதீவிர பக்தி, அல்லது மிதமிஞ்சிய பக்தி அல்லது விளம்பரத்திற்கான பக்தி அல்லது போட்டிக்கு பக்தி, எப்படி வேண்டுமானாலும் இதை சொல்லலாம். அதன் விளைவு இன்று விபரீதமாகி இருக்கிறது. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை தரிசித்தே தீருவேன் என்று கூட்டம் கூட்டமாக ஆட்டு மந்தை போல முண்டியடித்த மக்கள். மூச்சு முட்டி இதுவரை 5 பேர் இறந்திருக்கிறார்கள்.இனியும் எண்ணிக்கை கூடலாம் என்றும் சொல்லப்படுகிறது. பலர் காயமடைந்திருக்கிறார்கள், மயங்கி விழுந்திருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறு […]