Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

நான் உண்ணும் இறைச்சி எனக்கு உகந்ததா?

இறைச்சி.

விடுமுறை நாட்கள் மற்றும் விருந்து என்றாலே பல மனிதர்களின் முதல் தேர்வு இறைச்சி தான். இவற்றின் பல வகைகளையும், இவற்றை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சிக்கன் மற்றும் மீன் இறைச்சி வகைகள் என்றால் பெரும்பாலான இறைச்சி பிரியர்களும் சமரசமாக ஏற்றுக் கொள்வார்கள்.

மட்டன் இறைச்சியை ஒரு சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. சிகப்பு இறைச்சி உடலில் இரத்தக் கொதிப்பு அதிகமாகக் காரணமாகக் கூடும் என்று காரணம் சொல்லப்படுகிறது அவர்களால். மட்டன் எனப்படும் ஆட்டிறைச்சியில் தான் உடலுக்குத் தேவையான வலிமை கிடைக்கும் என்றும் அதன் ஈரலில், மண்ணீரலில் நல்ல சத்துகள் இருப்பதாகவும் ஒரு சிலரால் விரும்பி உண்ணப்படுகிறது.

அடுத்தது மாட்டிறைச்சி. மாட்டிறைச்சி என்பது இங்கு ஒரு விதண்டாவாதப் பொருளாகவே மாறிவிட்டது.

மாட்டிறைச்சி உண்டால் நல்ல சத்து கிடைக்கும் என்றும், மாட்டுவால் சூப்பு ஆஸ்துமா நோய்க்கு அருமருந்து என்றும், ஆன்மைக்கு மருந்து என்றும் பலராலும் பல விதங்களில் சொல்லப்பட்டாலும், மதரீதியாக இங்கு மாட்டிறைச்சி என்பது மிகப்பெரிய பிரச்சினையாகவே உள்ளது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இருக்கும் அளவிற்கு மாட்டிறைச்சிக்கான மவுசு இங்கு இல்லை. காரணம் மாடு என்பது தெய்வமாக வணங்கப்படும் ஒன்றாக உள்ளது.

வீடு கட்டி குடியேறும் போது முதன் முதலில் மாடு கண்ணுக்குட்டியை வீட்டுக்குள் அழைத்து பூசை செய்யும் மக்கள் மாட்டுக்கறியை எப்படி உண்பார்கள்?

மாட்டு இறைச்சி சற்று விலை குறைவாக இருப்பதால் அது அடித்தட்டு மக்களின் மற்றும் குறிப்பிட்ட சாதிப்பிரிவின் உணவாகவே கட்டமைக்கப்பட்டுக்கொண்டு வருகிறது.

மாட்டிறைச்சி உண்பவர்களை. ஒரு சாரார், ஒரு மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்கும் அவல நிலை உள்ளது.

அடுத்தது பன்றி இறைச்சி.

பன்றி இறைச்சி என்றால் சொல்லவே வேண்டாம், கட்டாயம் அது தீண்டத்தகாத ஒன்றாகவே பல இறைச்சிப் பிரியர்களாலும் பார்க்கப்படுகிறது.

அதிலும் பன்றி இறைச்சி என்பது ஒரு சில சாதி மக்களால் மட்டுமே உண்ணப்படுகிறது, இன்றும் அதே பழக்கம் பின்பற்றப்படுகிறது.

மாட்டிறைச்சியாவது மதரீதியாக பிரிவினை இல்லாமல், முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மக்களால் உண்ணக்கூடிய இறைச்சியாக உள்ளது.
ஆனால் பன்றி இறைச்சியானது இஸ்லாமிய மதத்திலும், கிறிஸ்தவ மதத்திலும் தடை செய்யப்பட்டாலும் கிறிஸ்தவ மதத்தினர் சிலர் இந்தியாவில் மற்றும் மேலை நாடுகளில் இந்த விவரம் இல்லாமல் பன்றி இறைச்சியை உட்கொள்கின்றனர்.

இஸ்லாமிய மதத்தில் கட்டாயமாக இது தடை செய்யப்பட்டாதாக அதாவது ஹராமாக உள்ளது.

ஏன் இந்த இறைச்சியை உண்ணலாம்? ஏன் இந்த இறைச்சியை உண்ணக்கூடாது என்ற பெரிய புரிதல் இல்லாமல் சாதிய, மதப்பிரிவினைகளை மனதில் கொண்டு அந்த இறைச்சியை உண்ணும் மக்களை ஒதுக்கி வைக்கும் கண்ணோட்டத்துடன் பார்க்கும் சில மக்கள் இங்கே இருப்பது முற்றிலும் உண்மை.

இதில் மாட்டிறைச்சிக்கு இந்து மதத்தின் நம்பிக்கைப்படி மாடு நந்தியாக கடவுளாக வணங்கப்படுவதால் அது உண்ணப்படக்கூடாது என்ற கோட்பாடு உள்ளது.

பன்றி இறைச்சிக்கு ஏன் தடை, குரானும் பைபிளும் என்ன சொல்கிறது?

தொடர்ந்து நாளை பயணிக்கலாம்.

இந்த கட்டுரையின் இரண்டாம் பாகம் இங்கே.

எங்கள் ஊரின் சிறிய கசாப்பு கடையின் நினைவுகளை வாசிக்க.