Categories
சினிமா தமிழ்

தமிழ் திரைப்பட விமர்சனம் -BOAT

மனிதனை விட கொடிய மிருகமும் உண்டோ?

தப்பிப் பிழைத்து உயிருக்காக போராடிய ஒரு பாட்டிக்கும், அவர் பேத்திக்கும் இரவு முழுக்க காவல் தெய்வமாய் நின்ற யானை!

சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு செய்தி ஒரு மிருகத்தின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது.

அதேபோல் இன்னொரு செய்தியும் உண்டு. கேட்பதற்கே இனிமையானது. பசியென்று வந்த யானைக்கு அண்ணாசி பழத்தில் வெடி வைத்துக் கொடுத்த மனிதன்.

இது பரைசாற்றுவது ஒன்று தான். இந்த கேடு கெட்ட உலகில் மனிதனை விட கொடிய மிருகம் எதுவுமில்லை. அதைத்தான் அழகான ஒரு பின்னனியில் படமாக அமைத்திருக்கிறது BOAT படக்குழு.

ஆமாம் சமீபத்தில் வெளியான BOAT படத்தின் கதை இதைத் தழுவியது தான். மனிதன் சூழ்நிலை காரணமாக மிருகமாவது.

இரண்டாவது உலகப்போர் நடக்கும் காலகட்டத்தில் நகரும் திரைக்கதை. ஜப்பானியர்கள் சென்னையின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்போகிறார்கள் என்ற வதந்தி கிளம்ப, யோகிபாபுவும் அவரது பாட்டியும் தப்பிப்பதற்காக படகில் ஏறி நடுக்கடலுக்கு செல்ல கிளம்பும் போது மேலும் சிலரும் அந்தப்படகில் தஞ்சம் அடைகின்றனர்.

கடலில் போகும் போது விபத்துக்குள்ளான ப்ரிட்டிஷ் ரோந்துப்படகிலிருந்து தப்பித்த ஒரு அதிகாரியும் அந்தப்படகில் ஏறுகிறார். வெவ்வேறு குணாதிசயங்கள், பின்னனிகள் உடைய அந்த மனிதர்களுக்கு இடையே காரசார விவாதங்கள் நடக்கிறது.

ஒரு கட்டத்தில் படகு பாரம் தாங்காமல் விரிசலடைகிறது.

படகிலிருந்து 3 பேர் கடலில் குதித்தால் தான் மீதி பேர் கரையேறலாம் என்ற சூழல் வரும்போது, உயிர் மீது பற்று உடைய ஒவ்வொருவரும் நான் ஏன் சாக வேண்டும் என்று அடுத்த ஆட்களை கை காட்டுகிறார்கள். அங்கே வெளிப்படும் மிருக குணம் மேலும் மேலும் நேரம் ஆக ஆக வலுவடைகிறது.

இறுதியில் என்ன ஆனது, மனிதாபிமானம் வென்றதா, மிருக குணம் வென்றதா என்பதே கதை.

மனிதன் எப்படி சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல மாறுகிறான் என்பதை திரைக்கதையாக அமைத்த விதம் யதார்த்தம். காரசார அரசியல் விவாகதங்கள் அழகு.

நமது கேள்விக்கு ஏற்ற கதை கொண்ட படம்.

இந்த உலகில் மனிதனை விட கொடிய மிருகம் எதுவுமில்லை.

சினிமா பிரியர்கள் பழய பொக்கிஷ சினிமாக்களை பற்றி வாசிக்க…

நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.