நினைவுகளுக்கும் இந்த நாளுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது.
நம்மை விட்டுப் பிரிந்தாலும் நம் நினைவுகளை விட்டு நீங்காமலிருக்கும் நம் முன்னோர்களை நினைத்துக்கொள்ளும் முக்கியமான நாள்.
தர்ப்பணம் கொடுப்பது, வீட்டிலே படையல் போட்டு பூஜை செய்வது என்று இன்றைய நாளில் இறந்து போன தாத்தா பாட்டி உட்பட அனைவரும் நம் நினைவில், நம் வார்த்தைகளில் ஒருமுறை வந்து போகாமல் இருப்பதில்லை.
ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதில் மிக முக்கிய அமாவாசை ஆக கருதப்படுகிறது.
புரட்டாசி, தை மாதங்களிலும் தர்ப்பணம் கொடுத்தாலும் ஆடி அமாவாசை என்னவோ சிறப்பு தான்.
காரணம் இந்த மாதமே கோவில், விசேஷம், பூஜை பரிகாரங்களுக்காக ஒதுக்கப்பட்ட மாதமாகவே கருதப்படுகிறது.
சூரியனின் இடப்பெயர்வை வைத்துக்கணக்கிடும் ஜோதிட முறையில் இந்தமாதம் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமாக இருப்பதால் இறை வழிபாட்டுக்கு என்றே ஒதுக்ககப்பட்டு விட்டது. இந்த மாதங்களில் மனிதன் தனது மகிழ்ச்சிக்கான சடங்குகளை செய்வதில்லை.
மேலும் ஆடி காற்று அம்மியையும் நகர்த்தும் என்ற பழமொழி ஆடி மாதம் வீசும் காற்றின் வேகத்தை நமக்கு விவரிக்கிறது. பயிர் செய்பவர்கள் விதைகள் விதைக்கும் நாளாகவும் ஆடி 18 திகழ்கிறது.
ஆடி என்றாலே சிறப்பு தான். முன்னோர்களில் துவங்கி கோவில் கூழ் ஊத்ததுதல் வரை நமக்குப்பல நினைவுகளை அள்ளித்தரும்.
போதாக்குறைக்கு ஆஃபர்கள் கொடுத்து கொடுத்து வியாபாரிகளும் இந்த மாதத்தை நமக்கு ஒரு சிறப்பு மாதமாக ஆக்கி விட்டனர்.
இறை வழிபாடானாலும் சரி, முன்னோர்களின் நினைவானாலும் சரி அல்லது ஆஃபரில் பர்ச்சேஸ் செய்பவரானாலும் சரி ஆடி என்பது சிறப்பு தான்.
அதில் ஒரு மிகச்சிறப்பான ஆடி அமாவாசை பல நினைவுகளை நமக்கு பரிசாகத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..
ஆடி அமாவாசை நினைவுகளுடன். நினைவுகள் வாசகர்களுக்காக.
கோவில்களை பற்றி எங்கள் பிரபலமான பதிவுகளை வாசிக்க – தஞ்சை பெரிய கோவிலின் கட்டிட கலை, சாயா சோமேஸ்வர் கோவிலின் கட்டிட கலை
நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.