Categories
சினிமா

கேங்கர்ஸ்- திரை விமர்சனம்

கேங்கர்ஸ் னு ஒரு வார்த்தையே இல்லையே?
அதென்ன கேங்கர்ஸ்? கேங்ஸ்டர்ஸ் தானே?

“கேங்க்ஸ்டர்ஸ் தான் இருக்குல்ல. இது புதுசா இருக்கட்டும்.“ அப்படின்னு படத்துல ஒரு வசனம் வரும்.

அதுபோலத்தான் படம். பழசு ஆனால் கொஞ்சம் புதுசு.

ஆமாம். சற்றே குழப்பமாகத்தானே இருக்கிறது.
படத்திலும் பல காட்சிகள் அப்படித்தான் இருந்தது. எங்கயோ பாத்த மாதிரி இருக்குது, ஆனாலும் கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு.

சுந்தர் சி. ன் மசாலா நகைச்சுவை மழைச்சாரல்.
முழுநீள மசாலா நகைச்சுவைப் பட வரிசைகளில் இதுவும் ஒன்று.

புதுக்கதை எல்லாம் அல்ல. ஆனால் வழக்கமான நேர்கோட்டுப் பாதையில்லபோகும் கதையில் ஆங்காங்கே உடைக்கப்படும் சஸ்பென்ஸ் அருமை.

இதுதான் கதை இதற்காகத்தான் சுந்தர்சி ன் கதாபாத்திரம் என்று முடிவாகி படம் பயணித்து, கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் நெருக்கி, சுந்தர் சி ன் உண்மையான கதாபாத்திரம் என்ன என்பதை வெளிப்படுத்தியதும்  நல்ல ஆரவாரம்.

இரண்டு இடங்களில் நம்மை ஏமாற்றிய விதம் அருமை.

வடிவேலு சுந்தர் சி இணை, நகரம், தலைநகரம் படங்கள் போல பல காட்சிகளில் ரசித்துச் சிரிக்க வைத்திருக்கிப்பது பெரும் பலம்.

ஆரம்ப காட்சிகளில் சொதப்பினாலும், இடைவேளைக்குப் பிறகு பழைய வடிவேலுவை நாம் பார்க்கலாம். அது ஒரு அனுபவம்.

அதுவும், கேங்கர்ஸ் மிஷன் காட்சிகளில் உச்சகட்ட லூட்டி.

ஒரு பள்ளியில் நிகழும் தவறுகளை மையமாகக வைத்து ஆரம்பிக்கும் கதை, வேறு ஒரு கோணத்தில் பயணித்து, அது வேறொரு திசையயெடுத்து நியாயம் தர்மம் ஆகியவற்றை நிலைநாட்டி மீண்டும் வந்த இடத்தில் முடியும் படம்.

படம் பயணிக்கும் மூலக்கதைக்குள் பல சின்ன சின்ன விஷயங்களையும் இணைத்து, அது படம் போகிற போக்கிலேயே சரியாகும் விதமாக அமைந்திருப்பது ஒரு நல்ல முயற்சி.

கேங்கர்ஸ் ஆள் தேர்வு கலகலப்பான ரகம்.
முன்பே சொன்னபடி பல காட்சிகளில் பழைய சாயல் இருந்தாலும், இந்தக் கதையோடு ஒன்றிப் பயணித்து, நமக்குப் பொழுதுபோக்கையும் சிரிப்பையும் வரவழைத்ததில் வென்றிருக்கிறது.

குடும்பத்துடன் கண்டுகளிக்கும் குதூகலமான படம்.

கதை, கதைக்குள் கதை, வில்லன்களோடும், கதாநாயகனோடும் வடிவேலு செய்யும் லூட்டி என சலிப்பில்லாமல் படத்தை ரசிக்கலாம்.

கேங்கர்ஸ் மிஷன் சக்ஸஸ்.