ஆண் – பெண் நட்பு. ஆரோக்கியமான விஷயம்.
உரிமை காட்டும், உயிரைக் கொடுக்கும் ஆண் நண்பர்கள் உயிர் நட்புதான் என்றாலும்,பெண் தோழி என்பது ஆண்களுக்கு ஒலி கிரீடம் தான்.
டேய் என்னடா பண்ற சாப்டியா? வீட்ல அம்மா எப்படி இருக்காங்க? என்ன செய்றாங்க? அவங்களுக்கு உதவி பண்ணு ஒழுங்கா சாப்புடு என்று அக்கறையாகப் பேசும் பெண் தோழிகள் மனதிற்கு சுகம் தான்..என்றுமே இனிமை தான்.
ஆயிரம் ஆண் நண்பர்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கோ, ஆயிரம் பெண் தோழிகள் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கோ இந்த ஆண்- பெண் நட்பில் கிடைக்கும் தனித்துவம் வராது.
பெண் தோழி என்பது கொஞ்சம் சிறப்பு தான்…பெண் தோழிகள் அருகிலிருக்கும் போது , ஆணுக்கு குறு குறுவென்று சின்ன நாணமும் பயமும் எப்போதும் ஒட்டிக் கொண்டு தான் இருக்கும்.. டேய் உன் ஆளு வந்துட்டா நீ கிளம்பு என்ற பேச்சுகளை அஒனது நண்பர்களிடம் கண்டிப்பாக வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது… அந்த சூழ்நிலையில் கண்டிப்பாக இருதலைக் கொள்ளி எறும்பு தான்.இவனுங்க வேற…
பெண் தோழியிடம் கிடைக்கும் அதட்டலும் அரவணைப்பும் சகோதரி, தாயை நினைவு படுத்தினாலும் கூட பல நேரங்களில், பலரால் அந்த அதட்டல்களும் அரவணைப்பும் வேறு மாதிரியாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.இது கீதலாக இருக்குமோ என்று …
ஆண் பெண் நட்பு ஆரோக்கியமானது தான் என்றாலும் பல நட்புகள் காதலாகிக் கசிந்து உருகி விடுகிறது, இல்லாவிட்டால் சுற்றி உள்ளவர்களால் அது பரிமாற்றம் அடைகிறது.
சில நட்புகள் காதலாக மாறும் போது விரிசல் வந்து விடுகிறது..
நாகரீகம் எவ்வளவு முன்னேறினாலும் ஆண் – பெண் நட்பு நல்ல விதமாகப் பார்க்கப்படுவது என்பது இன்னும் குறைவு தான்..
குருடன் யானையைத் தடவிய கதையைப் போலத் தான் ஆண் பெண் நட்பு.. பலரால் பலவிதத்தில் விவரிக்கப்படும்..
என்ன தான், படிப்பும் நாகரீகமும் வளர்ந்தாலும் திருமணம் ஆன பின்பு ஒரு பெண் அவளுடைய ஆண் நண்பரிடம் பேச்சை நிறுத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகத்தான் இருக்கிறது..
நல்ல நட்புக்கு விளக்கம் சொல்ல அவசியம் இல்லை..
ஆண்- பெண் நட்பு விளக்கம் சொல்லியே விளங்காமலே இருக்கிறது..
பெண் தோழமை திருமணம் ஆன பின்பு கண்டிப்பாக மறைந்து
தான் போகிறது.
ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் நட்பு போல, கர்ண்ணுக்கும் துரியோதனின் மனைவிக்கும் இருந்த நட்பு போல..
ஒரு ஆணும் ஆணும் பழகுவது போல ஆண் பெண் நட்பு விரசமில்லாமல் பார்க்கப்பட்டால், பழகினால் கண்டிப்பாக சிறப்பு தான்?!