நேற்று ஒரு சின்ன வேலையாக பெங்களூர் வரை சென்று ஒரே நாளில் சென்னை திரும்ப வேண்டியிருந்தது.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இரவு தாமதமாக புறப்படும் ரயிலில் முன்பதிவு செய்து விட்டால் வசதி என்று எண்ணி பெங்களூருவில் கிளம்பி, சென்னை பெரம்பூர் வழியாக பாட்னா செல்லும் SMVB – DNR SPL ரயிலில் முன்பதிவு செய்து ரயில் நிலையத்தை நோக்கி பாதிக்கு மேற்பட்ட தூரம் பயணித்த போது, யதார்த்மாக ப்ளாட்பார்ம் நம்பரும், கோச் பொஷிஷனும் சரிபார்க்கலாம் என யத்தனித்தால், ரயில் 7 மணி நேர தாமதம் என்ற தகவல் கிடைத்து அதிர்ந்தோம்.

அதாவது இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு காலை 5.20 க்கு சென்னை வர வேண்டிய ரயில் காலை 7 மணிக்கு தான் கிளம்பும் என்றால் அதிர்ச்சி வராதா?
அதிர்ச்சியில் என்ன செய்வது, ஏது செய்வது என்று அறியாமல் குழம்பி, பேருந்தில் பயணிக்கலாமா என்று குழம்பி பிறகு யதார்த்தமாக கவுகாத்தி செல்லும் ரயிலில் டிக்கெட் இருப்பதை அறிந்து அதில் ஏறி புறப்பட்டோம்.
இரவு 11.40 க்கு கிளம்பி காலை 5.20 மணிக்கு பெரம்பூர் வர வேண்டிய ரயில் காலை 7.40 மணிக்கு வந்தது.

தொலை தூர ரயில் என்பதால், சிறிய தூர பயணங்கள் தாமதமாகிறதா, அல்லது சரியான திட்டமிடல் இல்லையா என்பது தெரியவில்லை.
இதற்கு முன் சென்னை- ஓங்கோல் செல்லும் போது இந்தத் தொல்லையை அனுபவித்திருக்கிறேன்.
மதியம் 3 மணி சென்னையில் கிளம்பி இரவு 7 மணிக்கு ஓங்கோல் போக வேண்டிய ரயில் 2 மணி நேர தாமதமாகிச் சென்றது.
ஆனால் என்னுடைய பயண அனுபவத்தில் தெற்கு ரயில்வே பயணங்களில் நான் ஒருபோதும் இது மாதிரி அவஸ்தைகளைக் கண்டதில்லை.
அதிகபட்ச தாமதமே 10-15 நமிடம் தான் பார்த்திருக்கிறேன்.
அதனால் தான் முதலில் சல்யூட் சதர்ன் ரயில்வே என்று துவங்கினேன்
நினைவுகள் வாசகர்கள் தங்கள் தாமத பயண நினைவுகளை எங்களோடு பகிரலாமே!