Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஒலிம்பிக் விளையாட்டுகள் – பாரிசில் துவக்கம்

உலகில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு தன்னிறைவு அடைதல், அல்லது உச்சநிலை என்பது இருக்கும். ஆங்கிலத்தில் destination என்று எளிமையாக சொல்லலாம்.

அப்படி ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்குமான destination ஒலிம்பிக்ஸ் என்பதில் மாற்றுக்கருத்தல்ல.

ஒலிம்பிக்ஸ் என்பது கிரிக்கெட் மாதிரியான பைத்தியக்கார ரசிகர்களை கொண்டிருக்கவில்லை. விளம்பரத்தில் பணம் சம்பாதிப்பது மட்டும் நோக்கமாக தெரியவில்லை. அதற்கென்று ஒரு தனி மரியாதை உண்டு.

பண்டைய கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில், சேயுசு கோவிலடியில் சமய விழாவாகத் துவங்கிய இந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று இத்தனை பரிணாம வளர்ச்சி அடைந்து 200 நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் மதிப்புமிகு போட்டியாக மாறி நிற்கிறது.

ஒலிம்பிக் தீபம், ஐந்து வளையம், அந்த வளையத்தின் வண்ணங்கள், அவை பரைசாற்றும் ஒற்றுமை என்று பலவும் நமக்குப் பரிட்சயம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதன் மவுசு குறைவதில்லை.

சற்று முன்பு நடந்த கிரிகெட் உலககோப்பையை போல ஆசிய கண்டத்திற்காக இந்தப்போட்டியை இந்த நேரத்தில் திட்டமிட்டால் நன்றாக இருக்கும் என்ற மெனக்கெடல்கள் இல்லை.

இந்தியா – பாகிஸ்தான்,
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து போட்டிகளை சனி , ஞாயிறுகளில் திட்டமிட அவசியமும் இல்லை.

இரவு 11 மணி ஆனாலும் சரி, அதிகாலை 5 மணி ஆனாலும் சரி, போட்டிகள் திட்டமிட்ட படி நடக்கும். இங்கே திறமை இருப்பவன் முன்னேறுகிறான்.

திறமைக்கு அங்கீகாரம்.
விளையாட்டு வீரனுக்கு உன்னத அடையாளம்.

ஒலிம்பிக்ஸ் ல் ஒரு தங்கமாவது வந்து விடாதா என்ற ஏக்கம்.

பல நாடுகளின் கனவுகள்.

இத்தனையையும் உள்ளடக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 4 வருடம் கழித்து பாரீஸில் இன்று துவங்கி இன்னொரு 17 நாட்கள் கோலாகலமாக நடக்க இருக்கிறது.

இந்த முறை இந்தியா இரட்டை இலக்கங்களில் பதக்கம் வெல்லும் என்பது எதிர்பார்ப்பு. இரட்டை இலக்கங்களில் தங்கப்பதக்கம் குவித்தால் பெருமை தானே?

நீரஜ் சோப்ரா வின் நீங்காத தங்க நினைவுகளோடு ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலுக்காக காத்திருக்கும் நினைவுகள் வாசகர்களோடு நாங்களும்.