Categories
சினிமா

Good Bad Ugly- விமர்சனம்

Good, Bad, Ugly

Good ஆ? Bad ஆ ? Ugly ஆ?

அமர்க்களம், அட்டகாசம், மங்காத்தா, வாலி, தீனா போன்ற அஜித்தின் பழைய படங்களின் வரலாறு, அதிலிருந்த தரமான மாஸான காட்சிகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து ஒரு கதையை தயார் செய்து; அதாவது கதைக்காக படமில்லாமல் இது மாதிரி ஒரு படம் எடுக்க என்ன கதை தேவைப்படுமோ அந்தக் கதையை படத்தினுள்ளே நுழைத்து தான் விரும்பிய, தன்னைப் போல தல ரசிகர்கள் விரும்பிய வெறித்தனமான அந்த மாஸ் மசாலாவை வெளிக்கொணர்ந்து விட்டார் ஆதிக்.

ஆமாம் கதை என்று பார்த்தால் மாஸ் படத்தில் என்ன கதை இருக்குமோ அதுதான், வீரம் படத்தில் இருந்தது போல, ஜெயிலர் படத்தில் இருந்தது போல பழிவாங்கும் கதைதான்.

அந்தப் பழி வாங்கும் சூழல் ஏன் ஏற்படுகிறது, அதைச் செய்வது யார் என்பது மட்டுமே மாறியிருக்கிறது.
மற்றபடி அதே பழி வாங்கும் மசாலா தான்.

வில்லனுக்கும் ஹீரோக்கும் சண்டை, அதுல ஒடஞ்சது வில்லனோட மண்ட. இதுல கடுகளவும் மாற்றமில்ல.

சரி கதைதான் தெரிஞ்சு போச்சே, அப்புறம் என்னாத்துக்குப் போய் படத்தப் பாத்துக்கிட்டு என்ற முடிவுக்கு வரும் முன்பு, நீங்கள் எந்த ரகம் என்பதை யோசித்து படம் பார்க்கலாமா என்று முடிவு செய்யலாம்.

நீங்கள் அஜித் வெறியரா?
படத்தை தினம் இருமுறை பார்க்கலாம்.

அஜித் பிடிக்கும் ஆனா. வெறிலாம் இல்ல.
படத்தை ஓரிரு முறை பார்க்கலாம்.

அஜித் பிடிக்காது என்றால்?

கட்டாயம் ஒருமுறை பார்க்கவும். இனி பிடிக்கும்.

நல்ல ஜனரஞ்சகமான படங்கள் என்றால் பிடிக்கும். அப்படியானால்,

டிக்கெட் எடுக்குமுன் யோசிக்கவும்.

தியேட்டர்ல அந்தக்கூட்டத்தோட அப்படி மாஸா. அது பிடிக்கும், அந்த ரகமா?

உடனே படத்திற்குக் கிளம்புங்கள்.

ஐ லக் பீல் குட்…

இது குட் மட்டும் இல்ல, இது குட், பேட், வெரி பேட், அக்லி. அதனால முடிவு உங்க கையில

கதை என்னங்க கதை, என்டர்டெயின்மென்ட் காக தான படம் என்று சொல்பவரா?

நீங்களும் உடனே வாங்க. சந்தோஷமா போங்க.

அந்த சத்தம். அந்த விசில்,
அட அதுக்கு தாங்க படமே.

விஜய் வெறியன் என்றால்?
வந்து பாத்துட்டு வயிரெறிஞ்சு சாவுங்க.

விஜய் ரசிகன். அஜித் படங்களையும் நியாயமாக ரசிப்பேன்.
உங்களுக்கும் கண்டிப்பா படம் பிடிக்கும் ப்ரோ.

பேமிலியோட பாப்கார்ன் சாப்புட்டுக்கிட்டே வாரம் ஒரு படம்.
தப்பில்ல வாங்க. இந்த வாரம் இந்தப்படம் தான். பேமிலி க்காகவும் சில காட்சிகள் இருக்கு. அட அந்தக்காட்சிகளும் ஓரளவு நல்லாவே இருக்குங்க.

பழைய படத்தோட ரெபரெனஸ் பாட்டுலாம் வந்தா நான் குஷி ஆயிடுவேன்.
அட வாங்க ஜீ, வாங்க ஜீ படமே உங்களுக்கு தான்.

இப்படி பல விதமான ரசிகர்களையும் ஒரு விதமாகக் கவரும் வண்ணமும், சில ரசிகர் வகையறாக்களுக்கு இது சரிப்படாது என்ற முறையிலும் ஒரு நல்ல மசாலாவைத் தயாரித்து விட்டார் இயக்குனர்.

என்ன அஜித் மசாலா கொஞ்சம் தூக்கலா இருக்கிறதால, எல்லாரும் சாப்பிட முடியாது.

ஆனா இந்த பிரியாணி, பிரியாணி லவ்வர்ஸ் க்கு கண்டிப்பா பக்காவா செட் ஆகும்.

மத்தபடி படத்துல த்ரிஷா, சிம்ரன், பிரிபு, பிரசன்னா, நண்டு சிண்டு சில்லற எல்லாம் அஜித் பின்னாடி மறஞ்சி போயிடுது. இல்லாட்டி அஜித் புராணம் பாடுது.

வில்லன் ஒரு ஆள் தான் படத்துல அஜித்த எதுத்துப் பேசுறாப்ல. அதனாலேயே கொஞ்சம் நமக்கு லேசா கடுப்பாயிடுது, யார்தான்டா சண்டைக்கு வருவீங்கனு.

சண்டைக்குனு வரவங்களும், தல ய பாத்ததும் “வா தல நல்லாருக்கியா தல?, உன்னயத்தான் அடிக்கனும்னு தெரியாம வந்துட்டோம் தல” னு, சொல்லிட்டு

அடிக்க அனுப்பினவன்கிட்ட, “டேய் அவர் யார் தெர்யுமா?” என்று ரிட்டன் டிக்கெட் வாங்கிக் கிளம்பி விடுகிறார்கள். இது நாம் அடிக்கடி பார்த்துவிட்டதால் கொஞ்சம் , வேற ஏதாவது ட்ரை பண்ணுங்கடா என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

மற்றபடி ஏற்கனவே சொன்னது போல, இது அஜித் ஸ்பெஷல் மசாலா.

சில பேருக்கு டாப் டக்கர், பல பேருக்கு ஓகே, ஒரு சிலருக்கு அட என்னங்க.

மற்றபடி இரண்டு மணி நேரம் 20 நிமிடம் அலப்பறை நிச்சயம்.

பொழுது போக்குக்குப் பஞ்சமில்லை.

விசில் சத்தத்திற்குக் குறைவில்லை.

மொத்தத்தில் மாஸ்.

மாஸ்க்கெல்லாம் மாஸ். பயத்துக்கே பயம்.

டானுக்கெல்லாம் டான்.தல ஆடும் போது வால் ஆடக்கூடாது.

இப்படி அஜித்தை செதுக்கி அழகாக ஒப்படைத்திருக்கிறது இந்த அணி.

அஜித்தும் உடலைக் கட்டுக்கோப்பாக்கி, கண்களுக்கு கீழிருந்த சதைகள் எல்லாம் மறைந்து பொலிவாக இருக்கிறார்.

சேட்டுக்கு அண்ணன் மாதிரிலாம் சொல்லி கலாய்ச்சவங்களுக்கு, பழைய ஒரிஜினல் தல இஸ் பேக் னு காட்டிருக்காரு.

ஜாலியா, சூப்பரா ஒரு படம். ஜீரோ லாஜிக்.