எத்தனை தூரமாயினும் மழைத்துளி மண்ணை அடையும்.
எத்தனை பள்ளம் மேடைக்கடந்தாலும் நதி ஆழியை அடையும்.
எத்தனை இன்னல் வந்தாலும் மனம் இறுதியில் மகிழ்ச்சி அடையும்.
வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் என்பது இரவு பகல் போலத்தானே?
இரவின்றி பகலுக்கு ஏது மரியாதை?
எப்படியும் விடியும்.
நமக்கும் தான்.
உதிக்க வேண்டியது சூரியனல்ல. பூமி தான் சூரியனைச்சுற்றி அடைய வேண்டும்.
சோகங்கள் வெறும் கருமேகங்கள் போல. குளிர்ந்து மகிழ்ச்சியை மழையாகப்பொழியும். காற்று எனும் முயற்சி இருக்கும் வரை.
துண்டுவிடாதே மனிதா!
கருமேகங்கள் எனும் சோகங்களை கண்டு தளர்ந்து விடாதே!