Categories
கருத்து

மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பல்ல.

பெரியோர்களே தாய்மார்களே!

கண்டிப்பா இதப் படிங்க.

புள்ளைங்கள நிறைய மார்க் வாங்க சொல்லி வற்புறுத்தாதீங்க. நிறைய மார்க் வாங்கினா தான் நல்லா வாழலாம், இல்லாட்டி வாழவே முடியாதுனு சொல்லி பயமுறுத்தாதீங்க.

வரப்போகும் தேர்வு முடிவன்று உங்கள் பிள்ளைகள் எதிர்பார்த்த அளவில் மதிப்பெண்கள் வாங்காவிட்டால் கூட தயவு செய்து சபிக்கவோ, வருத்தம் கொள்ளவோ வேண்டாம்.

தேர்ச்சி பெற்றாலே போதும். பிழைத்துக் கொள்ளலாம்.

சொல்லப்போனால் நல்ல மார்க் வாங்கிய பிள்ளைகள் பலர் இன்று சமுதாயத்தில் ஒரு பயத்துடனே வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழ்நிலை.

1190 மார்க் வாங்கி டாக்டர் ஆனவனுக்கு பயம் இருக்கும், government வேலை கிடைக்குமா இல்லையா என்று.

650 வாங்கிவிட்டு டீக்கடை நடத்துபவனுக்கு அந்த பயமில்லை. இது எல்லாருக்குமானது அல்ல. ஆனால் இதுதான் உண்மை.

12 ஆம் வகுப்பில் 1200 க்கு 1190 மதிப்பெண் வாங்கிவிட்டால் மட்டும் வாழ்க்கையில் பிரச்சினையே இல்லை என்றாகிவிடாது.

வாழ்க்கை என்பது பணத்தாலோ, படிப்பாலோ மட்டும் நிர்ணயிக்கப்படுவது இல்லை என்ற உணர்வு வரும் வரை. நாம் இதை உணரமாட்டோம்.

நாம் எத்தனையோ மாநில முதல் மதிப்பெண் மாணவர்களின் பேட்டிகளைக் காண்கிறோம். ஆனால் அவர்கள் அதற்குப்பிறகு தொடர்ந்து சாதித்தவாறு எதையாவது கண்டிருப்போமா?

இந்த உலகம் முதல்மதிப்பெண் பெற்றவர்களால் மட்டும் நிறைந்த்து அல்ல.

என் பிள்ளைக்கு சரியா படிப்பு வரல.

அவன எல்லார் மாதிரியும் கஷ்டப்படுத்த விரும்பல.

அவனுக்கு சினிமால ஆர்வம்.

அவன் போக்குல விட்டுட்டேன்.

ஒருநாள் வருவான். பெரிய director ah.

அன்னிக்கு பெரிய பெரிய டாக்டரும், இன்ஜினியரும் என் பிள்ளை கூட ஒரு போட்டோ எடுத்துக்க அலையுவாங்க என்று தைரியமாக சொல்லும் பெற்றோர்கள் இங்கே எத்தனை!?

கூட்டத்துடன் கூட்டமாக இன்ஜினியரிங் இல்லை டாக்டர் படிக்க வைத்து கோவிந்தா போட வைக்கும் பெற்றோர்களே அதிகம்.

என் வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும். என் சொந்த அனுபவம்.

என் அப்பா அப்போதே சொன்னார். இன்ஜினியரிங் வேண்டாம்..

MSc maths and MPhil படி, உள்ளூர் school ல வேலை வாங்கிக்கலாம் என்று.

விதி விடவில்லை.

வீணாய்ப்போனேன். தலைகீழாக தான் சம்மர் அடிப்பேன் என்று கவுண்டமணி மாதிரி அடம்பிடித்தேன்.

இப்போது. கேவலம்… என்னுடைய நண்பர்களை விட நான் குறைவாக சம்பாதிக்கிறேன். என்னை விடக் குறைந்த மதிப்பெண் மற்றும் குறைந்த படிப்பு படித்த நண்பர்களை விட.

இத்தனைக்கும் காரணம் நான் எடுத்த மார்க்.

நான் மட்டும் குறைவாக மார்க் எடுத்திருந்தால் arts படித்திருப்பேன். என் தந்தையுடன் அவர் கடைசி காலத்தை கழித்திருப்பேன்.

அப்போதே தெரிந்திருந்தால் மாங்கு மாங்கென்று படித்திருக்க மாட்டேன்.

இப்போது வரை படித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

வாழ்க்கையை!

பிள்ளைகளை வாழ்க்கையில் அதிக மதிப்பெண் பெறச் செய்யுங்கள். தேர்வில் அல்ல!