பளிச்சிடும் கோடை காலம்.
கிட்டத்தட்ட பள்ளிகளில் தேர்வு துவங்கி விட்டது.. விடுமுறையை நோக்கிய ஆர்வத்தில் மாணவர்கள்..
அய்யய்யோ லீவுல என்னன்ன அழிச்சாட்டியம் பண்ணக் காத்துருக்காய்ங்களோன்னு பீதியில் பெற்றோர்கள்..
அடிக்கிற வெயிலில் வெளிய போயி விளையாடாம இருக்க videogames, dvd player, play station, Android mobile games ன்னு பயங்கரமா யோசிச்சு காசு சேத்துட்டு இருக்கீங்களா?
இல்ல வாங்கிட்டீங்களா?
அப்படி எதாவது வாங்கியிருந்தா அத திருப்பி அனுப்புங்க மொதல்ல…
அந்த காசுல நல்ல பருத்தி ஆடை 4 set…வாங்கிடுங்க உங்க குழந்தைகளுக்கு…
லீவுல வெளியில போயி மத்த குழந்தைகளோடு நம்ம பாரம்பரிய விளையாட்ட விளையாட அனுமதி கொடுங்க..நல்லா வெயில் வந்த பிறகு இல்லை. காலை மற்றும் மாலைப் பொழுதுகளில் அனுமதி தரலாமே?
பாரம்பரிய விளையாட்டு என்பது ஞாபகம் இருக்கும் என்று நம்பலாம்.
கிராமங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை… அவங்க பாட்டுக்கு பம்பரமோ, கில்லியோ, கோலிக்குண்டோ, கிரிக்கெட்டோ.. ஏதோ ஒன்றை நிம்மதியாக ஆடிக்கொண்டிருப்பார்கள்..
நகரங்களில் இருக்கும் பெற்றோர்கள் தயவு செய்து குழந்தைகளை ஊரில் தாத்தா பாட்டி இருந்தால் அனுப்பி விடுங்கள்..

அவர்கள் அங்கிருக்கும் குழந்தைகளுடன் கூடி விளையாடட்டும்…
அவனோட சேராத, இவனோட விளையாடாத அவங்க bad boys என்று சொல்லிக் கொடுக்காதீர்கள்.. குழந்தைகளில் bad boys லாம் கிடையாது..
நாம்தான் அப்படியான bad எண்ணங்கள் உடையவர்கள்…
பாரம்பரிய விளையாட்டை விளையாடும் போது உடற்பயிற்சி, உடலுக்கு எதிர்ப்பு சக்தியும், ஆற்றலும் , தகவமைக்கும் தன்மையும் கிடைக்கும்.. வெயிலில் விளையாடும் போது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்…
சாக்கடையில், அழுக்கில் கை வைக்கும் போதும் உருண்டு பிரளும் போதும் உடலில் கிருமிகள் அறிமுகம் ஆகும்.. எப்போதும் எதிரி கிடைக்கும் போதுதான் எதிர்க்கும் எண்ணமும், திறனும் வரும்…

உங்கள் குழந்தைகளை வீட்டுக்குள்ளே hygienic என்று முடக்கி வைத்து TV பார்க்க வைத்து videogames விளையாட வைத்து சோம்பேறியாகவும், சோடாபுட்டி கண்ணாடியாகவும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள்…
வெயிலில் விளையாடி, அதிகபட்சம் சின்ன சின்ன உபாதைகளால் பாதிக்கப்படலாம்… அதற்கும் தீர்வில்லாமல் இல்லை.. Videogames வாங்கித் தரும் பணத்தில் நல்ல பழங்கள் பானங்கள், சாப்பாடு செய்து கொடுங்கள்…
வெயிலில் விளையாடாமல் வீட்டில் கட்டிப் போட்டு zoo ல் வாழும் மிருகம் போல மாற்றாதீர்கள்…
வெளியே விளையாட விட்டு, தகுந்த உணவு உடை அளித்து அவர்களை நல்ல எதிர்ப்புத் திறன் மிக்க குழந்தைகளாக மாற்றலாம்…
இன்னொரு விஷயம்…
வெயிலில் விளையாடுவதால் மட்டும் உடம்பு கலர் கருப்பாகாது, வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து fair and lovely போட்டா மட்டும் உடலில் நிறம் கூடாது…
அதுக்கெல்லாம் வேற பல காரணங்கள் இருக்கு…
முடிவு செய்யுங்கள்.. உங்க குழந்தை சோடாபுட்டி போட்ட அம்மாஞ்சியா,?
இல்ல கலகலவென விளையாடி சேட்டை செய்யும் சுட்டி குட்டி யா?
43 வயசுலயும் அவரோட ஸ்டமினா வப் பாருங்க என்று வாய் பிளந்து கைதட்டுமுன் யோசிக்க வேண்டும்.அந்த ஸ்டமினா எங்கிருந்து எப்படி வந்தது என்று.
அன்பான வேண்டுகோளுடன் நினைவுகள்