Categories
விளையாட்டு

ஈசாலா கப் நம்தா?

தொடங்கிவிட்டது இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் திருவிழா. இனி நாள்தோறும் ஒரு மாதத்திற்கு மாலை வேளை, வீடுகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசை மாற்றுதல் தொடர்பான சண்டைகள் நிகழும்.

முன்புபோல இல்லை, இப்போதெல்லாம் ஆளாளுக்கு ஒரு மொபைல்போன் வைத்துக்கொண்டு அதிலேயே அவரவர் விருப்பத்திற்கு பார்த்துக் கொள்கிறார்கள்.

ஐபிஎல் ன் அனைவரின் செல்லப் பிள்ளைகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் வெற்றியைப் பதித்துப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

கண்ணன் தேவன் டீ குடி, சி எஸ் கே புடி புடி என்று ஆட்டம் போட்ட இளைஞிகள் இன்று இரு குழந்தைகளுக்குத் தாயான பின்பு அவர்கள் மனது மகிழும் படியாக ஒரு நாக் அவுட்டில் சென்னை அணியைத் தோற்கடித்து வெளியேற்றினார்கள்.

ஆனாலும் பாவம் ஈசாலா கப் நம்தே என்ற அவர்கள் கனவு 17 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேறவில்லை.

அடுத்த வருஷமும் கப் அடிக்காட்டி நாமதான் குருசாமி என்ற மீம்களெல்லாம் தெறிக்கிறது.

சொத்தை அணியாக இருந்த சன் ரைஸர்ஸ் போன முறை பேட் கம்மின்ஸை மிகப்ரபெரிய விலை கொடுத்து வாங்கி நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்து கெத்து காட்டியது.

வழக்கம்போல, மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே சிங்கங்களும் இன்னும் பல அணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் விளங்குகிறார்கள்.

பாவம் ஹர்திக் பாண்டியா தான் பலத்த அடி வாங்கிவிட்டார்.

சுப்மன் கில் தனது பலத்தால், குஜராத் டைட்டன்ஸ் அணியின் மவுசு குறையாமல் வைத்திருக்கிறார்.

ரோல்ஸ் ராய்ஸ் ராகுல் லக்னோ அணி முதலாளியால் சாடப்பட்டு இப்போது டெல்லி அணிக்கு மாறிவிட்டார். டெல்லி அணியின் பிள்ளை பந்த் லக்னோவுக்குப் போயிருக்கிறது.

எது எப்படியோ, CSK, RCB, MI என்ற மூன்று அணிகளின் மவுசு குறைவதே இல்லை.

இந்த வருடம் தல களமிறங்கும் போது நீ பொட்டு வைத்தத் தங்கக்குடம் பாடலைப் போட்டு 125 ஐ 150 டெசிபலாக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

கமெண்டேட்டராக RJ Balaji, கோபிநாத் எல்லாம் வந்து மக்களை குஷிப்படுத்துவார்களா?

மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.