இருதலைக் கொள்ளி என்றால் என்ன?
அதாவது இரு பக்கமும் எரியும் தீயால் கொள்ளியின் நடுவில் சிக்கிய எறும்பு தப்ப வழியின்றி மாட்டிக்கொள்வது போல துன்பம் சூழ்ந்து தப்ப வழியின்றி மாட்டிக்கொள்பவரை அப்படி உவமானமாகச் சொல்வர்.
சரி விஷயத்திற்கு வருவோம். நம் அனைவருக்கும் நன்கு அறியப்பட்ட விஷயம், திமுகவின் மூடநம்பிக்கை மறுப்புக் கோட்பாடு. திமுக பெரியார் வழியைப் பின்பற்றும் கட்சி என்பதால், ஆன்மீகத்தின் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளை அது காலங்காலமாக கடுமையாக எதிர்த்து வருகிறது. சொல்லப்போனால் இது கடவுள் இல்லை என்று கூறும் கடவுள் மறுப்புக் கோட்பாடாகவே மக்களால் உணரப்பட்ட அளவுக்குத் தீவிரமாக அவர்கள் அதைப் பின்பற்றி வருகிறார்கள்.
பண்டிகளைகளுக்குக் கூட, மூடநம்பிக்கை தான் காரணம் என்று சொல்லி, பண்டிகை நாட்களை, விடுமுறை நாட்களாக மட்டுமே எடுத்துக் கொள்ளும் அளவிற்கு, இவர்களது எதிர்ப்புப் பெரியது.
ஆனால் காலமும், சூழலும் இவர்களது கோட்பாட்டை சிறிது சிறிதாக பதம் பார்க்கத் துவங்கியுள்ளது.
ஆன்மீகம் மக்களிடையே மோகமாகப் பரவி வரும் இந்தக்காலத்தில் இவர்களது கடவுள் எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு கோட்பாடு, ஓட்டுகளைப் பதம் பார்த்து விடும் என்ற காரணத்தால் சிறிது பக்குவமாகவே கையாளத்துவங்கி விட்டார்கள்.
தற்போது, நீலம் தயாரிப்பு நிறுவனத்தால் நடத்தப்படும் மக்கள் மார்கழி விழாவில் இசைவாணி அவர்களால் பாடப்பட்ட ஐயம் சாரி ஐயப்பா, நான் உள்ளே வந்தா என்ன தப்பா, என்ற பாடல் பெரிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
ஒரு கிறிஸ்தவப் பெண் இந்து மதக்கடவுளையும் நம்பிக்கைகளையும் அவதூறு செய்யும் விதமாகப் பாடியது மிகப்பெரிய சர்ச்சையாகி உள்ளது.
இந்த சூழலில், திராவிடக் கழகங்களின் தார்மீக ஆதரவாளரான திமுக தனது ஆதரவாளரைக் கண்டிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளது.
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் திராவிடக் கழகம் மற்றும் வேறு சில திமுக ஆதரவாளர்கள் திமுகவிடம் கோபம் கொள்ளும் சூழல் வரும்.
நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இந்து மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரும்.
இந்த சூழல் திமுக விற்கு இக்கட்டான சூழல் தான்.
பார்க்கலாம் இந்த அரசியல் சாணக்கியர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று.
ஆர்வத்துடன் நினைவுகள்