தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்காவில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியிருக்கிறது. அமெரிக்க நீதித் துறை (department of justice) அவரை 250 மில்லியன் டாலர் (சுமார் 21,000 கோடி ரூபாய்) லஞ்ச ஏற்பாட்டின் மேற்பார்வை மற்றும் அதனை மறைத்து அமெரிக்காவில் நிதி திரட்டிய வழக்கில் குற்றம் சாட்டியுள்ளது.
புதன்கிழமை நியூயார்க்கில் தாக்கல் செய்யப்பட்ட இக்குற்றச்சாட்டு, 62 வயதான கௌதம் அதானிக்கு மிகப் பெரிய சவால் என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இவரது வணிக சாம்ராஜ்யம் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் சக்தி வரை பரந்துள்ளது.
குற்றப்பத்திரத்தில் வருகிற குற்றச்சாட்டின்படி, இவரும் மற்ற நிர்வாக அதிகாரிகளும் தங்கள் புதுப்பிக்கத்தக்க மின் சக்தி (renewable energy) நிறுவனத்திற்கு 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கு மேல் லாபம் கொடுக்கும் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்காவின் நீதித் துறை சார்பில் வழக்கைப் பதிவு செய்த வக்கீல் பிரியன் பீஸ் (Breon Peace) என்பவரால்
“கூறப்பட்ட வாக்கியப்படி, குற்றவாளிகள் பல்லாயிரம் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கும் சிக்கலான திட்டத்தை வகுத்துள்ளனர் மற்றும்… அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் மூலதனம் திரட்டும் முயற்சியில் லஞ்ச ஏற்பாட்டைப் பற்றி பொய் கூறியுள்ளனர்” என தனது அறிக்கையில் தெரிவித்தார்.
“சர்வதேச சந்தையில் ஊழலை வேருடன் அழிப்பதற்கும் நமது நிதி சந்தைகளின் நேர்மையை தங்கள் சொந்த நலத்திற்காக பயன்படுத்துபவர்களிடமிருந்து முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கும் எனது அலுவலகம் உறுதிப்பட்டுள்ளது” என அவர் மேலும் கூறினார்.
அதானி குழு இந்த குற்றச்சாட்டுகள் “அடிப்படை ஆதாரமற்றவை” என்று மறுத்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
அதானி நிறுவனதின் மீதான முதல் குற்றச்சாட்டு அல்ல இது. சில மாதங்களுக்கு முன்பு TANGEDCO நிறுவத்திற்கு பல மடங்கு லாபத்தில் நிலக்கரி விற்ற மோசடியை பற்றி பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இதன் பின்னணி என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.
2014 அம் ஆண்டு தமிழ் நாட்டு மின் உற்பத்தி வாரியம் மின் உற்பத்திக்காக அதானி நிறுவனத்திடம் இந்தோனேஷியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி வாங்கியதில் 6000 கோடி மோசடி செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.
சென்னைக்கு நிலக்கரி நேரடியாக வந்தாலும், அதற்கான இவ்வழி மட்டும் பல நாடுகளில் சுற்றி, இடைத்தரகர்கள் மூலமாக அதன் சாரடி மதிப்பு மற்றும் விலைமதிப்பு மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதாவது குறைந்த மதிப்புள்ள நிலக்கரி இந்தோனேஷியாவில் கப்பலில் ஏறுகிறது. இதற்கு ஒரு டண்ணுக்கு $33.75 என்று இந்தோனேஷியா அரசங்கத்திடம் ஏற்றுமதி மதிப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலக்கரிக்கு சாரடி மதிப்பு (calorific value) below 3500 kilocalories per kilogram (kcal/kg) என்றும் ஏற்றுமதி ஆவணங்கள் சொல்கின்றன.
இரண்டு வாரம் கழித்து எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி ஆகும் பொழுது இதே நிலக்கரிக்கு அதானியிடம் டண்ணுக்கு $91.91 என்ற விலை கொடுத்து TANGEDCO வாங்கியாதாக குற்றாச்சாட்டு. வந்து சேரும் பொழுது இந்த நிலக்கரிக்கு சாரடி மதிப்பு 6000 kilocalories per கிலோகிராம் என்று அதிகரித்ததும் குறிப்பிட்டத்தக்கது.
இதன் மூலம் 6000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டுகிறது.
அதானி நிறுவனம் இதன் மூலம் நேரடியாக லாபம் சம்பாதித்த ஆதாரம் இல்லை. அப்பறம் என்ன மோசடி என்கிறீர்களா? அதானிக்கு கைமாற்றம் செய்த இடை தரகர்கள் அதானி நிறுவத்தின் பெரிய பங்குதாரர் என்றும் FT கண்டுபிடித்திருக்கிறது.
இவ்வளவு விவரம் இருந்தும் இன்று வரை தமிழ் நாடு அரசு மற்றும் இந்திய அரசு இந்த நிறுவத்தின் மீது எந்த நடவடிக்கையோ விசாரணையோ மேற்கொள்ள வில்லை என்பது கவலை அளிக்கிறது.
ஆதங்கத்துடன் நினைவுகள்