அனுமனாக பார்த்திபன். ராமர் வேடத்தில் வடிவேலு.
ராமர்:
டேய் அனுமாரு இங்க வாடா, நம்ம ஆளுங்களையும் என் தம்பியையும் காப்பாத்தனும்னா, சஞ்சீவி மலையில இருக்கிற மூலிகைய புடுங்கிட்டு வரனும் டா. கொஞ்சம் சீக்கிரம் புடுங்கிட்டு வாடா!
அனுமன்:
(முணுமுணுத்தபடி) என்னைய பாத்தா பச்செல புடிங்கி மாதிரி தெரியுதா?
ராமர்:
யப்பா நீதான் நம்ம டீம்ல நான் என்ன சொன்னாலும் செய்வ, அதனால தான் உன்கிட்ட சொல்றேன். கொஞ்சம் கோச்சுக்காம, குரங்கு சேட்டையெல்லாம் செய்யாம, தயவு செஞ்சு கொஞ்சம் சீக்கிரம் போயிட்டு வாடா!
அனுமார்:
ஏன் நீங்களே போகலாமே, நீங்க என்ன செய்றீங்க பாஸ்? அப்படித்தான் போனவாட்டி என்னைய இலங்கைக்கு அனுப்பினீங்க, அவனுங்க வால கொளுத்தி விட்டானுங்க.
இப்ப ஏதோ மலைக்கு போக சொல்றீங்க. அது எப்படி இருக்குமோ என்னவோ?
ராமர்:
அடேய் நான் பாஸு டா, கொஞ்சம் நான் சொல்றத கேளுங்கடா.
நீங்கதான் லேபர்ஸ்.
நீங்கதான் இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யனும். இந்த ஒருவாட்டி போயிட்டு வாடா, அப்புறம் என் பொண்டாட்டியத் தேடக்கூட உன்னைய நான் கூப்புட மாட்டேன்டா.
அனுமார்:
ஓ அப்படியா பாஸ்.
சரி. எந்த மலைனு சொன்னீங்க?
ராமர்:
பஞ்சீவி சர்வத மலை.
அய்யோ டங்க் ஸ்லிப் ஆகுதே!
சஞ்சீவி பர்வத மலை.
அனுமார்:
ஆமா , அது எங்க இருக்கு?
ராமர்:
கூகுள் மேப் போட்டு போடா யப்பா!
நான் மட்டும் முன்ன பின்ன மூலிகை புடுங்கி வைத்தியமாடா பாத்துக்கிட்டு இருந்தேன்?
அனுமார்:
ஆமா பாஸ் நானே கேட்கனும்னு நினைச்சேன். உங்ககிட்ட இருந்து எல்லாத்தையும் உருவிட்டானுங்க. மிச்சம் இருந்ததே உங்க பொண்டாட்டி மட்டும் தான். இப்ப அதையும் முழுசா வாழ விடாம ஒருத்தன் லவுத்திட்டு போயிட்டான்.
ஆமா உங்க பொண்டாட்டியவே பத்திரமா பாத்துக்கு தெரியலியே, உங்கள எப்படி நாட்டோட ராஜா ஆக்க பாத்தாங்க? நாட்ட கொடுத்திருந்தாலும் இப்படித்தானே தொலைச்சிருப்பீங்க?
உங்க சித்தி செஞ்சது சரிதான்.
அந்த பெண் தெய்வத்துக்கு உங்க நாட்டுல ஒரு சிலை வெக்கனும் சரியா?
ராமர்:
யப்பா கொரங்கு தம்பி, அதெல்லாம் அப்புறம் சாவகாசமா பேசிக்கலாம், மொதல்ல உசுருக்கு போராடுறவங்கள காப்பாத்தலாம்.
அனுமார்:
ஓ அது சரி.
ஆமா அந்த மலையில நான் புடுங்க வேண்டிய மூலிகைய எப்படி கண்டுபிடிக்கிறது?
ராமர்:
இதல்லடா நீ மொதல்ல கேட்டுருக்கனும்.
அது எனக்கும் சரியா தெரியல.
நீ புடுங்கிறது எல்லாமே மூலிகை தான்டா.
தயவு செய்து டார்ச்சர் பண்ணாம போடா!
அனுமார்:
ஆமா , மூலிகை செடிய வேரோட புடுங்கனுமா , இல்ல இலைய மட்டும் புடுங்கிட்டு வந்தா போதுமா?
ராமர்:
எப்படி வருதோ அப்படி புடுங்கிட்டு வாடா!
முடியல.
முடியலடா யப்பா.
அனுமார்:
ஒரு கை நிறைய புடுங்கினா போதுமா, கட்ட பை எடுத்துட்டு போகவா?
ராமர்:
மூலிகைய புடுங்க வேணாம்! கொரங்குப்பயலே.
கொரங்கு பயலே ” விட்டா கிறுக்கனாக்கிருவான் போல”
ஒரு கடவுள்னு கூட பாக்காம எவ்வளவு எகத்தாளம்?
ஏலேய் , எனக்கு தம்பியே இல்லைனு நினைச்சுக்கிறேன்டா போடா!
அனுமார்:
சரி டென்ஷன் ஆவாத ராம்ஸ்ஸு!
அவ்வளவு தூரம் போகனும்ல .
டீட்டெய்லா தெரிஞ்சக்காம போக முடியாதுல.
ராமர்:
யூ சட்டாப், ப்ளடி மங்கி, டூ வாட் ஐ சே இம்மிடியேட்.
அனுமார், உடனே அங்கிருந்து புறப்பட்டு மலையோடு திரும்பி வருகிறார்.
ராமர்:
உன்னிய மூலிகைய மட்டுந்தான கொண்டு வரச்சொன்னேன்? இப்படி மலையத்தூக்கிட்டு வந்துருக்கியே மனுஷக் கொரங்கே!
மலைய ஏன்டா தூக்கிட்டு வந்த?
எனக்குனே வருவீங்களாடா?
உங்க ஆத்தா அப்பன் என்னிய டென்ஷன் ஆக்கிறதுக்குனே உங்கள பெத்து போட்டாய்ங்களா?
இப்ப நான் இந்த மலையில ஏறி மூலிகைய கண்டுபிடிச்சு புடுங்கி கொடுக்கிற வரைக்கும் அவன் உயிரோட இருப்பான்னு நினைக்கிரியா?
சோதிக்காதீங்கடா!
ஒரு தெய்வம்னு கூட பக்கம் இப்படி சோதிக்காதீங்கடா!
நகைச்சுவைக்காக மட்டும்.
அன்புடன் நினைவுகள்.