Categories
சிறுகதை தமிழ்

வரதட்சணை- சிறுகதை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வீட்டின் தேவதையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே மணப்பொருத்தம் பார்த்து மாப்பிள்ளை, பெண் இருவரும் புகைப்படம் பார்த்து பிடித்துப்போய், கிட்டதட்ட உறுதி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு.

பெண்ணுக்கு ஒரு அண்ணன், அன்பான மதினி, வயோதிக அம்மாவும், அப்பாவும். அண்ணனுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து இவள் பிறந்திருக்கிறாள்.

எதிர்பார்த்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட விருந்து உபசரிப்புகள் தடபுடலாக முடிந்தது.

தாம்பூலம் மாற்றி உறுதி செய்து விடலாம் என பேச்சு ஆரம்பிக்க, மாப்பிள்ளையின் தாயார் பேச ஆரம்பிக்கிறார்.

“எங்களுக்கு இருக்கிறது ஒரே பையன்.
எம் பொண்ணுக்கு 100 சவரன் நகை போட்டு கல்யாணம் முடிச்சு வச்சேன்.
நீங்களும் அதுக்கு குறையாம செஞ்சிடுங்க. மத்தபடி மாப்பிள்ளைக்கு ஏதாவது செய்யனும்னா செய்ங்க. சீர் வரிசை செஞ்சிடுங்க.
கல்யாண செலவு பாதி பாதி பிரிச்சுக்கலாம். ஹனிமூனுக்கு உள்நாடு இல்லாம ஏதாவது ஃபாரின் அனுப்புங்க…“ என்று அடுக்கிக்கொண்டிருக்க,

பெண்ணின் தாயார் குறுக்கிட்டு, ”ஏமா இவருடைய பென்ஷனும், பையனோட வருமானமும் தாம்மா!
பையன் அவன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனிக்கனும் வேற. நீங்க என்னம்மா இவளோ கேட்குறீங்க?“ என்று பேசி முடிப்பதற்குள்

வெடுக்கென, இந்தாம்மா ”நாங்க எதுவும் வற்புறுத்தல, இஷ்டம் இருந்தா பாப்போம் இல்லாட்டி நாங்க கிளம்புறோம்“னு முகத்தில் அறைந்தாற் போல பேச, குறுக்கிடுகிறாள் பெண்ணின் மதினி!

“நீங்க சொல்றத செஞ்சுடுறோம்மா!
என் கல்யாணத்துக்கு எங்க அப்பா 70 சவரன் நகை போட்டாரு, மாப்பிள்ளை க்கு 10 சவரன் போட்டாரு. இதெல்லாம் நானோ என் வீட்டுக்காரரோ கேட்டு வாங்கிக்கல. பெருமைக்காக என் மாமியார் போட சொன்னாங்க.
என் அப்பா ரொம்ப நொந்து சீரழிஞ்சு இத போட்டாரு. இது இப்ப இங்க சும்மா தான் இருக்கு. யாருமே எப்பயும் 70 சவரன் நகைய கைல கழுத்துல மாட்டிக்கிட்டு திரியுறதில்லையே!“

ஒப்பிட்டுப் படம்
(இணையத்தில் பதிப்பிறக்கியது)

“மணமேடையில இருக்கிற அந்த 4 மணிநேரத்துல தற்பெருமைக்காக ஒவ்வொரு பெண்ணோட, அப்பாவும் அண்ணனும் படுற கஷ்டம் எனக்கு தெரியும். இன்னிக்கு என் மாமியாருக்கு அது புரிஞ்சுருக்கு.”

“இன்னொரு நாள் அது உங்களுக்கு புரியலாம்.”

“நீங்க கேட்கிற எதையும் குறை இல்லாம என் வீட்டுக்காரர் செய்வாரு.”

“தட்டு மாத்திட்டு தயக்கம் இல்லாம வீட்டுக்கு போங்கமா” என்று அந்த பெண்ணின் மதினி பேசியதை கேட்டு வரதட்சனை பேய்கள் இரண்டும் வாயடைத்து போய், கூனிக்குருகி நின்றன!

தொடர்ந்து வாசிக்க, நினைவுகள்.

  • குஜராத் மாடல் எப்படியானது? – பயண அனுபவம்
    குஜராத் மாடல். இந்த வார்த்தை ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சை.அதாவது குஜராத் மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகப் பல துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பதாகத் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 4 முறை இருந்தபோது கூறப்பட்டது. அதாவது அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், சூரிய ஒளியில் மின்சாரம் அபிரிமிதமாகத் தயாரிக்கும் மாநிலமாகவும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் தரப்பட்டு தொழில் முன்னேற்றமடைந்த மாநிலமாகவும் பேசப்பட்டது. அப்போதைய காலகட்டத்திலேயே விகடனில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டு, மோடி Vs… Read more: குஜராத் மாடல் எப்படியானது? – பயண அனுபவம்
  • கேம் சேஞ்சர்- திரை விமர்சனம்
    பொங்கலுக்கு வந்த படங்களில் பிரம்மாண்டமானதாக பெரிய பட்ஜெட்டில் தமிழில் ஏதும் வராவிட்டாலும், தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் தெலுங்கில் இயக்கிய கேம் சேஞ்சர் தமிழிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. தமிழில் போதுமான போட்டிப்படங்கள் இல்லாத காரணத்தால் இந்தப்படம் பெரும்பான்மையான திரையரங்குகளை ஆக்கிரமித்தது. தமிழ் மக்களும் இயக்குனர் மீதான கோபத்தை மறந்து வேறு வழியில்லாமல் இந்தப்படத்தைப் பார்த்தாக வேண்டிய கட்டாயம். ராம்சரணையும் சமீபத்தில் சில பெரிய டப்பிங் படங்களில் பார்த்துப் பழகி அவரையும் ஏற்றுக்கொண்ட காரணத்தால் தமிழ் படங்களுக்கு இணையாகவே இதுவும் சூடுபிடித்து ஓடுகிறது.… Read more: கேம் சேஞ்சர்- திரை விமர்சனம்
  • இந்திய கிரிக்கெட்: தோல்விகளால் நிலவும் இறுக்கமான சூழல்
    உலகத்தை அறிந்தவன்துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன் கண்ணதாசன் கவலைகளால் மனதைக் குழப்பிக் கொள்ளாமல் ஒரு வேளையில் ஈடுபடும் பொழுது அதை சிறப்பாக செய்ய முடியும். ஏதோ ஒரு எண்ணம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தால் செயலில் கவனம் தவறி விடும்.  நொடிப் பொழுதின் கவனம் முக்கியம். விளையாட்டுக்கு இது ரொம்பவும் பொருந்தும். விளையாட்டின் சிறந்த சாதனைகளைப் படைத்தவர்கள் பெரும்பாலும் கவலையை ஒதுக்கி, மனதை ஒரு நிலைப் படுத்துப்பவர்களாகவே இருந்துள்ளனர்.  இந்நிலையில் சில காலம் முன்பு வரை உலக்க் கிரிக்கெட்டில் உச்ச நிலையில் இருந்த இந்திய… Read more: இந்திய கிரிக்கெட்: தோல்விகளால் நிலவும் இறுக்கமான சூழல்
  • மத கஜ ராஜா- விமர்சனம்
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்கள் எதுவும் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதை நாம் ஏற்கனவே பேசியிருந்தோம். இருந்தாலும் ஒரு சினிமா ரசிகனாக பொங்கல் படங்களை பார்க்காமலா விடப்போகிறோம். அந்த வரிசையில் பொங்கலுக்கு வெளியான படங்களில் மிகவும் பாவப்பட்ட படமான மதகஜராஜாவைப் பார்த்தாயிற்று. கிட்டத்தட்ட 12 வருடங்களாக பெட்டியில் அடைபட்டுக்கிடந்த சினிமா இன்று திரையரங்குகளில் இன்றைய பொங்கல் படத்திற்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதே நமக்குப் புரிய வைக்கிறது, இப்போதைய பொங்கல் படங்கள் எவ்வளவு மோசம் என்று. இப்போதைய பொங்கல் படம் மோசமா அல்லது பழைய… Read more: மத கஜ ராஜா- விமர்சனம்
  • எங்களையும் பாருங்க – தனியார் ஊழியர் நலன்
    மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 ஆவது ஊதியக்குழு நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆம். தற்போது 7 ஆவது ஊதியக்குழு நியமித்தபடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு, அடுத்த ஊதியக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழு நியமிக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆக இருப்பதால், 2026 முதல் பண வீக்கத்தின் அடிப்படையில் புதிய ஊதிய விகிதம் முடிவு செய்யப்பட்டு அதன்படி ஊதியம் வழங்கப்படும். இது நல்ல விஷயம் தான். இளம் வயதில் முறையாக சிந்தித்து காலம் செலவு செய்து படித்துத் தேர்வில்… Read more: எங்களையும் பாருங்க – தனியார் ஊழியர் நலன்
  • சுங்கச்சாவடியின் பயன்கள்
    சுங்கச்சாவடிகள். பொதுவாக சுங்கச்சாவடிகள் என்றாலே வெறுப்பு தான். என் பணம் வீணாப் போகுது. ஏற்கனவே சாலை வரிகள் எல்லாம் கட்டிதானே வண்டிய வாங்கினேன்.இதுல இப்ப இதுக்கு வேற ஏன் தனியா நான் பணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வியில் துவங்கி, சுங்கச்சாவடிகளில் இனி பணம் ரொக்கமாக செலுத்தக் கூடாது, அனைத்து வண்டிகளிலும் பாஸ்டேக் அட்டை நிச்சயம் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் வரை எப்போதும் சுங்கச்சாவடிகள் என்றாலே மக்களுக்கு எரிச்சல் தான். மேலும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நூற்றுக்கணக்கில்… Read more: சுங்கச்சாவடியின் பயன்கள்