பழைய பொக்கிஷ சினிமா
1967 ல் வெளியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்.
1967 ல் சஸ்பென்ஸ் த்ரில்லரா என்று வியப்பு ஏற்படலாம்! ஆனால் இந்தப்படத்தைப் பார்த்தால் இப்படி ஒரு சஸ்பென்ஸ் படமா? என்று கண்டிப்பாக வியப்பு ஏற்படும்.
படம் துவங்கும் முதல் காட்சியில் படத்தின் இயக்குனர் , த்ரிலோகச்சந்தர் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.
“தயவு செய்து படத்தின் கதையை வெளியே சொல்ல வேண்டாம்” என்று.
இப்படி ஒரு புதுமை, தமிழ் சினிமாவில் அதுவரை நிகழ்ந்தது இல்லை.
ஏன் இப்போது வரை கூட, அது மாதிரியான த்ரில்லர் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
நடிகர் ரவிச்சந்திரன், படத்தின் கதாநாயகன் என்றாலும் படத்தின் சஸ்பென்ஸான திரைக்கதை தான் நாயகன்.
கதாநாயகன் காதலிக்கும் நாயகி ஒரு பெரிய குடும்பத்துப்பெண்.
அந்தக்குடும்பத்தில் , அவள் இருக்கும் பங்களாவில் நிகழும் தொடர்ச்சியான கொலைகள்.
அதை எப்படியாவது கண்டுபிடித்து, அடுத்த கொலையையும், தனது காதலியையும் காப்பாற்றி விட முயற்சிக்கும் நாயகன்.
ஒரு முயற்சியில் கொலைகாரனைப்பிடிக்கத் தவறி இருந்தாலும் கூட அவனது கண்களைப் பார்த்து விடுகிறார் நாயகன்.
அந்தக்கண்களை வைத்து அந்தக் கொலைகாரனைப்பிடித்தாரா?
ஏன் அவன் இத்தனை பேரை கொன்றான்?
யார் அவன்?
எப்படி இந்த பங்களா ஆட்களை குறி வைத்தான்.
எப்படி எளிதாக வந்து போகிறான்?
அந்தக் குடும்பத்தில் ஒருவனா?.
வக்கீலா? குடும்ப டாக்டரா?
அல்லது கதாநாயகனே கொலைகாரனாக இருப்பாரோ என்று நம்மைக்குழப்பி, ஒவ்வொரு காட்சியில் பீதி கிளப்பி, திக் திக் திகில் கிளம்ப, இன்னொரு கொலை நடந்து விடக்கூடாது என்று நம்மிடம் ஆர்வத்தை உருவாக்கி, நம்மை கதைக்குள் இழுத்து கட்டிப்போடும் படம்.
அற்புதமான திரைக்கதை அமைப்பு,
க்ளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸ்,
மொத்தத்தில் தமிழ் சினிமாவின் சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களின் அப்பன் என்றால் மிகையாகாது.
பழைய பொக்கிஷ சினிமா வரிசையில்
அதே கண்கள்…
ரசனையுடன் நினைவுகள்.
மேலும் ஒரு பொக்கிஷ சினிமாவை பற்றி வாசிக்க அலிபாபாவும் நாற்பது திருடர்களும்