Categories
கருத்து குட்டி கதை தற்கால நிகழ்வுகள்

இவர்கள் மட்டுமென்ன கிள்ளுக்கீரையா?

இன்று நான் கண்டு ஜீரணித்துக் கொள்ள இயலாத ஒரு சம்பவம்.

ஒரு உணவகத்திற்கு சென்று உணவுப் பொட்டலம் வாங்குவதற்காக பட்டியலை விசாரித்த்போது, அங்கே கல்லாவில் நின்றவர் , என்னிடம் சார் சார் என்று பதிலளித்து பணமும் பெற்றுக் கொண்டார்.

உணவுப் பொட்டலம் தயாராகும் முன்பு,ஒரு தேநீரோ காபியோ பருகலாம் என்று அதற்கும் ரசீதைக் கேட்டேன்.

காபிக்கு தனியாக ரசீதைத் தராதவர், வெளியே இருந்த அந்த காபி போடும் அம்மாவிடம், அலமேலு சாருக்கு ஒரு காபி போடு என்றார்.

அந்த அம்மாவுக்கு கிட்டத்தட்ட 50-60 வயது இருக்கும்.
அந்த கல்லாவில் நின்ற ஆளுக்கு 30-35 வயதிற்குள் தான் இருந்திருக்கும்.

அந்த அம்மாவை அவர் அப்படி பெயர் சொல்லி ஒருமையில் அழைத்து சாருக்கு காபி போடு என்று சொல்வது என்ன நியாயமோ புரியவில்லை..

ஒரு 25 ரூ கொடுத்து காபி வாங்கி குடிப்பவன் சார், கைநீட்டி சம்பளம் வாங்குபவர் என்றால் பெயர் சொல்லி அழைப்பதா?

முதலில் இந்தப்பழக்கம் தான் எல்லா விதமான அடக்குமுறைக்கும் அடித்தளம்.

நம்மிடம் சம்பளமே வாங்கும் ஆளாக இருந்தாலும் , செய்யும் வேலைக்கு தானே சம்பளம் வாங்குகிறார்? அவரது வயதையும், மரியாதையையும் அடமானம் வைத்தா சம்பளம் வாங்குகிறார்?

கூடவே வேலை செய்தாலும் சரி, தனக்குக் கீழே வேலை செய்தாலும் சரி, தன்னை விட வயதில் மூத்தவர்களை மரியாதையுடன் நடத்துவது சாலச் சிறந்தது.

நம் வீட்டில் உள்ள பெரியவர்களும்,, சில இடங்களில் கை நீட்டி சம்பளம் வாங்கும் நிலையில் இருக்கலாம்.
அவர்களை அவர்கள் வேலை செய்யும் இடத்தில் மரியாதைக்குறைவாக நடத்தினால் எப்படி இருக்கும்?

சிந்தித்து இந்தத் தலைமுறையாவது மாறட்டும்.