அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்ற நகைச்சுவை போல, மதுவிலக்கு, மதுஒழிப்பு, போன்ற கொள்கைகளை சமரசம் செய்துவிட்டு, இல்லை இல்லை சங்கை ஊதி மண்ணில் போட்டு புதைத்து விட்டு ஒரு பெரிய விருந்து நிகழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார்கள திராவிடப் போர்வாள்கள்.
திமுக இளைஞரணி, கட்சிக்காக என்ன என்ன செய்ய வேண்டும், கட்சிக்கு என்ன பணியாற்ற வேண்டும் என்று கிட்டத்தட்ட 4 மணிநேரம் ஆத்து ஆத்து என்று ஆத்திவிட்டு சோர்வடைந்த உள்ளங்களை பிரியாணி வித் பீர் என்ற மேல்நாட்டு பாணி விருந்தளித்து மகிழ்வித்திருக்கிறார்கள்.
நான்கு மணிநேரம் கூட்டத்தில் விரும்பியோ விரும்பாமலோ, உடன்பிறப்புகள் என்ற ரீதியில் பொழுதைக்கழித்து விட்டு, அப்பாடா, பிரியாணிய கொடுங்கடா என்று பந்தியில் உக்காந்தவர்களுக்குப் பரவசம்.
என் வயித்துல பீர வாத்தீங்கடா என்ற நவீன சினிமா வசனத்திற்கு ஏற்ப இலைக்கு இலை, ஒரு பீர் பாட்டில் பரிமாறப்பட்டது.
பீர் பாட்டிலைப் பந்தியில் பார்த்த பரவசத்தில், இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே? என்ற ரீதியில், புகைப்படங்களை எடுத்து நண்பர்களுக்குப் பகிர, அது இப்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியிருக்கிறது.
விஷயம் ஆளுங்கட்சி சார்ந்தது என்பதால் மீடயாக்களும் பந்தியில் நடந்த கதையை ஏப்பம் விட்டு விட்டார்கள்.
எங்கள கேட்பதற்கு ஆளில்லை என்ற ரீதியில் ஆளும்கட்சி நடத்திய இந்த அநியாயத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.