இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
என்ற திருக்குறளை அன்றாடம் சாமானியனும் மனதில் வைத்துக்கொண்டால் சொல்லாடல் எப்போதுமே சுகம் தான்.
சாமானியனுக்கே சொல்லாடல் அதாவது பேசும் மொழி என்பது முக்கியமானதாகி விட்டது.நாம் பேசும் வார்த்தைகளின் இனிமை தான் நம் எதிரில் இருப்பவரிடம் நமக்கான அடையாளத்தைக் காண்பிக்கும் ஒளித்திரை.
அப்படி இருக்கும் போது ஒரு மாநிலத்தின் முக்கிய பிரிவில் மந்திரி பதவி வகிக்கும் அல்லது அந்தப் பதவிக்கான தகுதியுடைய ஒரு மூத்த கட்சி உறுப்பினர் எப்படிப் பேச வேண்டும்?
ஒரு பொது மேடையில் ஏறி, முந்தின நாள் இரவில் தான் தனது சகாக்களுடன் மது அருந்தி கூத்தடித்த போது உள்வாங்கிய பலான கதைகளை எல்லாம் மேடையில், ஒலி பெருக்கியில் சத்தமாகக் கூச்சமில்லாமல் பேசுகிறார். ஒருவேளை முந்தின நாள் குடித்த போதை தெளியாமல் பேசிவிட்டாரா?
அல்லது அவர் குடிக்காத உத்தமர் என்றால் தெளிவாகத் தெரிந்தே தான் பேசியிருக்கிறாரா?
குடித்து விட்டு போதை தெளியாமல் பேசிவிட்டேன் என்று சொல்லிவிட்டால் கூட ஓரளவிற்கு மரியாதையாகப் போய் விடும்.
எல்லோரும் பழிபோடுவதைப் போல, பாவம் இந்தப்பழியும் அந்தப் பாழாய்ப்போன மது மீது விழுந்து விடும்.
ஆனால் அடுத்த கேள்வி ஒன்று எழும்.
சரக்கு டாஸ்மாக் ல வாங்கினீங்களா அல்லது தனியாரா என்று.
டாஸ்மாக் என்று சொன்னால், டாஸ்மாக் சரக்கு சரியில்லை என்று ஒரு அமைச்சரே ஒப்புக்கொண்டதாக ஆகி விடும்.
தனியாரில் வாங்கியதாகச் சொன்னாலும், அமைச்சரே டாஸ்மாக்கில் நம்பி மது அருந்துவதில்லை எனும் போது, சாமானியன் மட்டும் ஏமாளியா என்ற கேள்வியும் எழும்.
இதெல்லாம் தேவையா?
வாய் உங்களோடுதுதான், மைக்ம் ஒலிபெருக்கியும் உங்களோடது இல்லையே!
ஏற்கனவே மகளிருக்கான இலவசப் பயணத்தை ஓசி , ஓசி னு பேசி மக்களையும், கட்சித் தலைமையையும் கடுப்பேத்தினது போதாதுனு இப்ப இது வேற?அதைப்பேசும் போதே நல்ல எதிர்ப்பு வந்தது.உங்க நைனாவின் சொத்தலிருந்தா இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்று.
இவர் உபயோகிக்கிற கார்ல் இருந்து , பேசுற போன் வரைக்கும் எல்லாமே ஓசி தான். இப்படி கடுமையான எதிர்ப்பு வந்தபிறகும் மண்டையில் உரைக்கவில்லை போல.
அவர் பேசின அந்தக் கதையை நாம எழுதக்கூட தயங்குவோம் , அந்த அளவிற்கு ஒரு மத நம்பிக்கையையும், ஒரு பெண்ணைப் பற்றியும் பொதுவெளியில் அவ்வளவு விரசமாகப் பேசியிருக்கிறார்.
வேறு வழியில்லாமல் அந்தக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் இவருக்கு எதிராகப் பேசி போர்க்கொடி உயர்த்த , கட்சியும் இவர் மீது ஓரளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஒரு முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் இப்படியா நடந்து கொள்வது? இப்படியா பேசுவது?
மறைந்த முன்னாள் தேமுதிக தலைவர் , தொட்டதெற்கெல்லாம் அவரைக் கோமாளியாக்கி, சரக்கடித்து உளருகிறார் என்று சொல்லி சொல்லி அவரைக் கேவலப்படுத்திய இந்த அயோக்கிய மீடியாக்கள் இந்த் விஷயத்தைப்பற்றி பெரிதாகப் பேசலாமே?
இவர் பொன்முடியா அல்லது மண்முடியா?
இவர் முன்னாள் கல்வித்துறையா அல்லது கலவித்துறையா என்று?
இதையெல்லாம் மக்கள் தாங்கள் வாக்களிக்கும் போது சிந்திக்க வேண்டும்..
திமுக கட்சிக் காரர்கள் வேறு கட்சிக்கார்ர்கள் ஏதாவது தப்பாக பேசிவிட்டால் மட்டும் வளைத்து வளைத்து கேலி பேசுவதும், கண்டனம் தெரிவிப்பதும், தன் சுய கட்சியில் யாராவது ஏதாவது தவறு செய்தால் ஐம்புலன்களையும் அடக்கிக்கொள்வதும் நியாயமன்று.
காலடியில் விளையும் விஷச்செடிகளைத்தான் முதலில் களைய வேண்டும்..
இந்த விஷயத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இனி ஒருபோதும் யாரும், இதுமாதிரி பேசத் தயக்கத்தையும் நடுக்கம்தையும் உருவாக்க வேண்டும்.
திமுக தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளும் தருணம்.
அறிவில் சிறந்த பழனிவேல் தியாகராஜன் போன்ற ஆட்களை ஓரம் தள்ளவிட்டு தான் ஆட்சி நடத்தத் தேவையான கொத்தடிமைகளை தகுதி இல்லாமல் அமைச்சர்களாக்கி பட்டியல் தயாரித்தால் இப்படித்தான் சுடும்.
நியாயமான ஆட்சி தராத பட்சத்தில் எந்தக்கட்சியும் இங்கே நிலைக்க முடியாது
காசு வாங்கி ஓட்டுப் போடும் கலாச்சாரமும் ஒரு நாள் மாறும்.அதற்கான தூண்டுதல் தான் இதுமாதிரியான அநாகரீகமான சம்பவங்கள்.