Categories
விளையாட்டு

மட்டமான மட்டையாட்டமும், மண்ணாங்கட்டி வியூகங்களும் – சிஎஸ்கே சோதனை காலம்

இந்த முறை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா?

இதென்ன கேள்வி?

கண்டிப்பா வாய்ப்பு குறைவு தான்.

ஆமாம் சிங்கம் போல கர்ஜித்த இதே அணி இன்று பூனைகளைப் போல பம்மிக் கொண்டிருக்கிறது.

பாய்ந்தால் நல்லது தான். ஆனால் பாய்வதற்கான சூழல் தான் எப்போது அமையும் என்று தெரியவில்லை.

நாம் ஏற்கனவே முந்தைய பதிவில் (நீ ஆடு தல) பேசியிருந்த படி ஒருவரின் தோள் மீது அணியை நிற்க வைக்க நினைப்பது தவறு.

முதல் ஆட்டக்கார்களான கான்வே, ரச்சினும் ஆட்டமிழந்து விட்டால் அடுத்தடுத்து சீட்டுக்கட்டுபோல விக்கெட்டுகளை விடுவதும், பவர் ப்ளே ஆன முதல் 6 ஓவரில் கடமைக்கு 40-50 ரன்கள் அடிப்பதும், பிறகு மிடில் ஆர்டரில் வருபவர்கள், நான் மட்டும் ஏன் ரன் அடிச்சுக் கொடுக்கனும் என்ற ரீதியில் ஆடுவதும் ரசிகர்களுக்கிடையே கடும் கொந்தளிப்பைக் கிளப்பியிருக்கிறது.

இந்தக் காரணத்தினால் தான் கடைசியாகக் களமிறங்கும் தோனி மீது பழியும் அதிகமாகிறது.
ஆனால் அவரும், சிறிது முன்னர் இறங்கி ஏதாவது முயற்சி எடுக்கலாமோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அதுவும் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சென்னை மிகப்பெரிய ஏமாற்றத்தை ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களுக்கு அளித்தது.

ஓபனர்கள், 12, 4 என்ற சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கடுப்பாக்கியதும், அதன்பிறகு வந்த திரிப்பாதி டெஸ்ட் மேட்ச் போல ஆடி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதும் தாங்கிக்கொள்ள இயலாத ஒன்று. சரி அவரு அவுட் ஆயிட்டா, தூபே வருவாரு, சிக்ஸர் அடிப்பாரு என்று கணக்கிட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

அவர் அவுட் ஆகல, மூன்று முறை கேட்ச் தவறி வாய்ப்புப்பெற்ற விஜய் ஆட்டமிழந்தார்.

அவர் ஓரளவு நியாயமாக ஆடிக்கொண்டிருந்தார்.
பிறகு தூபே வந்தும் ஒன்றும் பலனில்லை.

அடுத்து திரிப்பாதி ஆட்டமிழக்க, அஸ்வின் உள்ளே வருகிறார். என்னங்க சார்?

என்ன வியூகம் இது மண்ணாங்கட்டி வியூகம்?
அஸ்வின் என்னத்த கிழிப்பாரு என்று ரசிகர்கள் கிழித்துத் தொங்கவிட்டபடியே அஸ்வின் 1 ரன்னில் அவுட்.

அடுத்து வந்த ஜடேஜா வந்த வேகத்தில் அவுட்.

சரி தோனி வருவாரு, தோல்வியில் இருந்து மீட்பாருனு யோசிச்ச ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி.
ஒரே இன்னிங்க்ஸ்ல் இரண்டாவது இம்பேக்ட் ப்ளேயர்.

ஆறு பேட்ஸ்மேன வச்சிக்கிட்டு, பேட்டிங்க்ல இம்பாக்ட் ப்ளேயர இறக்கும் அளவிற்கா வக்கத்துப் போனது இந்த அணி?

அவரு ஏதாச்சு செய்வாருனு பாத்தா, அவரும் ரசிகர்கள தான் செஞ்சாரு.

கடைசியில வேற வழியில்லாம தோனி வர, அவரும் ஒரு ரன்னில் அவுட்!

அப்போதே பெரும்பாலான ரசிகர்கள் மைதானத்தை காலி செய்து விட்டனர்.

இனி சென்னை ரசிகர்கள் பலரும் இந்த சீசனில் எந்த ஆட்டத்தையும் கண்டுகொள்ளாமல் விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

என்னங்க சிஎஸ்கே?