Categories
கருத்து நினைவுகள்

பகிர்தலின் மகிழ்ச்சி

வாழ்க்கை என்பது எங்கோ தூரத்தில் இல்லை.

திரும்பிப் பார்த்தால் நாம் இழந்த போன வார இறுதியிலும் அடுத்த வார இறுதியிலும் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது.

நண்பர்களுடன் சிறிது நேர உரையாடல்.

பழைய விஷயங்கள்.

டேய் நம்ம 4 வது பிடிக்கிறப்ப இருந்தாலே மைதிலி. இப்ப அவ புள்ள 4 வது படிக்குது டா.

நம்ம பாரு இன்னும் உட்கார்ந்து அவள யோசிச்சுட்டு இருக்கோம் என்பதில் ஆரம்பித்து, மாப்ள headmaster நம்மள அடிப் பிரிச்சாரு ஞாபகம் இருக்கா? என்ற உரையாடல்களில் பெரிய சந்தோசம் ஒளிந்திருக்கும்..

கபாலி படம் பார்க்கும் போது பாட்ஷா படம் ஊரில் பார்த்த சில பழைய ஞாபகங்கள் வந்து செல்லும்.

அதை அசை போட சில உறவுகளோ நட்புகளோ உடனிருந்தால் அதை விட என்ன சார் வேணும்?

ஞாபகம் இருக்காடா?

பாட்ஷா படம் 5 ரூ கொடுத்து பாரதமாதா தியேட்டரில் பார்த்தோம் என்ற சின்ன வசனம் கிட்டத்தட்ட 2 மணிநேரம் சந்தோசம் தரும்.

பழைய நினைவுகள் வந்து தாலாட்டும்.

இந்த இயந்திர வாழ்க்கையில், பணம் தேடும் அற்பத் தனமான வாழ்க்கையில் நாம் பணத்தை சம்பாதிக்கலாம்.

100 ரூபாய் நோட்டின் மதிப்பு 100 மட்டுமே.

அதே 100 ரூபாய்க்கு டீக்கடையில் அமர்ந்து நண்பர்களுடன் ஆளுக்கு 2 போண்டா, 4 டீ, சாப்பிட்டு, பேசும் அசைபோடும் அந்த சில நிமிடங்களின் மதிப்பு பல ஆயிரம் ரூபாய் தரும் சந்தோசத்திற்கு ஈடு.

வாங்கும் பணம் மொத்தத்தையும் செலவு செய்ய வேண்டாம்.

ஒரு குறிப்பிட்ட தொகையை சில நல்ல விஷயங்களுக்காக செலவு செய்யும் போதுதான் சம்பாதிக்கும் பணத்தின் மதிப்பு உணரப்படும்.

100 ரூபாய் மதிப்புள்ள biscuit packet ஐயும், chocolate ஐயும் வாங்கித் தனியாக சாப்பிடுவது சந்தோசம் நிச்சயம் தராது. அதே 5 ரூபாய்க்கு biscuit packet வாங்கி தெருவில் திரியும் சில நாய்களுக்கு போட்டுப் பாருங்கள்.

அந்த 5 ரூபாய்க்கு கிடைக்கும் அந்த மரியாதையும் சந்தோஷமும் 100 ரூபாய்க்கு வாங்கப்பட்ட biscuit packet லும், chocolate லும் கிடைத்திருக்காது.

வாழ்க்கை என்பது தனிப்பட்ட முறையில் தனியாளாக உருவாக்கவோ அனுபவிக்கவோ முடியாது.

பிறரிடம் பகிரும் போது தான் வாழ்க்கை முழுமை அடையும்.

அப்துல் கலாம் கூட அவரது அறிவை பிறரிடம் பகிரந்ததால் தான் அவருக்கு இன்று இவ்வளவு மரியாதை.

சுயம்பு என்று சொல்லப்படும் தானாக உருவான கடவுள் சிலைக்கு மரியாதை என்பது மற்றவர்கள் அதை கும்பிடும் போது தான்.

கடவுளுக்கே இதுதான் சார் நிலைமை.

நாம என்ன சார்?

சாதாரண மனுஷன்.

மத்தவங்களோட பகிர்ந்து வாழ்ந்து பாருங்க சார்.

வாழ்க்கையின் மதிப்பு தெரியும்!

பகிருங்கள்! நினைத்துப் பாருங்கள்! மக்களுடன் பழகுங்கள்!

அன்புடன் நினைவுகள்.