Categories
விளையாட்டு

சபாஷ் இந்திய கிரிக்கெட் அணி

சபாஷ் இந்திய கிரிக்கெட் அணி. கிரிக்கெட் பிடிக்காத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..ஆத்மார்த்தமாக இல்லாவிட்டாலும், எல்லாரும் பார்ப்பதால் நானும் பார்ப்பேன் என்றும் கூட இன்று பலரும் கிரிக்கெட் ரசிகிர்களாகி விட்டனர். மேலும் பல வகையான பொது ஜனத்தை இருக்கும் வகையில் இன்று கலர்கலரான கிரிக்கெட்டுகளும் வந்து கலைகட்டுகின்றன. எத்தனை பாஸ்ட்புட் வகை கிரிக்கெட் கள் வந்தாலும் , இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏனென்றால் 90 களின் […]

Categories
நினைவுகள்

ஒலி வழி இன்பம்- ரேடியோ 📻 நினைவுகள்

பாடல்கள். பெரும்பாலான மனிதர்களின் ஆறுதல், இன்பம், துக்க மருந்து, சோகம் தீர்க்கும் நிவாரணி என சர்வரோகிணியாக இருப்பது/ இருந்தது பாடல்கள். இன்றும் பலரும் பாடல்களை மருந்து போல, கிரியா ஊட்டியாக, சோக நிவாரணியாக கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். வளரும், வருங்கால சந்ததி தான், அதிலிருந்து சற்று விலகிப் போவதாகத் தெரிகிறது. அதாவது பாடல்களை ஒலி வடிவில் கேட்பது ஒரு சுகம். அது ஒரு ரகம். ஆனால் இப்போது ஒரு பாடல் வெளியாகும் போதே அது யூடியூப் பார்வைகளைக் […]

Categories
நினைவுகள்

தொடக்கப்பள்ளியில் சில நிமிடங்கள் – மலரும் நினைவுகள்

பள்ளிப் பருவம் அனைவருக்கும் அலாதியான ஒரு அனுபவம்தான். ஒவ்வொரு மனிதனிடமும் நாம் இந்தக் கேள்வியைக் கேட்டோமானால், பெரும்பாலானோர் சொல்லக் கூடிய பதில் இதுவாகத்தான் இருக்கும். கேள்வி: உங்கள் வாழ்வில் எந்தப்பகுதியை மீண்டும் பெற விரும்புகிறீர்கள்? பதில்: பள்ளிப் பருவம். காரணம் அதன் அனுபவமும், இன்பமும், அது கற்றுக் கொடுத்த பாடமும், நம் வாழ்வு சிறக்கப் பரிசாக வந்த நட்புகளும், அன்பான ஆசிரியர்களும் என பள்ளிப்பருவ காலத்தை விரும்புவதற்கென மிகப்பெரிய பட்டியலே இருக்கிறது. அதிலும் குறிப்பாக தொடக்கப் பள்ளிகள் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

வகுப்பறையும், ஆசிரியர்களும்

மாதா, பிதா, குரு, தெய்வம். ஒரு மனிதனுக்கு மாதா, பிதாவை அடுத்து முக்கியமானவர் அவரது குரு. ஒரு குழந்தை வளர்ந்து சமுதாயத்தில் எப்படியான ஆளாக உருவாகிறது என்பது அந்த குழந்தையின் அப்பா, அம்மாவைத் தாண்டி அதன் ஆசிரியர்களின் கைகளிலும் உள்ளது. ஆசிரியர்களால் கண்டிக்கப்படாத மாணவன் பிற்காலத்தில் காவலர்களால் கண்டிக்கப்படுவான் என்ற சொல்லாடல் உண்டு. ஒரு ஆசிரியர் என்பவர் ஒரு குழந்தையின் ஒழுக்கமான வளர்ச்சிக்கு மிக முக்கிய அடித்தளமானவர். குழந்தைகள் தனது மொத்த உழைக்கும் தருணத்தையும், அதாவது பகல் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பிஞ்சு மனதில் விதைக்கப்பட்ட நஞ்சு

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. பசுமரத்தாணி போல என்ற வாக்கியங்கள் குழந்தைப் பருவத்தில், அதாவது இளம் வயதில் கற்றலை போதிப்பதற்கான வாக்கியங்கள். அதாவது இளம் வயதில் நல்ல விஷயங்களை, வாழ்க்கைக்குத் தேவையான போதனைகளை சொல்லிக்கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அதன் விளக்கம். எப்படி குழந்தைகள் நல்ல விஷயங்களை மனதில் பதிப்பித்துக் கொள்கிறார்களோ, அதேபோல, தன்னைச் சுற்றி இருக்கும் சமூகம் காட்டும் வக்கிரங்களையும், தீயவற்றையும் கூட எளிதாக உட்கிரகித்துக் கொள்கிறார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் சுற்றத்தில் பேசப்படும் […]

Categories
இலக்கியம் தமிழ்

கம்பனின் கைவண்ணம்

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று படித்திருக்கிறோம். கம்பனின் கற்பனையையும், உவமைகளையும், படித்திறாத, பாரட்டிடாத தமிழ்ப் புலவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட கம்பனின் கவித்திறனுக்கு விளக்கமாக இன்று தினசரியில் ஒரு தலையங்கம் வாசித்தேன்.அதை எல்லோருக்கும் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அந்த கட்டுரையில் இல்லலாத சில தகவல்களையும் தேடிச் சேர்த்து இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. கம்பராமாயணத்தின் பால காண்டத்தில் கோசலை நாட்டின் வளத்தைப் பற்றிய ஒரு பாடல். பொதுவாக உறங்குதல்,அதாவது தூங்குதல் என்பது சோம்பேறித்தனமாகத்தான் உவமைப்படுத்தப்படுகிறது. அதுவும் […]

Categories
நினைவுகள்

பட்டப் பெயர்கள் – ஓர் அலசல்

பட்டப்பெயர்கள் என்றால் அது ஒரு தனி மகிழ்ச்சி தான். சிலருக்குக் கடுமையான கோபமும் கூட வரும்.ஒருவர் நம்மைப் பட்டப்பெயர் கொண்டு அழைக்கும் போது அவருக்கு நம் மீது உரிமை உண்டு, நெடுநாள் பழகிய தொடர்புண்டு என்பதை உணர முடியும். பட்டப்பெயர்கள் கேலிக்கு தான் என்றாலும் ஒரு சிலருக்கு அது கடுமையான கோபத்தை வரவழைக்கும். சத்யராஜ் நடித்த மிலிட்டரி திரைப்படத்தில் அவரை மிலிட்டரி என்ற பட்டப் பெயர் கொண்டு அழைத்தால் எப்படி கோபப் படுவாரோ, 16 வயதினிலே படத்தில் […]