சமீபத்திய மாநில நிதிநிலை அறிக்கையில் அரசு அதிகாரிகளுக்கு அவர்களே வியக்கத்தக்க வகையில் பல சலுகைகள் அள்ளி வழங்கப்பட்டிருந்தது. அரசு வேலையில் இருப்பவர்கள் உயிர் துறக்கும் பட்சத்தில் மகளுக்கு திருமண செலவுக்கு 5 லட்சம், 1 கோடி ரூபாய்க்கு காப்பீடு என பிரம்மாண்ட சலுகைகள் வழங்கப்பட்டன. தனியார் ஊழியர்கள் பலரும் நிரந்தரமான வேலைச்சூழல் மற்றும் நியாயமான சம்பளம் என்பனவற்றிற்கே திண்டாடும் போது அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இத்தகைய சலுகை கொடுப்பதை இங்கே யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இதனால் […]
Month: March 2025

எப்படி ஆரம்பிக்கலாம் என்று தான் புரியவில்லை.யாரைத் திட்டுவது, யாரைப் பாராட்டுவது என்பதும் புரியவில்லை. ஆனால் நாமெல்லாம் முட்டாள்கள், வடிகட்டிய முட்டாள்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.நேற்று காலை எனது உறவினரிடமிருந்து ஒரு புலனச் செய்தி. அதில் ஒரு புகைப்படம், இது என்ன என்று தெரிகிறதா என்ற கேள்வியோடு. இதென்ன தெரியாதா?சொடக்குத் தக்காளி, சில பேருக்கு மணத்தக்காளி என்றால் புரியும். ஆனால் அது அடைபட்டிருந்த டப்பாவையும், அதன்மீது ஒட்டப்பட்டிருந்த விலையையும் பார்க்கும் போதுதான் பகீரென இருந்த்து. தோராயமாக ஒரு பத்து […]

அறிவை, அன்பைப் பகிர மொழி அவசியமில்லை.ஒரு செயலோ, சைகையோ அல்லது ஒரு புன்னகையோ கூடப் போதும்தான். ஐந்தறிவு கொண்ட ஜீவன்களிடம் நாமென்ன பேசிப் பழகியா அன்பைப் பகிர்கிறோம்? ஐந்தறிவென்ன நம்மில் பலர் உயிர் இல்லாத வாகனங்கள் உட்பட சில பொருட்களின் மீதும் கூட பேரன்பு கொண்டிருக்கலாம். இவற்றுக்கெல்லாம் மொழி அவசியமில்லை. உலகில் மொழி வரும் முன்பே, அன்பும் அறிவும் பகிரப்பட்டு தான் இருந்திருக்கிறது. கும்மிடிப்பூண்டி தாண்டினால் சோறு கிடைக்காது, ஏக் சாய் தேதோ என ஹிந்தி பேசத் […]
பெருசு- ரொம்ப தினுசு- திரை விமர்சனம்

அப்பா – ஒரு ஒப்பற்ற சொல். எத்தனை எத்தனை கோபம், விமர்சனம், மனஸ்தாபம், சண்டைகள், வார்த்தை முரண்பாடுகள், சிந்தனை வேறுபாடுகள், தகராறு என இருந்தாலும், எத்தனை வயது காலனமானாலும் அப்பா அப்பா தான். அப்பாவிடம் பொதுவாக பல பிள்ளைகளும் தேவையில்லாமல் கோவித்துக் கொண்டு விரோதியாக பாவித்து ஒதுக்கி விடுவார்கள். கவிஞர் வைரமுத்து கூட தனது தந்தையின் இறப்புக்குப் பின்னரே, அவர் அப்பாவின் அருமையை உணர்ந்தார். அது மாதிரி அப்பாவின் அருமை உணர்த்தும் ஓரிரு காட்சிகள் இந்தப் படத்தில் […]

குழம்ப வேண்டாம். நிறுத்துமிடமில்லாமல் இல்லாமல் கார் வாங்கக் கூடாது என்ற அரசாங்க நடவடிக்கை பற்றிய சிந்தனை. சமீபத்திய பகட்டுக் கட்டுரையில் நாம் பேசிய பல விஷயங்களைப் போல இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. கார் வாங்குறீங்களே?அத நிறுத்த இடமிருக்கா? இந்தக் கேள்வியை அது வரை யாருமே கேட்டதில்லை. இது வரை மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவ்வளவு தான்.உங்களுக்கு சிலர் எவளோ, பான் கார்டு , ஆதார் கார்டு கொடுங்க, 0 டவுன் பேமண்ட்ல அடுத்த மாசம் கார் […]
பகட்டா, உயிரா? சிந்திப்போமா?

வரவு எட்டணா, செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் குந்தணா என்ற பாடலையும், கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல என்ற பாடல்கள் வெளிவந்து பல காலம் ஆகி விட்டதால் நாமும் அதை மறந்து விட்டோம். சிக்கனம் என்ற வார்த்தை கிட்டத்தட்ட கஞ்சன் என்ற ரீதியில் கேலிக்குரிய வார்த்தையாகவே மாறிவிட்டது. ஒருவன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதைப் போல, எவ்வளவு செலவு செய்கிறான் என்பதிலும் பகட்டுப் போட்டி வந்து விட்டது. முன்பு எதிர் வீடு […]

இரவில் தூங்கும் முன் கதை சொல்லி, அறிவுரை சொல்லி, வியாக்கியானங்கள் பேசி தூங்க வைக்கும் தாத்தா பாட்டிகள் இங்கே இப்போது இல்லை. தாத்தாவும் ஃபேஸ்புக்கில் ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார், பாட்டியும் கூட சன் டிவியிலோ, விஜய் டிவியிலோ சீரியல் பார்த்துக்கொண்டிருக்கிறது. பிள்ளைகள் ஆங்ரி பேர்டாகவோ, டெம்பிள் ரன்னராகவோ மாறி ஒரு மாதிரியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கதையை வாய் வழியாகச் சொல்லி செவி வழியாகக் கேட்ட போது குழந்தைகளிடையே இருந்த சிந்திக்கும், உருவகப்படுத்தும், கவனிக்கும் திறமை இப்போது […]

சொந்த ஊர் எப்போதும் சொர்க்கம் தான்.ஆனால் சில யதார்த்தம் கசக்கிறது. மருந்து போலத்தான் என்றாலும் கசப்பு கசப்பு தான். ஓடி, ஆடி புழுதியில் உருண்ட அதே தெருக்கள்… புழுதி இல்லை இப்போது, சிமெண்ட் சாலைகள். மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் ஏதோ ஒரு வசதியான வீட்டுத் திண்ணையில் தெருவிலுள்ள மொத்த கும்பலும் விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்போம். மின்சாரம் வந்து தெரு விளக்குகள் ஒளிர்ந்ததும் ஊரைப் பிளக்கும் கூப்பாடு போடுவோம். கரண்டு வந்திருச்சே, கரண்டு வந்திருச்சே என்று […]
பறவைகளுக்கு நீர் வைக்கலாமே?

மனிதா நான் பறவை. என்ன பறவை என்று கேட்கிறாயா? என் பெயர் சொன்னால் மட்டும் கண்டுபிடித்து விடுவாயா? காகம், குருவி, புறா, கழுகு போன்ற சில பறவைகள் தான் உனக்குப் பரிச்சயம். ஏன் அது கூடத் தெரியாமல் சிலர் இருக்கலாம். எங்களுள் ஆயிரக்கணக்கான இனம் உண்டு. எங்கோ மறைந்து விட்டன என் இனங்கள். ஆமாம் நாங்களும் இங்கே இந்த பொதுப்படையான பூமியிலே நிம்மதியாகப் பறந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் தான் இருந்தோம். ஏதேதோ மாற்றங்கள் எங்கள் இனங்களை […]
கொங்கு நாட்டில் ஓர் குதூகலப் பயணம்

பயணம் என்பது மனிதனைப் பக்குவப்படுத்தும் காரணி. ஒரு நல்ல சிந்தனை வேண்டுமென்றால் நல்ல புத்தகத்தை வாசியுங்கள். புத்தகம் வாசித்துக் கிடைக்கும் சிந்தனையோடு, நல்ல பண்புகளும் வேண்டுமென்றால் ஒரு அனுபவஸ்தரிடம் பேசுங்கள். ஒரு அனுபவஸ்தரிடம் பேசும் போது கிடைக்கும் விஷயங்களை நேரடியாகப் பெற விரும்பினால் பயணம் சென்று பாருங்கள். ஒரு பயணம் என்பது உங்களுக்கு, பக்குவத்தையும், பண்புகளையும், முன்யோசனைகளையும், அனுபவத்தையும் தரும். சில நேரங்களில் அது எதிர்பாராத மறக்க முடியாத நல்ல அனுபவங்களாக அமையலாம். மேலும் பயணம் உங்களுக்குப் […]