வாழ்வில் சில நேரங்களில் நாம் யோசிக்காமல், ஆராயாமல் செய்யும் சில காரியத்தால் மறக்க முடியாத கசப்பான அனுபவங்களைப் பாடமாகப் பெறுவோம்.
அப்படி ஒரு சம்பவம். 1 June 2022 ல் நடந்தது. இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது.
சென்னையிலிருந்து கோவைக்கு செல்வதற்காக, கோவைக்கு நன்கு விடிந்து தாமதமாகப் போனால் போதுமென்று சென்னையில் இரவு 11.15 மணிக்குப் புறப்படும் ரயிலில் இரண்டாம் படுக்கை வசதி இருக்கை ஒன்றை முன்பதிவு செய்துவிட்டேன்.
திங்கட்கிழமை IRCTC குறுந்தகவலைக் கண்டு அதிர்ந்தேன். “Chart has been prepared”. என்னடா இது புதன்கிழமை ரயிலுக்கு திங்கட்கிழமையே பட்டியல் தயாராகி விட்டதா என்று அதிர்ந்து ஆராய்ந்தேன்.
அப்போது தான் தெரிந்தது, அது பரவ்னி என்ற பீகாரின் வட கடைசி முனையிலிருந்து கேரளாவிலுள்ள எர்ணாகுளம் வரை செல்லும், 3 இரவு, 2 பகல், ஒரு முற்பகல் பயணிக்கும் ரயில் என்று.
அடக்கன்றாவியே கழிவறை எல்லாம் எப்படி இருக்குமோ? நம்ம இருக்கையில் வட இந்திய நண்பர்கள் பான்பராக் போட்டு துப்பி இருப்பானுங்களோ என்ற சந்தேகத்துடன் சென்னை சென்ட்ரல் அடைந்தேன். வண்டி ஒரு மணி நேரம் லேட் என்ற கடுப்பைத்தாண்டி, இன்னொரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. S1 முதல் S6 வரை, எந்தப்பெட்டியிலும் முன்பதிவு செய்தவர்களுக்கு இடமில்லை.
இருக்கை இல்லை.
72 பேர் படுத்து வரவேண்டிய முன்பதிவு பெட்டிகள் ஒவ்வொன்றிலும் கிட்டதட்ட 300 பேர் இருக்கிறார்கள்.
உள்ளே ஏறி நமது இருக்கை நிலவரத்தைப்பார்க்கலாம் என்றால், என்னுடைய S1 பெட்டியில் ஏற முடியாத படி வாசலில் துண்டு கட்டி மறித்திருக்கிறார்கள். படியில் அமர்ந்து பயணம் செய்பவர்களுக்கான பாதுகாப்பாம்.
அதில்லாமல் அனைவரும் சட்டை இல்லாமல், பணியன் இல்லாமல் வெற்று உடம்போடு வீடுகளில் இருப்பது போல ரொம்ப யதார்த்தமாக இருக்கிறார்கள். 2 நாள் குளிக்காம வாராங்கனு பெட்டி பக்கத்துல போகும் போதே உணர முடிகிறது.
இதுல அவனுங்க கூட எப்படி பயணம் பண்ண? குடும்பமாக வருபவர்கள் பற்றிய நிலையை யோசித்திப்பாருங்களேன்.
வேறு வழியில்லாமல் போலீஸாரிடம் புகார் செய்த பாலக்காடு பயணிகளுக்கு (மூன்று பயணிகள்), உக்கார வேணா உங்க சீட்ட விட சொல்றேம்மா, அவுங்கள மொத்தமா எழுப்பி விடுறதனா கேக்க மாட்டானுங்க என்று ரயில்வே போலீஸும் கைவிரித்து விட்டது.
ரயிலின் அலங்கோலத்தை போட்டோ எடுத்துவிட்டு அவர்கள் பேருந்தில் போகிறோம் என்று புறப்பட்டு விட்டார்கள்.
மணியோ 12.10 எனக்கு வெளியே சென்று பேருந்தில் ஏறுவதற்கெல்லாம் மனமில்லை.
மூன்றாம் ஏசி பெட்டியில் ஏறி பாத்ரூம் அருகே நின்று , அமர்ந்தோ பயணிக்கலாம் என ஏறினேன்.
அப்போதும் அதிர்ச்சி, வடக்கனுங்க, குப்பை போட, பாத்ரூம் போக 3 நாளா அங்க இருந்ததை எல்லாம் நாஸ்தி செய்துவிட்டு, மூன்றாம் ஏசி பாத்ரூம்களையும், குப்பைத்தொட்டிகளையும் ஒரு வழி செய்திருந்தார்கள்.
துர்நாற்றம், ஆனாலும் பரவால என வழியில்லாமல் குப்பைத்தொட்டி அருகே அமர்ந்து பயணித்த என்னிடம் டிடீஆர் வந்து கம்பு சுழற்றினார்.
உங்க கோச்சுக்கு போகாம இங்க ஏன் சார் உட்கார்ந்து இருக்கீங்கனு.
இருந்த கடுப்பில் அவரை அடித்திருக்கலாமா? அவர் அந்த மாதிரி கேட்டதற்கு?
அடுத்த ஸ்டேன்ஷன்ல வண்டிய நிறுத்துங்க சார்.
போலீஸ கூப்புடுங்க. பேசிக்கலாம் என்று எனது உரையை முடித்து விட்டேன். வடக்கனுங்களிடம் மூடிக்கொண்டதைப்போல, என்னிடமும் ஏதும் பேசாமல் மூடிக்கொண்டு போயிட்டார்.
இந்த தமிழ்காரனுங்க, தமிழ்காரனுங்க கிட்டதான் ரூல்ஸ் லாம் பேசி கம்பு சுத்துவாங்களோ?
அப்புறம் ஒருத்தன் வெளில பையோட வந்தான்.
இந்திகாரன் தான். நீ இறங்கப்போறியா உன் சீட்டு நம்பர் என்னனு கேட்டு அவன் சீட்டுல போயி படுத்தேன்.
ஆனாலும் அது சட்டப்படி தவறு தான்.
இரண்டாம் வகுப்பு இருக்கை முன்பதிவு செய்துவிட்டு, மூன்றாம் வகுப்பு ஏசி பயணம்.
ஆனால் என்னுடைய இருக்கையை எனக்கு ஒப்படைக்க இயலாத கையாலாகாத இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது. தவிர விடியக்காலை நெருங்குவதால் பாத்ரூம் போகும் கூட்டமும் அதிகமாகி விட்டது.
டிடிஆர் வந்தா இதுக்கு தனியா காசு கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டியது தான்.
இதுபோல கசப்பான சம்பவங்கள் இன்றும் தொடர்கிறது என்பதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது.
நினைவுகளுடன்…