Categories
விளையாட்டு

சபாஷ் இந்திய கிரிக்கெட் அணி

சபாஷ் இந்திய கிரிக்கெட் அணி.

கிரிக்கெட் பிடிக்காத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..
ஆத்மார்த்தமாக இல்லாவிட்டாலும், எல்லாரும் பார்ப்பதால் நானும் பார்ப்பேன் என்றும் கூட இன்று பலரும் கிரிக்கெட் ரசிகிர்களாகி விட்டனர்.

மேலும் பல வகையான பொது ஜனத்தை இருக்கும் வகையில் இன்று கலர்கலரான கிரிக்கெட்டுகளும் வந்து கலைகட்டுகின்றன.

எத்தனை பாஸ்ட்புட் வகை கிரிக்கெட் கள் வந்தாலும் , இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

ஏனென்றால் 90 களின் குழந்தைகளும் பெரியவர்களும், சச்சினையும், கங்குலியையும், டிராவிட்டையும் ரசித்த கிரிக்கெட் வடிவம் அது.

அந்த வடிவிலான கிரிக்கெட் போட்டியான சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரை வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பெருமகிழ்ச்சியை விதைத்திருக்கிறது ரோஹித் தலைமையிலான இந்த அணி.

இந்திய அணி இந்தத் தொடர் முழுக்க தோல்வியே காணாத அணியாக வென்றிருப்பது இன்னொரு சிறப்பு.
இந்தத் தொடர் மட்டுமல்ல, இதற்கு முன்பு 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடரையும் இதே விதத்தில் வென்றிருக்கிறது.
அதற்கு முன்பு நிகழ்ந்த 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டியைத் தவிர்த்து மீதி அனைத்து போட்டிகளிலும் வென்று தன்னை ஒரு ஜாம்பவானாக நிரூபித்திருக்கிறது.

இந்தத் தொடரில் ரோஹித்- கோலி, சுப்மன் கில் என்று நம்பியிராமல், ஆறாவதாகக் களமிறங்கிய ராகுல் வரை, நம்பிக்கையோடு, எங்களாலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும், அணியை வெல்ல வைக்க முடியும் என்று நிரூபித்திருப்பது சிறப்பு.
அதிலும் ஸ்ரேயஸ் ஐயர்- அக்சர் படேல் கூட்டணி இரண்டு போட்டிகளில் , ஆட்டத்தின் மோசமான போக்கை மாற்றி அமைத்து வெற்றிக்கு வழிவகுத்தது..
பழைய கங்குலி தலைமையிலான அணியில்,சேவாக், சச்சின் ,கங்குலி, அவுட் ஆகிட்டாலே டிவிய ஆப் பண்ணு விடும் நிலை இருந்த்து.

டிராவிட்,யுவராஜ் வந்த பிறகு ஒரு சிறிய நம்பிக்கை பிறந்தது.

இப்போது இருக்கும் இந்த அணி அந்த ஓட்டையை சரிசெய்திருக்கிறது

ஓபனிங் ஆடத்தகுதியான ராகுல் ஆறாவது இடத்தில் தக்க வைக்கப்பட்டு, தான் அந்த இடத்தில் தக்க வைக்கப்பட்டது அணிக்கு எந்த அளவிற்கு பலம் என்பதை நிரூபித்திருக்கிறார்.

சிறிது காலம் முன்பு வரை பெரிதும் சோபிக்காத ஸ்ரேயஸ் ஐயர், அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக மாறி விட்டார்..
அக்சர் படேலுக்கென ஒரு இடம் நிரந்தரமாக்கப்படும் அளவிற்கு இந்தத் தொடரில் அவர் தன்னை நிரூபித்திருக்கிறார்.

அடுத்தது ஹர்திக் பாண்டியா.

எத்தனை எத்தனை அவப்பெயர்கள் வந்தாலும் துடைத்து எறிந்து விட்டு நான் யாரென்று தெரிகிறதா,?
என்று சட்டை பட்டனை அவிழ்த்து விட்டு கேஷுவல் வாக் செய்திருக்கிறார்.

இதனைத் தாண்டி பும்ரா என்ற புயல் இல்லலாத போதும், வருண் சக்ர்வர்த்தி குல்தீப் யாதவ் என்ற சுழல் எதிரணிகளைப் பதம் பார்த்திருக்கிறது.

மொத்தத்தில் ஒரு அணியாகக் கிடைத்த ஆக்ரோஷமான வெற்றி.

சபாஷ் இந்திய கிரிக்கெட் அணி.
அன்புடன் நினைவுகள்.