தமிழக வெற்றிக் கழகம்.
கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சியில் மாறி மாறி அமர்ந்த திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு பெரிய சக்தி உருவெடுக்கவில்லை.
நாம் தமிழர் கட்சி ஈழப்போரின் முடிவில் பெரிதாகக் உருவெடுக்கத் துவங்கியது. ஆனால்
அந்தகக்கட்சி அதன்பிறகு பல குழப்பங்களைச் செய்து, கொள்கை ரீதியாகக் குழப்பமில்லாமல் மக்களைச் சென்றடைந்து அவர்களின் மனதை வெல்வதில் சோடையாகத்தான் உள்ளனர்.
திராவிடக் கொள்கைகள் தமிழகத்தில் கோலோச்சி மக்களின் மனதையும் வென்று விட்டதால், மாற்றுக் கொள்கைகள் கொண்ட பாஜக, காங்கிரஸ் போன்ற மாற்றுக் கொள்கைகளை உடைய கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
இதையெல்லாம் அறிந்து கொண்டு, கட்சிக் கொள்கைகளை ஈயம் பூசுவது போலவும், பூசாதது போலவும் திராவிடக் கொள்கை, தமிழ் மாநில சுயாட்சி, இருமொழிக் கல்விக் கொள்கை என்று வடிவமைத்து, மக்களின் மனதைக் கவரும் விதமாக கட்சித் துவக்க விழாவில் சிங்கம் போல கர்ஜித்த மக்களின் அன்புப் பிள்ளை விஜய் அடுத்த தேர்தலில் பெருவெற்றி பெறுவார் என்ற பேச்சுகள் ஆரம்பித்த பிறகு, பல பின்னடைவுகள்.
அவருடைய ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல் செயல்பாடு துவங்கி அவரது கட்சிக்காரர்கள் செய்யும் லூட்டி வரை, தலைதூக்கும் முன்பே அவரைத் தலைகுணியச் செய்கிறது.
சமீபத்தில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் அவரது கட்சியினர் சிலர் குடித்து விட்டு நோன்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாக வந்த புகாரில் துவங்கி,விழுப்புரம் மாவட்டத்தில் கட்சியில் உண்மையாக உழைத்த தொண்டர்களை விடுத்து, காசு வாங்கிக் கொண்டு பதவிகள் தரப்படுகிறது என்ற பூதாகரத் தகவல் வரை ஒவ்வொரு நிகழ்வும் இவர்களுக்குப் பின்னடைவு தான்.
இன்றைய சக்திவாய்ந்த ஊடக நாடகங்களுக்கு நடுவே, நாம் நல்லவனாக இருந்தாலே கோமாளி ஆக்கி விடுகிறார்கள்.
இதில் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் பேசுவதெல்லாம் கோமாளி மாதிரியே பேசினால் ஊடகங்களுக்கு சொல்லியா தர வேண்டும்?
என் தலைவனப் பாக்க லீவு தராட்டி வேலையே வேணாம்னு சொல்லுங்க என்பதில் துவங்கி, என் தலைவன் படம் போட்ட பலூன் எனக்கு வேணும் என்பது வரை அவரது பேச்சுகளில் பல கோமாளித்தனம்.கட்சிப் பொதுக்குழுவில் பேசும் பேச்சுகளா இது?
இப்படி தெளிவில்லாம கோமாளித்தனமான ஆட்களை வைத்துக் கொண்டு, எப்படி சாதிக்கப் போகிறார் என்று பார்க்கலாம்.